பக்கங்கள்

சனி, 19 ஏப்ரல், 2014

நினைவுயாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்

நினைவுயாவும் உங்கள் மீது யாரசூலல்லாஹ்
நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ்
அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி
அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ்
         (-நினைவு)

மதீனா நகர்க் கொருநாள் நான்வருவேன்
மன்னவர் பூவடி கண்ணால் தொடுவேன்
நதியென அருட்கடலில் நான் விழுவேன்
நபியே கதியென்றங்கு நான் அழுவேன்
எந்தன் மீது உங்கள் பார்வை பட்டநேரமே
பிந்திடாமல் பிரிய வேண்டும் இந்த ரூஹுமே !
                (-நினைவு)

காணும் வரையில் கண்கள் தூங்காது !
காதலில் எந்த நெஞ்சம் ஏங்காது !
வானில்லாமல் நிலம் வாழாது
வாடல் தொடர உள்ளம் தாங்காது !
ஒளியைத் தேடும் விட்டிலாக நானும் மாறுவேன்
உம்மத்தென்ற பெருமையோடு வந்து சேருவேன் !
                 (-நினைவு)

உலகில் வாழவந்த உயிர்கள் யாவும்
உம்மி ரசூலே உங்கள் புகழ்பாடும் !
அருளாய் வந்திலங்கும் மறைமூலம்
அல்லாஹு போற்றும் மனித அனுகூலம் !
இரண்டு வாழ்வின் பொருளைச் சொன்ன இதயதீபமே
இறுதித் தூதராகவந்த இறையின் ஞானமே !
          (-நினைவு)

வெள்ளி, 28 மார்ச், 2014

அழிவு நாளின் அடையாளங்கள்

மகளின் தயவில் தாய்
أَنْ تَلِدَ الْأَمَةُ رَبَّتَهَا، وَأَنْ تَرَى الْحُفَاةَ الْعُرَاةَ الْعَالَةَ أَصْحَابَ الشَّاءِ يَتَطَاوَلُونَ فِي الْبُنْيَانِ 
ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பது. அதாவது தாய் மகளின் தயவில் வாழும் அவல நிலை ஏற்படுவது
நூல்: புகாரி 4777, 50

பின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்
'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, 
ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி
வாழ்வார்கள் ( புகாரி)
குடிசைகள் கோபுரமாகும்

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَطَاوَلَ النَّاسُ بِالْبُنْيَانِ


இன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.
இதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
குறிப்பிட்டார்கள்.
நூல் : புகாரி 7121
விபச்சாரமும், மதுப்பழக்கமும் பெருகும்

 مِنْ أَشْرَاطِ السَّاعَةِ، أَنْ يَقِلَّ الْعِلْمُ، وَيَظْهَرَ الْجَهْلُ، وَيَظْهَرَ الزِّنَا،


யுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் (புகாரி 80, 81, 5577, 6808, 5231)


கொலைகள் பெருகுதல்

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَيَكْثُرَ الْهَرْجُ "، قِيلَ: وَمَا الْهَرْجُ؟ قَالَ: " الْقَتْلُ "


கொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் (புகாரி 85, 1036, 6037, 7061)


தகுதியற்றவர்களிடம் பொறுப்பு

 فَإِذَا ضُيِّعَتِ الْأَمَانَةُ فَانْتَظِرِ السَّاعَةَ، قَالَ: كَيْفَ إِضَاعَتُهَا؟ قَالَ: إِذَا وُسِّدَ الْأَمْرُ إِلَى غَيْرِ أَهْلِهِ فَانْتَظِرِ السَّاعَةَ "


அமானிதம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்
நாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று ஒருவர்
கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு
காரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று
விடையளித்தார்கள்.
நூல் : புகாரி 59, 6496

பாலை வனம் சோலை வனமாகும்

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي 

செல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்
கிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக மாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது
நூல் : முஸ்லிம் 1681

காலம் சுருங்குதல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونُ السَّنَةُ كَالشَّهْرِ، وَالشَّهْرُ كَالْجُمُعَةِ، وَتَكُونُ الْجُمُعَةُ كَالْيَوْمِ، وَيَكُونُ الْيَوْمُ كَالسَّاعَةِ، وَتَكُونُ السَّاعَةُ كَالضَّرَمَةِ بِالنَّارِ
காலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)ஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும். (இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒருவிநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டிய அடையாளம்.
நூல் : திர்மிதீ 2254)


நில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ۔۔۔

 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَرَوْا عَشْرَ آيَاتٍ: طُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَيَأْجُوجَ وَمَأْجُوجَ، وَالدَّابَّةَ، وَثَلَاثَةَ  خُسُوفٍ: خَسْفٍ بِالْمَشْرِقِ، وَخَسْفٌ بِالْمَغْرِبِ، وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ، وَنَارٌ تَخْرُجُ مِنْ قَعْرِ عَدَنَ تَسُوقُ النَّاسَ أَوْ تَحْشُرُ النَّاسَ، فَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا، وَتَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا

பள்ளிவாசல்களை வைத்து பெருமையடிப்பது
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَبَاهَى النَّاسُ فِي الْمَسَاجِدِ 
 ( நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,
12079, 12925, 13509.)

நெருக்கமான கடை வீதிகள்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْكَذِبُ، وَيَتَقَارَبَ الْأَسْوَاقُ
கடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்
நூல்: அஹ்மத் 10306

பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தல்
 وَتَكْثُرَ النِّسَاءُ، وَيَقِلَّ الرِّجَالُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ 
பெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்
அடையாளமாகும் 
நூல்: புகாரி 81, 5231, 5577, 6808

ஆடை அணிந்தும் நிர்வாணம்
رب كاسيات عاريات
ஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்
தோன்றுவார்கள் என்பதும் நபிமொழியாகும்.
நூல் : முஸ்லிம் 3971, 5098

உயிரற்ற பொருட்கள் பேசுவது
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ، وَيُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ، وَشِرَاكُ نَعْلِهِ، وَيُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ

விலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு
வாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது 
நூல்: அஹ்மத் 11365

பேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ قَوْمٌ يَأْكُلُونَ بِأَلْسِنَتِهِمْ، كَمَا يَأْكُلُ الْبَقَرُ بِأَلْسِنَتِهَا 
தங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்வரை யுக முடிவு நாள் ஏற்படாது .
நூல்: அஹ்மத் 1511

சாவதற்கு ஆசைப்படுதல்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ، فَيَقُولَ: يَا لَيْتَنِي مَكَانَهُ،


இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல் செத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது (புகாரி 7115, 7121)

இறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَنْبَعِثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبٌ مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ
ஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது ( புகாரி 3609, 7121)

முந்தைய சமுதாயத்தைக் காப்பியடித்தல்
'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்
பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்
நீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது
யூதர்களையும், கிறித்தவர்களையுமா?'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்
குறிப்பிடுகிறேன்)'' என்று கூறினார்கள்.( புகாரி 3456)

யூதர்களுடன் மாபெரும் யுத்தம்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى، يَقُولَ: الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ 


யூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த
யுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்
ஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும் .( புகாரி 2926)

கஃபா ஆலயம் சேதப்படுத்தப்படுதல்
கஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள் சிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்' ( புகாரி 5179)

யூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்
யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்
காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி. (புகாரி 7119)

கஹ்தான் இன மன்னரின் ஆட்சி
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ "


(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்
மக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது 
(புகாரி 3517, 7117)

செல்வம் பெருகும்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ، فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِي


செல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது (۔புகாரி 1036, 1412, 7121)
ஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்
கொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று
எனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான். ( புகாரி 1424)

மாபெரும் யுத்தம்
 لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ دَعْوَاهُمَا وَاحِدَةٌ 


இரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே வாதத்தையே எடுத்து வைப்பார்கள். ( புகாரி 3609, 7121, 6936)

பைத்துல் முகத்தஸ் வெற்றி

யுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்!


1. எனது மரணம்


2. பைத்துல் முகத்தஸ் வெற்றி


3. கொத்து கொத்தாக மரணம்


4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்
திருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு


5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்


6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.
அவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12ஆயிரம் பேர் இருப்பார்கள்.  புகாரி 3176

மதீனா தூய்மையடைதல்
துருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்
தன்னிடம் உள்ள தீயவர்களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது
(நூல் : முஸ்லிம் 2451)

அன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை
யுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்
இம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும (முஸ்லிம் 3546)

மாபெரும் பத்து அடையாளங்கள்
இவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து விஷயங்களைக் குறிப்பிட்டார்கள்.


1 - புகை மூட்டம்


2 - தஜ்ஜால்


3 - (அதிசயப்) பிராணி


4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது


5 - ஈஸா (அலை) இறங்கி வருவது


6 - யஃஜுஜ், மஃஜுஜ்


7 - கிழக்கே ஒரு பூகம்பம்


8 - மேற்கே ஒரு பூகம்பம்


9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்


10 - ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்
சென்று ஒன்று சேர்த்தல்
ஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது 
நூல்: முஸ்லிம் 5162.

அல்லாஹ் நம் அனைவரையும் இந்த சோதனைகளிலிருந்து பாதுகாப்பானாக. ஆமீன்!

எகிப்தில் கடல் பிளந்த அதிசியம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ கொள்கையை தன் சமுதாயத்திற்கு எடுத்து சொல்லியவர்கள் நபி மூஸா(அலை) அவர்கள்.இந்த சத்திய பிரசாரத்தை எடுத்து சொல்லும் பொழுது தன் சமுதாய மக்களாலையே பெரும் இன்னல்களையும், இடையூறுகளையும் சந்தித்தார்கள்.இஸ்லாமிய லட்சிய கொள்ளகை உள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் வாழ்வு ஒரு முன் உதாரணமாகும்.


இறுமாப்பும்,ஓர் இறை கொள்கையும்:

ஓர் இறை கோட்பாடு எங்கே நசுக்கப்படுகிறதோ அங்கேயே பீரிட்டு கிளம்பக்கூடிய தன்மை இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு.(வேறு சில கொள்கை இப்படி தோன்றினாலும் தோன்றிய வேகத்தில் மண்ணுக்கு அடியில் புதையுண்டு செல்வதை கண் கூடாக நாம் காண முடிகிறது).

மூஸா அலை அவர்கள் தன்னை வளர்த்த ஃபிர்அவ்னிடம் இந்த ஓர் இறை கொள்கையை எடுத்து சொன்ன பொழுது பெரும் இன்னல்களுக்கு ஆளானார்கள்.

*யார் இந்த ஃபிர்அவ்ன்? 

ஃபிர்அவ்ன் (Pharaoh) அமாலிக்கா (அமலேக்கிய) அரசப் பரம்பரையில் வந்த 19 வது எகிப்து நாட்டு அரசனின் புனைபெயர். கிப்தீ (Coptic) குலத்தில் பிறந்த இவன் கி.மு. 15 ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்ரவேலர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவந்தான். வரலாற்றாசிரியர்கள் இவனை இரண்டாம் ரம்சேஸ் (Ramses II) என்று குறிப்பிடுகின்றனர்.

ஃபிர்அவ்ன் அரசன் என்பதையும் தாண்டி தன்னை "நான் தான் உயர்வான இறைவன்"என்று பெருமை அடித்து கொண்டிருந்தான்.இந்த பெருமையின் காரணமாக தன்னை பெரும் பெரும் சிலைகளாக வடித்து மக்களை வணங்க சொன்னான்.இப்படிபட்டவனிடம் தான் தூய ஓர் இறை கொள்கையை  மூஸா (அலை) அவர்கள் சொன்னார்கள்.

அவனின் செவிப்பறையில் அந்த அழைப்பு விழுந்ததே தவிர செவியின் ஊடாக உட்சென்று மூளையை அடையவில்லை.சத்திய கொள்கையை நபி மூஸா(அலை) அவர்கள் எவ்வளவோ முறை அவனிடம் எடுத்து சொல்லியும் பயனளிக்கவில்லை.

இந்த பிரசாரங்கள் ஃபிர்அவ்னுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.பூமியை படைத்து,அதன் அதன் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்பவன் அல்லாஹ் என்ற ஓர் இறைவான் தான் என்று மூஸா சொல்லியதோடு மட்டுமல்லாமல்,நீ இறைவன் இல்லை,உன்னை வணங்க மாட்டேன் என்றும் எவ்வளவு தைரியமாக என் முன்னே சொல்கிறார்.இப்படியே இதை விட்டுவைத்தால் தனக்கும்,தன் புகழுக்கும் ஆபத்து என்றும்,இவரையும் இவரை பின் பற்றும் சொற்ப கூட்டத்தையும் முழுவதுமாக ஒழித்துகட்டினால் தான் தனக்கு நிம்மதி என்று உறுதி கொண்டான்.

ஆணவமும் அழிவும்:

தன் படை வீரர்களை அழைத்து கொண்டு ஆணவத்துடன் நபி மூஸா (அலை)அவர்களையும் அவர்களின் உம்மத்களையும் அழிக்க புறப்பட்டான் ஃபிர்அவ்ன்.

தன்னையும் தன் சமுதாயத்தையும் காப்பற்றிக்கொள்ள எதிரிகள் இருந்த நகரத்தை விட்டே செல்ல நாடினார்கள் மூஸா (அலை)அவர்கள்.இவர்கள் தப்பித்து செல்வதை தடுத்து இந்த கூட்டத்தை கொள்ள புறப்பட்டார்கள் ஃபிர்அவ்னும் அவனுடைய பட்டாளமும்.

மூஸா (அலை) அவர்களும்,அவர்களின் கூட்டமும் தப்பித்து பிழைக்க ஓடிய பொழுது பாதை எது என்றே அறியாமல் ஓடி கடலின் குறுக்காக வந்துவிட்டார்கள்.கண்ணெதிரே எதிரிகள் முதுகுக்கு பின் ஆர்பரிக்கும் கடல்.நாம் வசமாக ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களிடம் மாட்டிக்கொண்டோம்  என்று மூஸா (அலை)அவர்களின் சமுதாயத்தவர்கள் சொன்னார்கள்.

ஃபிர்அவ்ன் முன்பை விட இவர்களின் மேல் கொடுமைகளை இனி மிக  நிறைய புரிய வாய்ப்புண்டு.இனி செய்வதற்கொன்றும் இல்லை என்றே அந்த சமயம் இருந்தது இறை கட்டளை மூஸா நபி அவர்களுக்கு வரும் வரையில்.

அல்லாஹ்வின் கட்டளைகிணங்க மூஸா நபி அவர்கள் தன் கை தடியால் கடலை ஓங்கி அடித்தார்கள்.கடல் இரண்டாக பிளந்தது.மூஸா நபி அவர்களும்,அவர்களை ஈமான் கொண்டு அல்லாஹ்வை ஏற்ற அந்த கூட்டம் உயிர் தப்பியது ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டான். 

மூஸா நபி அவர்களையும் அவர்களின் கூட்டத்தார்களையும் அல்லாஹ் காப்பாற்றியதால் தான் நாம் முஹர்ரம் 9,10 ஆஷுரா நோன்பு வைக்கின்றோம்.  
ஆஷுரா நோன்பு:

.நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தன்று நோன்பு நோற்றிருப்பதை பார்த்து, இது என்ன? என வினவினார்கள். அதற்கு அவர்கள், மூஸா (அலை) அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் பகைவன் (ஃபிர்அவ்னிடமிருந்து) அல்லாஹ் காப்பாற்றிய ஒரு நல்ல நாளாகும் என்றார்கள், (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அந்த நாளில் நோன்பு நோற்று உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விசயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி (தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள். (புகாரி, முஸ்லிம்)

ஆஷுரா தினத்தன்று நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர் வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)

இந்த நோன்பை நாமும் நோற்று நமது குடும்பத்தார்களையும் நோன்பு நோற்க ஆர்வபடுத்த வேண்டும்.

ஆஷுராவின் படிப்பினை:

இன்னல்களும்,பிரச்சனைகளும் நம்மை எதிர் நோக்கும் பொழுது எகின் என்னும் "நிலைகுலையாத" தன்மை நம்மிடம் இந்த வரலாறு ஏற்படுத்தவே இறைவன் இச்சம்பவத்தை நமக்கு சொல்கிறான்.

நாம் வாழும் சூழலில் இஸ்லாம் பல தகவல் தொடர்பு சாதனங்களின் மூலமாக தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு,தாக்குதலுக்கு உட்பட்டாலும்  "நிலைகுலையாத" தன்மையின் மூலம் அவற்றை எதிர் கொண்டு இஸ்லாத்தை நாம் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அல்லாஹ் விரும்புகிறான்.

பொய் புரட்டு வாதங்களை கொண்டு  இஸ்லாம்  குறிவைக்கப்படுவதால் உண்மையை எடுத்து சொல்வதில் சோர்வடைந்து இந்த சத்திய கொள்கையை விட்டே நாம் விரண்டோட கூடாது.உண்மையை சொல்வதென்றால் இஸ்லாத்தின் எதிரிகள் இப்படி நாம் வேருண்டோடுவதையே விரும்புகின்றனர்.இவர்களுக்கு வழி விடாமல் இஸ்லாமை நாம் வழுவாக பற்றி பிடிக்க அல்லா நம் அனைவருக்கும் துணை புரிவானாக............   


அல்லாஹ்வின் ஒளியை தமது வாய்களால் ஊதி அணைக்க நினைகின்றனர்.(தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைபடுத்தாமல் விட மாட்டன்.

அல் குர்ஆன்:9:32