பக்கங்கள்

புதன், 21 டிசம்பர், 2022

சூதாட்டத்தால் சூறையாடும் மரணங்கள்!!.

 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

♣  டிசம்பர் – 2022 – 23 – ந் தேதி ஹிஜ்ரி – 1444 ––    [جمادى الأولى ]     ஜுமாதல் ஊலா மாதம் – 28 – ம் தேதி நான்காம்  வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 208 [டிஜிடல் முறை – 51] ♣

Download PDF

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யலாம

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {﴿۞ يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (219) ‏‏ ۞)‏} -[سورة البقرة 02 الآية 219] - صدق الله العظيم / قال رسول الله ﷺ «وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ وَالْغُبَيْرَاءِ وَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» . رَوَاهُ أَبُو دَاوُد 3685". ‏"‏‏.‏متفق عليه. ‏"‏‏.‏ ‏»‏‏ [إلخ], الى آخره, (. رواه البخاري ) أو كما عبر الرسول صلى الله عليه وسلم

[தலைப்பின்  விளக்கம் : ‘   சூதாட்டத்தால் சூறையாடும் மரணங்கள்   !!!   ” அதாவது  நாம் தினசரி செய்தாள்களில் / செய்திகளில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தற்கொலை எனச் செய்தியை அனு தினமும் பார்த்து வருகிறோம். இதற்க்கு இஸ்லாம்  தரும் தீர்வு என்ன ?  சம்பந்தமான‌ ஜுமுஆ குறிப்புரை].

【♣ துவக்கவுரை: المقد مة INTRODUCTION:- ♣】

✍🏻 அன்புள்ளவர்களே!  அல்லாஹ்வின் ﷻ பேரருளால்    [جمادى الأولى ] ஜுமாதல் ஊலா மாதத்தின் நான்காம் வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

✍🏻 அன்புள்ளவர்களே!   [2022-ம்] இவ்வாண்டில்  ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் 36 -வது நபரான சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த உத்தண்டி வளவு கிராமத்தைச் சேர்ந்த மணிமுத்து என்ற ஓட்டுனர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் [கடந்த வாரம் 11-12-2022 அன்று] தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தடை அவசர சட்டம் காலாவதியானதற்கு பிந்தைய 12 நாட்களில் நிகழ்ந்த நான்காவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு கொடியது? என்பதற்கு அண்மைக்காலங்களில் அதிகரித்து வரும் தற்கொலைகளே சாட்சி.

ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால்? அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்வது அன்றாட நிகழ்வுகளாக  பார்க்கிறோம்.  ` எதிர்முனையில் யாருடன் நீங்கள் விளையாடலாம். ஆனால், நீங்கள் ஆடுவது மனிதர்களுடன் அல்ல, அனைத்தும் வடிவமைக்கப்பட்ட புரோகிராம்கள்தான்' என்கிறார் சைபர் தொழில் நுட்ப வல்லுநர் கார்த்திகேயன். என்ன நடக்கிறது ? ஆன்லைன்  ஆட்டத்தில்! எல்லாம் ஏமாற்று வேலைகள்தாம்.

எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ஏராளமானோர் பணம் கட்டி ஆன்லைனில் இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். முதலில் ஜெயிப்பது போல் தெரிந்தாலும், கடைசியில் கணக்குப் பார்த்தால் நாம் வென்றதற்கும் மேல் தோற்றிருப்போம். ஆனால் விட்டதை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்கிற வெறி தலைக்கேற, கடன் வாங்கியும், வீட்டில் உள்ள நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைத்தும் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்கள். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து, அதனால் நிம்மதியை இழந்து, குடும்பத்துடன் பலர் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவங்கள் தமிழகத்தில் ஏராளம்.

அதுமட்டுமல்லாது; மனிதர்களில் சிலர் சூதாடுவதற்கு பணம் கிடைக்காத போது திருடுதல், ஏமாற்றுதல், எப்படியாவது பணத்தை அடைய  வீட்டிலுள்ள பொருட்களையோ, ஏன் சில நேரங்களில் தங்களின் குழந்தைகளையோ, அல்லது மனைவியையோ, கூட பந்தயப் பொருளாக வைத்து விளையாடிடும் அவல நிலையை சமூகத்தில் காலம் காலமாக பார்க்க முடிகின்றது. இது அன்று முதல் இன்று வரை நடை பெறுகின்ற சம்பவமாகும். இனிமேலாவது தவ்பா செய்து அதனை விட்டும் விலகி / நழுகி வாழுவோமாக!

  • ஆக இதனைப்பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதனைப் பற்றி   இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
  • பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன் ✍என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-قال الله تعالى ♣ 

【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள‌ குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்

【சூதாட்டம் ஓர் பெரும் பாவம் அதன் பக்கம் நெருங்காதே! என எச்சரிக்கும் அல்லாஹ். [ﷻ] 】

✍🏻 அன்புள்ளவர்களே! ‘அல்லாஹு ரப்புல் ஆலமீன் கீழ்கண்ட வசனங்களில் சூதாட்டதின் பலனைவிடப் பாவம் பெரிது” என்றும், சூதாட்டத்தின் மூலம் ஷைத்தான் விரும்புவதெல்லாம், உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான் என்றும், சூதாட்டம், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்றும் தெளிவாக கூறியுள்ளான். சிந்தித்து செயல்படுவோமா ?

۞ يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن نَّفْعِهِمَا ۗ وَيَسْأَلُونَكَ مَاذَا يُنفِقُونَ قُلِ الْعَفْوَ ۗ كَذَٰلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ (219)‏

(நபியே!) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது”  . அல்குர்ஆன்: 2:219

اِنَّمَا يُرِيْدُ الشَّيْطٰنُ اَنْ يُّوْقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَآءَ فِى الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللّٰهِ وَعَنِ الصَّلٰوةِ‌ ۚ فَهَلْ اَنْـتُمْ مُّنْتَهُوْنَ‏

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? அல்குர்ஆன்: 5:91.

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன்: 5:90

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣

【அல்லாஹ் உங்களுக்கு சூதாட்டத்தை தடை செய்துள்ளான்.! 】

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ الْخَمْرِ وَالْمَيْسِرِ وَالْكُوبَةِ وَالْغُبَيْرَاءِ وَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ» . رَوَاهُ أَبُو دَاوُد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். மேலும் கூறினார்கள் : போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும். [அப்தாவூது 3685 ]

【விளையாட்டிற்கும் -  சூதாட்டத்திற்கும் உள்ள வேறுபாடு [ Difference] என்ன?:-】 

✍🏻 விளையாட்டு என்றால்  என்ன?  விளையாட்டு என்பது எத்தனை நபர் விளையாடுகிறோமோ அத்தனை பேருக்கும் எந்தவித இழப்போ, ஏமாற்றமோ தராமல்; அனைவரின் உடலுக்கும், உணர்வுக்கும், மான வலிமையான‌ புத்துணர்வையும், ஆரோக்கியத்தை தருமோ அதுதான் விளையாட்டு. அப்படித்தான் நபிகளாரும் - ஸஹாபாக்களும் விளையாடி உள்ளனர் [இது தொடர்பாக ஆதாரம் போட்டால் பக்கம் நீண்டுவிடும். ஆதலால் அதனை தவிர்க்கிறேன்.- ஆசிரியர்]

Game (விளையாட்டு) என்பதற்க்கு எதிர்மாறாக இருப்பது Gambling (சூதாட்டம்) அதற்க்குத்தான் இஸ்லாம் அதனை தடைசெய்கிறது.

✍🏻 சூதாட்டம் என்றால் என்ன? ஒருவர் தம்முடைய பணம் அல்லது பொருளை பந்தயப் பொருளாக வைத்து விளையாடுவதை சூதாட்டம் என்கிறோம். அதாவது, இத்தகைய விளையாட்டுகளில் பங்குபெறுபவர்கள் அனைவரும் தங்களின் பணத்தையோ அல்லது வேறு ஏதேனும் பொருளையோ கொடுத்து, பின்னர் அதில் வெற்றி பெறுவோர் அதனை எடுத்துக் கொண்டு தோல்வியடைந்தவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்வதற்கு சூதாட்டம் எனப்படுகின்றது.

✍🏻 அன்புள்ளவர்களே!    சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை. எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்க முடியும். சூது கலக்காமலும் விளையாட முடியும்.

இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ? அவர்களுக்கு இன்ன தொகை தரப்படும் என்று போட்டியில் பங்கேற்காதவர்கள் அறிவித்தால் அது பரிசு எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடலாம். அது சூதாட்டமாகாது.

போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் மொத்த தொகையையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடினால் அது சூதாட்டமாகி விடும். சாதாரண கபடிப் போட்டியைக் கூட இந்த முறையில் நடத்தும் போது அது சூதாட்டமாகி விடுகின்றது.

செஸ் போட்டியானாலும், மல்யுத்தமானாலும் வேறு எந்த விளையாட்டானாலும் இந்த அடிப்படையில் நடத்தும் போது அது சூதாட்டமாகும்.

அது போல்  ; அந்த விளையாட்டில் சம்பந்தப்படாத மூன்றாம் நபர் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்குவது பரிசு எனப்படும். அதில் சம்மந்தப்பட்டவர்களே பணம் போட்டு வென்றவர்கள் எடுத்துக் கொள்வது சூதாட்டமாகும்.

செஸ் விளையாட்டு சூதாட்டம் அல்ல. ஆனால் அதைச் சூதாட்டமாகவும் ஆட முடியும்.

பயனற்ற முறையில் நேரம் பாழாவதால் அதைக் கூடாது என்றுதான் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். சூது எனும் காரணத்தை அவர்களும் கூறவில்லை.

அதே நேரத்தில் இதில் மூழ்கி இறை நினைவை மறக்காமல், தொழுகையை மறந்து விடாமல் இருப்பவர்கள் மட்டுமே இது போன்ற விளையாட்டுக்களில் ஈடுபடலாம் என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

【சூதாட்டங்களில் - நோக்கமும் - தாக்கமும் - வீக்கமும்:-】

【சூதாட்டங்களில் - நோக்கம் ]

✍🏻 அன்புள்ளவர்களே! சூதாட்டங்களில் விளையாட முனைவோரின் நோக்கம்: குறுகிய காலத்தில், உடல் உழைப்பின்றி பணத்தை அடைவதேயாகும். இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு இவைகள் ஒருவித போதையைத் தந்து அதிலிலேயே அவர்களை தொடர்ந்து உழலச்செய்கின்றது! அதனால் தான் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டவர்கள் அதில் சிக்கி அதிலிருந்து மீளமுடியாமல் தங்களின் பொருளாதாரத்தை இழப்பதோடு மட்டுமல்லாமல் தாங்கள் கடுமையாக உழைத்து ஆசை, ஆசையாகச் சேர்த்த வீடு மற்றும் இன்னபிற சொத்து சுகங்களையும் இழந்து, பெரும் கடனளாகியாகி அதன் நெருக்கடிக்குள்ளாகி இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சாமானியவர்கள் முதல் படித்தவர்கள் வரை இந்த விளையாட்டுக்கு ஏராளமானோர் அடிமையாகியுள்ளனர். 

【சூதாட்டங்களில்  - தாக்கம்]

✍🏻 அன்புள்ளவர்களே! சிறுவர், சிறுமிகளிடம் புகுத்தப்படும் சூதாட்டங்கள்!

இந்த சூதாட்டங்கள் பெரியவர்களை மட்டுமின்றி நமது சிறுவர், சிறுமியர்களையும் கூட விட்டுவைக்கவில்லை! பெரிய.. பெரிய.. மால்களிலும், திருவிழாக்களில் போடப்படும் கடைகளிலும், விளையாட்டுகள் என்ற போர்வையில் பலவிதமான சூதாட்டங்கள் நமது சிறார்களிடம் புகுத்தப்படுகின்றன!.

பணம் கட்டி பொம்மையை எடுக்கும் விளையாட்டு, வளையங்களை பொருட்களின் மீது வீசச் செய்யும் விளையாட்டு, பொருட்கள் வரையப்பட்ட லக்கி வீலை சுற்றிவிடும் விளையாட்டு போன்ற பல குழந்தைகள் விளையாடும் கேம்ஸ்களைப் பற்றிக் கூறலாம்!

இவைகள் அனைத்திலும் குழந்தைகளுக்கு அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் மற்றும் இன்னபிற பொருட்களின் மீது ஆசைக் காட்டி பணம் கட்டி விளையாட வைத்து தோல்வியடைந்தவர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் ஏமாற்றப்படுகின்றனர். இதுவும் ஒரு வகை சூதாட்டம் என்கிறார்கள் மார்க்க அறிஞர்கள்.

【சூதாட்டங்களில்  - வீக்கம்]

✍🏻 அன்புள்ளவர்களே!  சமீப காலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள், கொலைகள், கொள்ளைகள் போன்ற சம்பவங்கள் நம்மைச் சுற்றிப் பெருமளவு நடக்கின்றன. குழந்தைகளிலிருந்து - பெரியவர்கள் வரை எல்லோரும் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், இந்த ஆன்லைன் சூதாட்டங்கள் எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி, தொடர்ந்து விளம்பரப்படுத்தப்பட்டுதான் வருகின்றன.

இந்தியாவில் கிட்டத்தட்ட 130- க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த செயலிகளை சர்வதேச கார்ப்பரேட் கம்பெனிகள் நடத்துகின்றன. இந்த செயலிகள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நீண்டு கொண்டே சென்றதால் தமிழக அரசு கடந்த 2020ஆம் ஆண்டு நம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது ,

【 சூதாட்டமே ஹராம் அதன் வருமானம் ஹலால் ஆகுமா?:- 】

✍🏻 அன்புள்ளவர்களே!  நான் சூதாட்டத்தில் கைதேர்ந்த வல்லுவன் / திறமைசாளி என்று நினைப்பவர்களா ? நீங்கள் உங்கள் பணம் பல கோடி ரூபாயாக‌ இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் சாதாரண ஓர் ஏழை செய்யும் 1 ரூபாய் தர்மத்திற்க்கு ஈடாகாது.

وَ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَ آلِهِ: اَلْعِبَادَةُ عَشَرَةُ أَجْزَاءٍ تِسْعَةُ أَجْزَاءٍ فِي طَلَبِ اَلْحَلاَلِ .

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். வணக்கம் பத்து பாகம் என்றால் அதில் ஒன்பது பாகம் ஹலாலான வழியில் பொருளீட்டுவதாக இருக்கும்.

وقال صلى الله عليه وسلم: "عَنِ ابْنِ عُمَرَ قَالَ : " مَنِ اشْتَرَى ثَوْبًا بِعَشَرَةِ دَرَاهِمَ وَفِي ثَمَنِهِ دِرْهَمٌ حَرَامٌ ، لَمْ يَقْبَلِ اللَّهُ لَهُ صَلَاةً مَا كَانَ عَلَيْهِ " "

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பத்து திர்ஹத்துக்கு வாங்கிய ஆடை. அதில் ஒரு திர்ஹம் ஹராமாக இருந்தாலும் அது இருக்கும் வரை தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ، فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பகடைக்காய் ஆட்டம் (நர்தஷீர்) விளையாடியவர் தமது கையைப் பன்றி இறைச்சியிலும் இரத்தத்திலும் தேய்த்தவரைப் போன்றவர் ஆவார். . [இப்னுமாஜா 3763]

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدِ فَقَدْ عَصَى اللَّهَ وَرَسُولَهُ»

சதுரங்கம் விளையாடுபவன் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்தவனாவான். (அபூதாவூத்: 4938)

【பதற வைக்கும் பப்ஜி:- !】

✍🏻 அன்புள்ளவர்களே! பப்ஜி விளையாட்டு  என்பது  பிஞ்சுகளின் உள்ளங்களின் நஞ்சை விதைக்க கூடியதாகவும், கொலை வெறியை தூண்டுதவதாகவும் இருந்து வருகின்றது. பப்ஜி விளையாட்டு நாளடைவில் மனிதர்களை கொன்று குவிக்கின்ற உயிர்க்கொல்லி நோயாகவும், சிந்தனைகளை சிதைத்து தடுமாற வைக்கின்ற மனநோயாகவும் மாறி வலம் வருகின்றது என்பதை நிகழ்கால சம்பவங்கள் உண்மைப்படுத்துகின்றது.

பப்ஜி விளையாட்டு ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான பாதிப்புகள், கேடுகள், சீரழிவுகள் கணக்கிட முடியாத அளவுக்கு நீண்டு கொண்டே செல்கின்றது. பப்ஜி ஒரு மனநோய் என்பதை வெளிப்படுத்தும் ஒரு சில நிகழ்வுகள்;

பப்ஜி நோயினால் மனநலம் பாதிக்கப்பட்டு தூக்கமின்மையினால் அதிகமாக மாத்திரைகளை பயன்படுத்துவதாகவும், தூங்க செல்கின்ற நேரத்தில், தூக்கத்தை கெடுக்கும் விதமாக காதுகளில் வந்து யாரோ கத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் பப்ஜி விளையாடுபவர்களில் இரவில் தூக்கமின்மை (61%), பகலில் தூக்கக் கிறக்கம் (34%), தலைவலி, எரிச்சல் (36%), கண் கோளாறுகள் (39%), வகுப்பைப் புறக்கணித்தல் (27%), போன்ற பிரச்சினைகளால் அவதிப்படுவதாகவும், 7% பேர் தற்கொலை எண்ணங்களுடனும், 14% பேர் பிறரைத் தாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட விபரீதங்களாக;

  •  பெற்றோர்கள் திட்டியதால் பள்ளிக்கு செல்லாமல் காட்டுப் பகுதிகளுக்கு 2 இளைஞர்கள் சென்று பப்ஜி விளையாடினர்!
     தேர்வுக்கு படிக்காமல் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை பெற்றோர்கள் கண்டித்ததால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான்!
  •  பப்ஜி விளையாட்டை தடுத்து நிறுத்தியதால் மகன், பெற்றோர்களை கொடூரமாக கொலை செய்தான்!
  •  நீண்ட நேரம் பப்ஜி விளையாடிய மாணவர் கடுமையான மன அழுத்தத்தால் மாரடைப்பால் உயிரிழப்பு!
  •  விடிய விடிய பப்ஜி விளையாடுவதற்காக இரண்டு மாணவர்கள் வீட்டை விட்டு மாயம்!
  •  தொடர்ந்து ஆறு மணிநேரம் பப்ஜி கேம் விளையாடியதால் சிறுவன் உயிரிழப்பு!
  •  பத்தாம் வகுப்பு மாணவர் பப்ஜி விளையாடியதால் மனநலம் பாதிக்கப்பட்டார்!
  •  கணவர் நீண்ட நேரம் பப்ஜி விளையாடியதால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டதால், மனைவி விவாகரத்து கொடுத்து பிரிந்து விட்டார்!
  •  14 வயது பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சக சிறுவனை கத்தியால் குத்தினான்!
  •  நீண்ட நேரம் பப்ஜி விளையாடிய இளைஞர் தண்ணீர் என்று நினைத்து அமிலத்தை எடுத்து குடித்து விட்டார்!

பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட இதுபோன்ற ஆயிரக்கணக்கான பாதிப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது.

உடலுக்கும், கண்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய விடாமல் பப்ஜி என்ற போதை தடுத்து நிறுத்துகின்றது. நீண்ட நேரம் தூக்கத்தை இழந்து பப்ஜி விளையாடுபவர்கள் உடலில் ஏராளமான நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றார்கள்.

மேலும், நீண்ட நேரம் மொபைல் ஃபோனின் திரையை வெறித்தனமாக பார்ப்பதினால் கண் பார்வை செயலிழந்து விடுகின்ற அவல நிலையைப் பார்க்கின்றோம்!

இதுபோன்ற விஷயங்களிலும் இஸ்லாமிய மார்க்கம் கூடுதல் கவனம் செலுத்துகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

 فَإِنَّ لِجَسَدِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِعَيْنِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْجِكَ عَلَيْكَ حَقًّا، وَإِنَّ لِزَوْرِكَ عَلَيْكَ حَقًّا،

உங்களின் உடலுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன. உங்களின் கண்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளும் இருக்கின்றன.(புகாரி 1975)

வறண்ட பாலைவனத்தில் தொலைந்து போய்விட்ட தமது ஒட்டகத்தை உறங்கியெழும்போது கண்டுபிடித்த மனிதரைவிடத் தன் அடியான் பாவமன்னிப்புக் கோரி, தன்னிடம் மீளுவதால் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.  (புகாரி 5301)

【சூதாட்டத்தினால் ஏற்படும் தீமைகள்:- ! 】

✍🏻 அன்புள்ளவர்களே! பப்ஜி விளையாட்டு  என்பது  பிஞ்சுகளின் உள்ளங்களின் நஞ்சை விதைக்க கூடியதாகவும், கொலை வெறியை தூண்டுதவதாகவும் இருந்து வருகின்றது. பப்ஜி விளையாட்டு நாளடைவில் மனிதர்களை கொன்று குவிக்

  1. மனிதனை உழைக்க விடாமல், நமக்கு ஒருநாள் பணத்தை குவிக்கும் என்ற தவறான எண்ணத்தை உருவாக்குகின்றது. [சூதாடுபவர்கள் வேலைக்குச் செல்லாமல் ஊரின் ஓரங்களில் உட்கார்ந்து விளையாடுவதை ஒவ்வொரு ஊரிலும் காண முடியும்.]
  2.  குடும்ப கட்டமைப்பை சீர்குலைக்கின்றது. [பணத்தை, பொருளைக் கொண்டு சூதாடுபவன் தன் குடும்பத்தை வறுமையில் வாட்டுகின்றான். மனைவி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை, குழந்தை படிப்பை இழந்து குழந்தை தொழிலாளர்களாக பணி செய்ய வேண்டிய நிலை]
  3. பொருளதாரத்தை தகர்க்கின்றது.
  4. பகையை உருவாக்குகின்றது.
  5. தொழுகை மற்றும் அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் தடுக்கின்றது.

إِنَّما يُرِيدُ الشَّيْطانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَداوَةَ وَالْبَغْضاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلاةِ فَهَلْ أَنْتُمْ مُنْتَهُونَ

5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?

6. மனிதனை குற்றவாளியாக்குகின்றது
7. உடல் ஆரோக்கியத்தை கெடுக்கின்றது
8. தீய பழக்கங்களுக்கு தூண்டுகிறது.
9. ஒரு நாட்டுக்கு மிகப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றது. எனவேதான் இந்தியா கூட சூதாட்டத்தை சட்டப்பூர்வமானதாக ஆக்கிவிடலாமா? அப்படி ஆக்கினால் சூதாட்டத்தில் சம்பாதித்து பதுக்கப்படும் கருப்பு பணத்தை வெளிக்கொணரலாம் என்று ஆலோசிப்பதாக சில தினங்களுக்கு முன் பத்திரிக்கைச் செய்தியில் ஒரு செய்தி வந்திருந்தது. எனினும் பின்னர் அந்த செய்தியை அரசு மறுத்து அறிக்கை விட்டுள்ளது.

【 சூதாடத்தின் பரிகாரம்:-】

أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ حَلَفَ مِنْكُمْ فَقَالَ فِي حَلِفِهِ بِاللاَّتِ وَالْعُزَّى. فَلْيَقُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. وَمَنْ قَالَ لِصَاحِبِهِ تَعَالَ أُقَامِرْكَ. فَلْيَتَصَدَّقْ "".

உங்களில் யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக்கால தெய்வச் சிலைகளான) ‘லாத்’தின் மீதும் ‘உஸ்ஸா’ வின் மீதும் சத்தியமாக என்று கூறிவிட் டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொல்லட்டும். யார் தம் நண்பரிடம் "வா, சூதாடலாம்" என்று கூறிவிட்டாரோ அவர் (அதற்குப் பரிகாரமாக) தர்மம் செய்யட்டும். [புஹாரி 6301.ஸஹீஹ் முஸ்லிம் 3384.]

【சபதம் எடுங்கள்…】

✍🏻 அன்புள்ளவர்களே! இன்ஷா அல்லாஹ் இன்றிலிருந்து. எனது மவ்த் வரைக்கும்  இந்த சூதாட்டத்தின் பக்கம் கொஞ்சம் கூட நெருங்கிட மாட்டேன் என்று.. ..  எல்லாம் வல்ல அல்லாஹ் ﷻ  அவனது பேரருளை ஈருலகிலும் நிரப்பமாக‌ தந்தருள்வானாக!!! ஆமின் என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ குறிப்புரையை நிறைவு செய்கிறேன்.  (وَآخِرُ دَعْواهُمْ أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعالَمِينَ) ****** صلى الله وسلم على محمد وعلى آله وصحبه أجمعين والحمد لله رب العالمين *******  வாஆகிறு தஃவானா அனில்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.

✍🏻✍🏻நன்றியுரை:-  تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا  ويشرح صدورنا

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். [புகாரி 3461.]

இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-

எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா.உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-

உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் +919487007358 & ٩٩٤٢٤٠٧٣٥٨ . நான்  விவசாயி..

மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபிஉதவியாசிரியர்:-

உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் +918754089943.

இக்கட்டுரை வெளி வர மஷ்வரா [அலோசனை] தந்த அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும் பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ கைரன்.

✍🏻✍🏻 எனக்கு இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை எழுத ஊக்கமும், உறுதுணையும், ஒத்துழைப்பும் தந்த ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உஸ்தாதுக‌ளுக்கும்  & திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை உலமா நண்பர்களுக்கும். ஜஸாகல்லாஹ்.  வஸ்ஸலாம். ✍🏻✍🏻

நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.

ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே குறிப்புரையாக தரப்படுகின்றன, இவற்றை  அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் இணையதள முகவரி

https://vellimedaikal.wordpress.com/

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் இமெயில் முகவரி

bayanpdf@gmail.com

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் முகநூல் முகவரி

https://www.facebook.com/profile.php?id=100009486147372

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் Google + முகவரி

https://plus.google.com/u/0/105334692200015285184

உங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்வு செய்ய கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க..

https://vellimedaikal.wordpress.com/2016/10/02/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை/

உங்களுக்கு பிடித்த தலைப்பில் PDF வடிவில் பயான் குறிப்புகளை பதிவிறக்கம் செய்ய..

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடையின் பயான் குறிப்புகளை தற்போது ஆப் மூலம் பார்க்கலாம்

ஆப்பை பதிவிறக்கம் செய்ய‌

https://files.appsgeyser.com/%D9%85%D9%88%D9%82%D8%B9%20%D8%AE%D8%B7%D8%A8%20%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%B9%D8%A9_16400904.apk

[ or அல்லது ]

https://appsgeyser.com/building/?type=apk&widget_name=%D9%85%D9%88%D9%82%D8%B9%20%D8%AE%D8%B7%D8%A8%20%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%B9%D8%A9_16400904

ஜஸாகல்லாஹ். ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உலமாக்கள். வஸ்ஸலாம்.

WhatsApp Image 2021-04-13 at 4.52.45 PM

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ

செவ்வாய், 22 நவம்பர், 2022

வாய்மையே வெல்லும் [9:119]

 أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 

🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹  🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ‌ الله ﷺ 🌹

♣  நவம்பர் – 2022 – 25 – ந் தேதி ஹிஜ்ரி – 1444 –   [ ربيع الآخر]     ரபி[ع]உல் ஆகிர்  மாதம் – 29 – ம் தேதி  ஐந்தாம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 207 [டிஜிடல் முறை - 50]  ♣

Download PDF

ஜுமுஆ முபாரக் தகவல் மேடை. (1)

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز {﴿يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏ ‏‏ (119) ۞)‏} -[سورة التوبة 09 الآية 119] - صدق الله العظيم / قال رسول الله ﷺ « عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ معَ النبِّيِينَ والصِّدِّيقينَ والشهداءِ» . رَوَاهُ التِّرْمِذِيّ". ‏"‏‏.‏متفق عليه. ‏"‏‏.‏ ‏»‏‏ [إلخ], الى آخره, (. رواه البخاري ) أو كما عبر الرسول صلى الله عليه وسلم

[தலைப்பின்  விளக்கம் : ‘  வாய்மையே வெல்லும் [9:119]  !!!   ” அதாவது  நாளைய தினம் நவம்பர் 26 - ஆம் தேதி தேசிய சட்ட தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தினத்தை அனுசரிப்பதின் முக்கிய நோக்கம் : அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும், அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும். அத்தகைய சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது. என்பதாகும். அது  ? சம்பந்தமாக      ஜுமுஆ குறிப்புரை].

【♣ துவக்கவுரை: المقد مة INTRODUCTION ♣】

✍🏻 அன்புள்ளவர்களே!  அல்லாஹ்வின் ﷻ பேரருளால்  [ ربيع الآخر ]     ரபி[ع]உல் ஆகிர்  மாதத்தின்   ஐந்தாம்   வார ஜுமுஆவில் அமர்ந்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்.

✍🏻 அன்புள்ளவர்களே!  இன்று எங்கு பார்த்தாலும் பொய் அதிகமாக பேசப்படுகிறது. ஒரு முஃமீன் எப்போதும் உண்மை பேசி வாழ வேண்டும்.. என்று இஸ்லாம் கூறுகிறது. வாய்மையே வெல்லும்’ என்ற வார்த்தை எல்லா அரசு அலுவலகங்களிலலும் பொறிக்கப்பட்டிருந்தாலும், வாய்மை [வாய் பேச்சுதான்] அங்கு வென்று கொண்டிருக்கிறது ஆதலால் ‘வாய்மையே வெல்லும்’ என்ற வாசகம் எழுத்தில் மட்டுமல்ல. நம் எண்ணத்திலும், வாழ்விலும் வளர வேண்டும்.

"வாய்மையே வெல்லும்" என்ற புனிதமான வார்த்தை உண்மைதான் வெல்லும் என்று பறைசாற்றுகிறது. ஆனால் இன்று "வாய்மையே வெல்லும்" என்ற புனிதமான வார்த்தை "வாய் பேச்சின் மூலம் எதையும் வெல்லலாம்" என்று தவறாக பயன்படுத்துகின்றன.

✍🏻 அன்புள்ளவர்களே! நாம் கோர்டில் பார்திருக்கிறோம் அங்கு ஒரு பெண் கருப்பு கயிரால் கண்னை மூடிக் கொண்டும், கையில் ஒரு தராசை சரிசமமாக வைத்திருப்பதை பார்கிறோம். இவைகள் கற்றுத் தரும் பாடம் யாராக இருந்தாலும் நீதமாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்க்காகத்தான்..

வாய்மையே வெல்லும்! என்ற வார்த்தை  தமிழக அரசின் அதிகார முத்திரையில் இடம் பெற்றுள்ள வாசகம்.

அரசு அலுவலகம் - நீதிமன்றம் இவைகளில் "வாய்மையே வெல்லும்' என எழுதப்பட்ட வாசகங்களைக் காணலாம். மேலும் "நான் சொல்வதெல்லாம் உண்மை; உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை'' என்று கூறும்படி குற்றம் சுமத்தப்பட்டவரிடம் நீதிமன்றப் பணியாளர் சொல்வதையும் கேட்டிருக்கலாம். ""பொய் அழியக் கூடியது; மெய் அழியாதது'' என்பதை உணர்ந்து நடந்தாலே நமது வாழ்க்கை இன்பத்தில் திளைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்பது உறுதி.

இந்த வாசகத்தின் பொருள் என்னவென்பது இந்த வாசகம் தாங்கிய வாகனங்களில் பயணிக்கும் அரசு அலுவலர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் விளங்கவில்லையோ எனத்தான் நினைக்கத் தோன்றுகிறது.

காவல், வருவாய், வனத்துறை, வரித்துறை எனப் பல்வேறு தரப்பட்ட அரசு வாகனங்களில் பயணிக்கும் அரசு சார்ந்த அலுவலர்கள் அவற்றை ஆங்காங்கே நிறுத்திவிட்டு சோதனை மேற்கொள்ளும்போது அரசுக்குச் சாதகமாக நடந்து கொள்கின்றனரா? என்பது அவரவர் மனச்சாட்சிக்கே விட்டுவிடலாம்.

இந்த வாசகம் தாங்கிய வாகனங்களில் பயணித்துத் தங்கள் துறை சார்ந்த சோதனைகளை மேற்க்கொள்ளும்போது இவர்களின் கரங்களில் இலஞ்சக் கரை படிவதையும் நாம் ஊடகங்கள் வாயிலாக அவ்வப்போது அறிந்து கொண்டுதான் உள்ளோம். வாய்மையே வெல்லும் என்ற வாசகம் பொறித்த வாகனங்களில் பயணித்துக் கொண்டு இந்த வாசகத்திற்கு எதிராக இவர்கள் செயல்படுவதை நினைந்தால் மனம் அதிகமாக வேதனை அடைகிறது...

கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதும், சொல்லியபடி நடப்பதும் வாய்மையின் அடையாளமே! இன்று வாய்மை, வாய் அளவில் மட்டுமே உள்ளது; செயல்வடிவில் கிடையாது. என்பதுதான் உண்மையாக உள்ளது..

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய நற்குணங்களில் தலையாயது அவன் வாய்மையாளனாகத் திகழ்வதாகும். ஒருவன் வாய்மையையும் உண்மையையும் தன்னுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தவறி விட்டால் அவன் கடுமையான தோல்வியையும், வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும்.

மார்க்கம் சொல்லித்தரும் வாய்மையான‌ விஷயங்களை பேணி நம் வாழ்க்கை பயணங்களை அமைத்துக் கொண்டால் நம் வாழ் நாள் முழுவதும் நன்மையில் மூழ்கி விடலாம்.

  • ஆக இப்போது வாய்மையின் சிறப்புகளையும், அதன் நன்மைகளையும் முழுமையாக அறிந்து வாழ்கையே வணக்கமாக ஆக்கும் முயற்சிகளை இன்றைய ஜுமுஆவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்...
  • பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும் , கேட்ட‌தின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வ‌ல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்த‌ருள்புரிவானாக! ஆமீன்  ✍ என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.

❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈

♣ அல்லாஹ் [ﷻ]  திருமறையில் கூறுகின்றான்:-قال الله تعالى ♣ 

【எல்லா நிலையிலும் நீதத்தோடு வாழ சொல்லும் அல்குர்ஆன். 】

✍🏻 அன்புள்ளவர்களே! ‘வாய்மையே வெல்லும்’ என்பது எழுத்தில் மட்டுமல்ல. அது எண்ணத்திலும் எழுதப்பட வேண்டும். இறையடியார்கள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள். எனவேதான் அவர்கள் வாய்மையாளர்களுடன் இருக்கும்படி இறைவன் பின்வருமாறு வசனிக்கிறான்.

 يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَكُوْنُوْا مَعَ الصّٰدِقِيْنَ‏

 ”ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். அல்குர்ஆன்: 9:119.

فَلِذٰلِكَ فَادْعُ‌ ۚ وَاسْتَقِمْ كَمَاۤ اُمِرْتَ‌ۚ وَلَا تَتَّبِعْ اَهْوَآءَهُمْ‌ۚ وَقُلْ اٰمَنْتُ بِمَاۤ اَنْزَلَ اللّٰهُ مِنْ كِتٰبٍ‌‌ۚ وَاُمِرْتُ لِاَعْدِلَ بَيْنَكُمُ‌ؕ اَللّٰهُ رَبُّنَا وَرَبُّكُمْ‌ؕ لَـنَاۤ اَعْمَالُـنَا وَلَـكُمْ اَعْمَالُكُمْ‌ۚ لَا حُجَّةَ بَيْنَنَا وَبَيْنَكُمُ‌ؕ اَللّٰهُ يَجْمَعُ بَيْنَنَا‌ۚ وَاِلَيْهِ الْمَصِيْرُؕ‏

 எனவே, (நபியே! நேர்வழியின் பக்கம் அவர்களை) நீர் அழைத்துக் கொண்டே இருப்பீராக; மேலும், நீர் ஏவப்பட்ட பிரகாரம் உறுதியுடன் நிற்பீராக! அவர்களுடைய (இழிவான) மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்; இன்னும், “அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; அன்றியும் உங்களிடையே நீதி வழங்கும்படியும் நான் ஏவப்பட்டுள்ளேன். அல்லாஹ்வே எங்கள் இறைவனாவான்; அவனே உங்களுடைய இறைவனும் ஆவான். எங்கள் செயல்கள் எங்களுக்கு; உங்கள் செயல்கள் உங்களுக்கு; எங்களுக்கும் உங்களுக்குமிடையே தர்க்கம் வேண்டாம் - அல்லாஹ் நம்மிடையே (மறுமையில்) ஒன்று சேர்ப்பான், அவன் பாலே நாம் மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது” என்றும் கூறுவீராக. 42:15.

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمُ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ

“நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; ”  அல்குர்ஆன்:57:25 )

இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற விரிவுரையாளர்களில் பெரும்பாலானோர் “ஏகத்துவ அழைப்போடு நீதத்தையும் நடைமுறைப்படுத்த முயல  வேண்டும் என்பதும், நீதி நிலைபெறுவதற்குத் தேவையான வலிமையைத் திரட்ட வேண்டும் என்பதும், அந்த நீதியை மறுத்திடுவோருக்கும், குலைத்திடுவோருக்கும்  தண்டனை அளித்திட வேண்டும் என்பதும், நபிமார்களின் அழைப்புப் பணியில் அடங்கியவை ஆகும்.” என்று கூறுகின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்: நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (49:6).

அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) (2:282).

உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (65:2).

இவ்வசனங்களிலிருந்து தீயவனின் செய்தியும், நேர்மையில்லாதவனின் சாட்சியமும் ஏற்கத்தக்கவை அல்ல என்று தெரிகிறது.

【நீதமாக இருங்கள் தக்வா வரும்..... 】

اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ

நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். 5:8.

【கடன் கொடுப்பதிலும்- வாங்குவதிலும் நீதம் அவசியம்】

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ اِلٰٓى اَجَلٍ مُّسَمًّى فَاكْتُبُوْهُ ‌ؕ وَلْيَكْتُب بَّيْنَكُمْ كَاتِبٌۢ بِالْعَدْلِ‌ وَلَا يَاْبَ كَاتِبٌ اَنْ يَّكْتُبَ كَمَا عَلَّمَهُ اللّٰهُ‌ فَلْيَكْتُبْ ‌ۚوَلْيُمْلِلِ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ وَلْيَتَّقِ اللّٰهَ رَبَّهٗ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا ‌ؕ فَاِنْ كَانَ الَّذِىْ عَلَيْهِ الْحَـقُّ سَفِيْهًا اَوْ ضَعِيْفًا اَوْ لَا يَسْتَطِيْعُ اَنْ يُّمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهٗ بِالْعَدْلِ‌ؕ وَاسْتَشْهِدُوْا شَهِيْدَيْنِ مِنْ رِّجَالِكُمْ‌ۚ فَاِنْ لَّمْ يَكُوْنَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَّامْرَاَتٰنِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَآءِ اَنْ تَضِلَّ اِحْدٰٮهُمَا فَتُذَكِّرَ اِحْدٰٮهُمَا الْاُخْرٰى‌ؕ وَ لَا يَاْبَ الشُّهَدَآءُ اِذَا مَا دُعُوْا ‌ؕ وَلَا تَسْــٴَــمُوْۤا اَنْ تَكْتُبُوْهُ صَغِيْرًا اَوْ كَبِيْرًا اِلٰٓى اَجَلِهٖ‌ؕ ذٰ لِكُمْ اَقْسَطُ عِنْدَ اللّٰهِ وَاَقْوَمُ لِلشَّهَادَةِ وَاَدْنٰۤى اَلَّا تَرْتَابُوْٓا اِلَّاۤ اَنْ تَكُوْنَ تِجَارَةً حَاضِرَةً تُدِيْرُوْنَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ اَلَّا تَكْتُبُوْهَا ‌ؕ وَاَشْهِدُوْۤا اِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَآرَّ كَاتِبٌ وَّلَا شَهِيْدٌ  ؕ وَاِنْ تَفْعَلُوْا فَاِنَّهٗ فُسُوْقٌ ۢ بِكُمْ ؕ وَ اتَّقُوا اللّٰهَ‌ ؕ وَيُعَلِّمُكُمُ اللّٰهُ‌ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ‏

 ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்; எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்; எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது; (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்; அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக் கூடாது; இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்; ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது; தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்; இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மிகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்; எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை; ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபவனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது; நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன். 2:282.

【திருமணத்தில் நீதம் 】

وَاِنْ خِفْتُمْ اَلَّا تُقْسِطُوْا فِى الْيَتٰمٰى فَانْكِحُوْا مَا طَابَ لَـكُمْ مِّنَ النِّسَآءِ مَثْنٰى وَثُلٰثَ وَرُبٰعَ‌ ‌ۚ فَاِنْ خِفْتُمْ اَلَّا تَعْدِلُوْا فَوَاحِدَةً اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ ؕ ذٰ لِكَ اَدْنٰٓى اَلَّا تَعُوْلُوْا ؕ‏

அநாதை(ப் பெண்களைத் திருமணம் செய்து அவர்)களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள் - இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ; ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்), அல்லது உங்கள் வலக்கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள் - இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். 4:3.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள். புகாரி 5304.

   وَلَنْ تَسْتَطِيْعُوْۤا اَنْ تَعْدِلُوْا بَيْنَ النِّسَآءِ وَلَوْ حَرَصْتُمْ‌ فَلَا تَمِيْلُوْا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوْهَا كَالْمُعَلَّقَةِ‌ ؕ وَاِنْ تُصْلِحُوْا وَتَتَّقُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ غَفُوْرًا رَّحِيْمًا‏

 (முஃமின்களே!) நீங்கள் எவ்வளவுதான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்த சாத்தியமாகாது; ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள்; நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமாதானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். 4:129.

【அமானிதங்களை நிறைவேற்றுதலில் நீதம்: - 】

   اِنَّ اللّٰهَ يَاْمُرُكُمْ اَنْ تُؤَدُّوا الْاَمٰنٰتِ اِلٰٓى اَهْلِهَا ۙ وَاِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ اَنْ تَحْكُمُوْا بِالْعَدْلِ‌ ؕ اِنَّ اللّٰهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهٖ‌ ؕ اِنَّ اللّٰهَ كَانَ سَمِيْعًۢا بَصِيْرًا‏

நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். 4:58

【பேசுவதில் நீதி…. 】

وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا

”இன்னும் பேசும் போது நீதியுடன் பேசுங்கள்! (அல்குர்ஆன்:6:152)

【அளவை, நிறுவையில் நீதி…. 】

وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ

”மேலும், அளவையிலும், நிறுவையிலும் நீதியைக் கடைப்பிடியுங்கள்!” (அல்குர்ஆன்: 6:152)

【எல்லோரையும் விட்டு விடு... நீதத்தை விட்டு விடாதே. 】

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّامِيْنَ بِالْقِسْطِ شُهَدَآءَ لِلّٰهِ وَلَوْ عَلٰٓى اَنْفُسِكُمْ اَوِ الْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ‌ ؕ اِنْ يَّكُنْ غَنِيًّا اَوْ فَقِيْرًا فَاللّٰهُ اَوْلٰى بِهِمَا‌ فَلَا تَتَّبِعُوا الْهَوٰٓى اَنْ تَعْدِلُوْا ‌ۚ وَاِنْ تَلْوٗۤا اَوْ تُعْرِضُوْا فَاِنَّ اللّٰهَ كَانَ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرًا‏‏

முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்; (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்); ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்; எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்; மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான். 4:135.

【சாட்சியாளரும் தன் சாட்சியத்தை நீதமாக கூற வேண்டும்... 】

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌ ؕ اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا تَعْمَلُوْنَ‏

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்; இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். 5:8.

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَاَنْـتُمْ حُرُمٌ‌ ؕ وَمَنْ قَتَلَهٗ مِنْكُمْ مُّتَعَمِّدًا فَجَزَآءٌ مِّثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهٖ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ هَدْيًاۢ بٰلِغَ الْـكَعْبَةِ اَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسٰكِيْنَ اَوْ عَدْلُ ذٰ لِكَ صِيَامًا لِّيَذُوْقَ وَبَالَ اَمْرِهٖ‌ ؕ عَفَا اللّٰهُ عَمَّا سَلَفَ‌ ؕ وَمَنْ عَادَ فَيَنْتَقِمُ اللّٰهُ مِنْهُ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ ذُو انْتِقَامٍ‏

 ஈமான் கொண்டவர்களே! நீங்கள் இஹ்ராம் உடை உடுத்தியவர்களாக இருக்கும் நிலையில் வேட்டை(யாடி)ப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்; உங்களில் யாராவது ஒருவர் வேண்டுமென்றே அதைக் கொன்றால், (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளிலிருந்து அவர் கொன்றதற்கு சமமான ஒன்றை(ப் பரிகாரமாக) ஈடாகக் கொடுக்க வேண்டியது; அதற்கு உங்களில் நீதமுடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும்; அது கஃபாவை அடைய வேண்டிய குர்பானியாகும்; அல்லது பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது (பரிகாரமளிக்க ஏதும் இல்லையாயின்) தனதுவினையின் பலனை அனுபவிப்பதற்காக அதற்குச் சமமான நோன்புகள் நோற்பது (அதற்கு ஈடாகும்;) முன்னால் நடந்ததை அல்லாஹ் மன்னித்து விட்டான், எவர் மீண்டும் (இதைச்) செய்வாரோ அல்லாஹ் அவரை வேதனை செய்வான், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தவனாகவும், (குற்றம் செய்வோருக்குத் தக்க) தண்டனை கொடுக்க உரியோனாகவும் இருக்கிறான். 5:95.

   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا شَهَادَةُ بَيْنِكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ حِيْنَ الْوَصِيَّةِ اثْـنٰنِ ذَوَا عَدْلٍ مِّنْكُمْ اَوْ اٰخَرَانِ مِنْ غَيْـرِكُمْ اِنْ اَنْـتُمْ ضَرَبْتُمْ فِى الْاَرْضِ فَاَصَابَتْكُمْ مُّصِيْبَةُ الْمَوْتِ‌ ؕ تَحْبِسُوْنَهُمَا مِنْۢ بَعْدِ الصَّلٰوةِ فَيُقْسِمٰنِ بِاللّٰهِ اِنِ ارْتَبْتُمْ لَا نَشْتَرِىْ بِهٖ ثَمَنًا وَّلَوْ كَانَ ذَا قُرْبٰى‌ ۙ وَلَا نَـكْتُمُ شَهَادَةَ ۙ اللّٰهِ اِنَّاۤ اِذًا لَّمِنَ الْاٰثِمِيْنَ‏

ஈமான் கொண்டவர்களே! உங்களில் யாருக்கேனும் மரணம் சமீபித்து (அவர் மரணசாஸனம் கூற விரும்பினால்) அச்சமயத்தில் உங்களுக்குள் நம்பிக்கைக்குரிய இரண்டு சாட்சிகள் இருக்கவேண்டும்; அல்லது உங்களில் எவரும் பூமியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கும்போது மரணம் சமீபித்தால் (அப்போது முஸ்லிம்களாக இரு சாட்சிகள் கிடையாவிடின்) உங்களையல்லாத வேறிருவர் சாட்சியாக இருக்கட்டும்; (இவர்கள் மீது) உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் இவ்விருவரையும் (அஸரு) தொழுகைக்குப் பின் தடுத்து வைத்துக் கொள்ளவும்; இவ்விருவரும் “நாங்கள் (சாட்சி) கூறியது கொண்டு யாதொரு பொருளையும் நாங்கள் அடைய விரும்பவில்லை; அவர்கள், எங்களுடைய பந்துக்களாயிருந்த போதிலும், நாங்கள் அல்லாஹ்வுக்காக சாட்சியங் கூறியதில் எதையும் மறைக்கவில்லை; அவ்வாறு செய்திருந்தால் நிச்சயமாக நாங்கள் பாவிகளாயிவிடுவோம்“ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும். 5:106

   فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ فَارِقُوْهُنَّ بِمَعْرُوْفٍ وَّاَشْهِدُوْا ذَوَىْ عَدْلٍ مِّنْكُمْ وَاَقِيْمُوا الشَّهَادَةَ لِلّٰهِ‌ ؕ ذٰ لِكُمْ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ ۙ وَمَنْ يَّـتَّـقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ‏

ஆகவே, அவர்கள் தங்கள் (இத்தாவின்) தவணையை நெருங்கினால், அப்பொழுது முறைப்படி (மனைவியராக) அவர்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது முறைப்படி அவர்களைப் பிரித்து (விட்டு) விடுங்கள்; அன்றியும், உங்களில் நியாயமுடைய இருவரைச் சாட்சியாக வைத்துக் கொள்ளுங்கள்; மேலும், சாட்சியத்தை அல்லாஹ்வுக்காக (நேர்மையாக) நிலைப்படுத்துங்கள்; அல்லாஹ்வையும், மறுமை நாளையும் விசுவாசம் கொண்டிருப்போருக்கு இந்த நற்போதனை செய்யப்படுகிறது - தவிர, எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் (தக்க ஒரு) வழியை உண்டாக்குவான். 65:2

   وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِىْ هِىَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗ‌ ۚ وَاَوْفُوْا الْكَيْلَ وَالْمِيْزَانَ بِالْقِسْطِ‌ ۚ لَا نُـكَلِّفُ نَفْسًا اِلَّا وُسْعَهَا‌ ۚ وَاِذَا قُلْتُمْ فَاعْدِلُوْا وَلَوْ كَانَ ذَا قُرْبٰى‌‌ ۚ وَبِعَهْدِ اللّٰهِ اَوْفُوْا‌ ؕ ذٰ لِكُمْ وَصّٰٮكُمْ بِهٖ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۙ‏

அநாதையின் பொருளின் பக்கம் அவன் பிராயத்தை அடையும் வரையில் அழகான முறையிலன்றி நீங்கள் நெருங்காதீர்கள்; அளவையும், நிறுவையையும் நீதத்தைக் கொண்டு நிரப்பமாக்குங்கள்; நாம் எந்த ஆத்மாவையும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்துவதில்லை; நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப்படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் - நியாயமே பேசுங்கள்; அல்லாஹ்வுக்கு (நீங்கள் கொடுத்த) உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். நீங்கள் நினைவு (கூர்ந்து நடந்து கொள்ளும் பொருட்டே அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கிறான். 6:152. 

   وَضَرَبَ اللّٰهُ مَثَلاً رَّجُلَيْنِ اَحَدُهُمَاۤ اَبْكَمُ لَا يَقْدِرُ عَلٰى شَىْءٍ وَّهُوَ كَلٌّ عَلٰى مَوْلٰٮهُۙ اَيْنَمَا يُوَجِّهْهُّ لَا يَاْتِ بِخَيْرٍ‌ؕ هَلْ يَسْتَوِىْ هُوَۙ وَمَنْ يَّاْمُرُ بِالْعَدْلِ‌ۙ وَهُوَ عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ

மேலும், அல்லாஹ் இரு மனிதர்களைப் பற்றிய (மற்றும்) ஓர் உதாரணம் கூறுகிறான்: அவ்விருவரில் ஒருவன் ஊமை(யான அடிமை); எந்தப் பொருளின் மீது (உரிமையும்) சக்தியும் அற்றவன்; தன் எஜமானனுக்குப் பெரும் சுமையாகவும் அவன் இருக்கின்றான்; எங்கு அவனை அனுப்பினாலும் அவன் யாதொரு நன்மையும் கொண்டு வர மாட்டான்; மற்றவனோ, தானும் நேர் வழியிலிருந்து, (பிறரையும் நன்மை செய்யுமாறு) நீதியைக் கொண்டு ஏவுகிறான் - இவனுக்கு (முந்தியவன்) சமமாவானா?  16:76. 

【வாழ்க்கையின் முழு பகுதியிலும் நீதி: - 】

   اِنَّ اللّٰهَ يَاْمُرُ بِالْعَدْلِ وَالْاِحْسَانِ وَاِيْتَآىِٕ ذِى الْقُرْبٰى وَيَنْهٰى عَنِ الْفَحْشَآءِ وَالْمُنْكَرِ وَالْبَغْىِ‌ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். 16:90.

【சமாதானம் உண்டாக்குங்கள்】

   وَاِنْ طَآٮِٕفَتٰنِ مِنَ الْمُؤْمِنِيْنَ اقْتَتَلُوْا فَاَصْلِحُوْا بَيْنَهُمَا‌ۚ فَاِنْۢ بَغَتْ اِحْدٰٮهُمَا عَلَى الْاُخْرٰى فَقَاتِلُوا الَّتِىْ تَبْغِىْ حَتّٰى تَفِىْٓءَ اِلٰٓى اَمْرِ اللّٰهِ ‌ۚ فَاِنْ فَآءَتْ فَاَصْلِحُوْا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَاَقْسِطُوْا ؕ‌ اِنَّ اللّٰهَ يُحِبُّ الْمُقْسِطِيْنَ‏

 முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். 49:9.

♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:-  كما قال النبي صلى الله عليه وسلم   The Prophet ﷺ said:

【நீதம் செலுத்துவதின் சிறப்புகளும், அதன் கடமைகளும்..】

عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال : "سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ‏.‏ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ " متفق عليه

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான். அவர்கள், 1. நீதியுள்ள அரசன், 2. அல்லாஹ்வுடைய வணக்கத்தில் வாலிபத்தைக் கழித்த வாலிபன், 3. எந்நேரமும் பள்ளியில் உள்ளத்தை லயிக்கச் செய்தவர், 4. அல்லாஹ்வுக்காகவே நேசம் கொண்டு அவனுக்காகவே ஒன்று கூடி அவனுக்காகப் பிரியும் இரு நபர்கள், 5. உயர் குலத்தைச் சேர்ந்த அழகிய பெண் ஒருத்தி தன்பால் அழைக்க, நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்’ என்று கூறியவர், 6. தனது இடக்கரத்திற்குத் தெரியாத நிலையில் தானம் செய்தவர், 7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்தியவர். புகாரி – 6806 )

நபியின் நேர்மை: ஒரு முறை ஒரு பெரிய குடும்பத்து பெண் திருடிவிட்டாள், அவளுக்கு தண்டனை வழங்க வேண்டும். நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சஹாபி வந்து நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரையாக அந்த பெண்ணிற்கு மன்னிப்பு கொடுக்கச் சொல்லி வேண்டினார். ஆனால் நபி(ஸல்) அவர்கள் பயன்படுத்திய வார்த்தை தான் இங்கு நாம் கவனிக்கப்பட வேண்டியது “ என் மகள் பாத்திமா (ரலி) திருடினாலும் கை வெட்டப்படும்”.

உயர்ந்த குலத்து பெண் ஒருத்தி திருடியபோது அவருக்காக பலரும்நபிகள் ஸல் அவர்களிடம் பரிந்துரை செய்தபோது ”என் மகள் பாத்திமா திருடினாலும் அவரது கையை வெட்டுவேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார்கள். புகாரி 3475.

தனக்கு சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நீதி தவறக்கூடாது, தீர்ப்பு வழங்குபவர் ஆண்டியாக இருந்தாலும் சரி அரசனாக இருந்தாலும் சரியே, நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீதில் நீதியான அரசன் என்று கூறியதற்கு காரணம், அரசனாக இருந்தும் நீதி தவறாமல் இருப்பது ஈமானின் முழுமைக்கு அடையாளமாகும்.

وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال‏:‏ قال رسول الله صلى الله عليه وسلم‏:‏ ‏ "‏إنَّ المُقْسِطِينَ عِنْدَ اللهِ علَى مَنابِرَ مِن نُورٍ، عن يَمِينِ الرَّحْمَنِ عزَّ وجلَّ -وكِلْتا يَدَيْهِ يَمِينٌ- الَّذِينَ يَعْدِلُونَ في حُكْمِهِمْ وأَهْلِيهِمْ وما وَلُواا‏"‏ ‏(‏‏(‏رواه مسلم ‏)‏‏)‏‏.‏

நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்). ஸஹீஹ் முஸ்லிம் 3731

【வியாபாரத்தில் நீதம் பேணுவோம்..】

✍🏻 அன்புள்ளவர்களே! வியாபாரத்தில் பொய் சொல்வதும் அளவு நிறுவையில் மோசடி செய்வதும் இஸ்லாத்தில் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாவங்களாகும். இந்தப் பாவத்தைச் செய்யுமாறு யார் கூறினாலும் அதை நாம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் செய்யச் சொன்னவரும் செய்தவரும் இருவருமே பாவிகளாகி விடுவார்கள்.

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3) أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ 

அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்!. அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அல்குர்ஆன் (83 : 1)

وَيَا قَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ 

“என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!” (என்று ஷுஐப் கூறினார்) அல்குர்ஆன் (11 : 87)

حَدَّثَنَا سُلَيْمَانُ أَبُو الرَّبِيعِ قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ أَبُو سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ رواه البخاري

நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறுசெய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான். புகாரி (33)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ قَالُوا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ عَنْ عَلِيِّ بْنِ مُدْرِكٍ عَنْ أَبِي زُرْعَةَ عَنْ خَرَشَةَ بْنِ الْحُرِّ عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِب رواه مسلم

“மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், “(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்டேன். அதற்கு, “தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் (171)

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ معَ النبِّيِينَ والصِّدِّيقينَ والشهداءِ» . رَوَاهُ التِّرْمِذِيّ وَالدَّارَقُطْنِيّ

உண்மையான நம்பிக்கைக்குரிய வியாபாரி (மறுமையில்) நபிமார்களுடனும், உண்மையாளர்களுடனும், உயிர்த்தியாகம் செய்த ஷுஹதாக்களு டனும் இருப்பார். (நூல் : திர்மிதீ)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ مَرَّ عَلَي صُبْرَةِ طَعَامٍ، فَاَدْخَلَ يَدَهُ فِيْهَا، فَنَالَتْ اَصَابِعُهُ بَلَلاً، فَقَالَ: مَا هذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟ قَالَ: اَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُوْلَ اللهِﷺ قَالَ: أَفَلاَ جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّيْ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு உணவுக் குவியலைக் கடந்து சென்றார்கள். அதிலே தன் கையை விட்டார்கள். அவர்களுடைய விரல்களில் ஈரம் பட்டது. (அந்த உணவுக்காரரைப் பார்த்து) “உணவுக்குச் சொந்தக்காரரே! இது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! மழை நீர் இதில் விழுந்து விட்டது” என்று கூறினார். அதற்கு அவர்கள், “மக்கள் பார்க்கும் வண்ணம் இதை உணவுப் பொருளுக்கு மேலே வைத்திருக்க வேண்டாமா? யார் ஏமாற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்ல!” என்று கூறினார்கள்.. முஸ்லிம் 164

قَالَ كَانَ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ يُحَدِّثُ أَنَّ مَعْمَرًا، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنِ احْتَكَرَ فَهُوَ خَاطِئٌ ‏"‏ ‏.‏ فَقِيلَ لِسَعِيدٍ فَإِنَّكَ تَحْتَكِرُ قَالَ سَعِيدٌ إِنَّ مَعْمَرًا الَّذِي كَانَ يُحَدِّثُ هَذَا الْحَدِيثَ كَانَ يَحْتَكِرُ 

‘யார் விலையை ஏற்றுவதற்காக வியாபாரம் செய்யாமல் பதுக்கி வைக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 3012

【உண்மையே பேசு..】

✍🏻 அன்புள்ளவர்களே!  நாம் கலந்து கொள்ளும் ஒவ்வெரு நிக்காஹ்கிலும் கீழுள்ள வசனம் ஓதப்படுகிறது. "(எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்" என பறைசாற்றுகிறது ஆனால் நாம் இன்னும் தீமையான பேச்சுக்களை பேசி வருகிறோம்..

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَقُوْلُوْا قَوْلًا سَدِيْدًا ۙ‏

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். 33:70.

 يُّصْلِحْ لَـكُمْ اَعْمَالَـكُمْ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْؕ وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيْمًا‏

(அவ்வாறு செய்வீர்களாயின்) அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்குச் சீராக்கி வைப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; அன்றியும் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் எவர் வழிப்படுகிறாரோ, அவர் மகத்தான வெற்றி கொண்டு விட்டார். 33:71.

 أمَرَني خَليلي صلَّى اللهُ عليه وسلَّمَ بسَبعٍ: أمَرَني بحُبِّ المَساكينِ، والدُّنُوِّ منهم، وأمَرَني أنْ أنظُرَ إلى مَن هو دوني، ولا أنظُرَ إلى مَن هو فَوْقي، وأمَرَني أنْ أصِلَ الرحِمَ وإنْ أدبَرَتْ، وأمَرَني ألَّا أسأَلَ أحَدًا شيئًا، وأمَرَني أنْ أقولَ بالحقِّ، وإنْ كان مُرًّا، وأمَرَني ألَّا أخافَ في اللهِ لَومةَ لائمٍ، وأمَرَني أنْ أُكثِرَ من قولِ: لا حَولَ ولا قُوَّةَ إلَّا باللهِ؛ فإنَّهُنَّ من كَنزٍ تحتَ العَرشِ. ، وصححه ابن حبان 

அபூதர் (ரலி) சொல்கிறார்கள் என்னுடைய உற்ற நண்பர் -நபி (ஸல்) அவர்கள் எனக்கு  ஏழு விஷயங்களை செய்து வரும்படி கட்டளையிட்டார்கள் அதில் ஒன்று தான் "எப்போதும் உண்மையே பேசு; அது மற்றவர்களுக்கு கசப்பாக இருந்தாலும் சரியே".  ; அஹ்மது 21415.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْضَلُ الْجِهَادِ كَلِمَةُ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ ‏"‏ ‏.‏ أَوْ ‏"‏ أَمِيرٍ جَائِرٍ"‏ ‏(‏‏(‏رواه أبو داود، والترمذي وقال‏:‏ حديث حسن‏)‏‏)‏‏.‏

போரில் சிறந்தது அநீதக்கார அரசனிடம் நீத்ததை எடுத்துக் கூறுவதுதான். அபுதாவூத் 4344.

عَرَضَ لرسولِ اللَّهِ - صلَّى اللَّهُ عليهِ وعلى آلِهِ وسلَّمَ - رجلٌ عندَ الجَمرةِ الأولى فقالَ : يا رسولَ اللَّهِ أيُّ الجِهادِ أفضَلُ ؟ فسَكتَ عنهُ فلمَّا رأى الجمرةَ الثَّانيةَ ، سألَه فسَكتَ عنهُ ، فلمَّا رمى جَمرةَ العقَبةِ وضعَ رِجلَه في الغرزِ ليركبَ قالَ : أينَ السَّائلُ ؟ قالَ : أنا يا رسولَ اللَّهِ قالَ : كَلِمةُ حقٍّ عندَ سلطانٍ جائرٍ (‏‏(‏رواه النسائي بإسناد صحيح‏)‏‏)‏‏.‏

நபி ஸல் அவர்கள் ஓட்டகையின் மீது ஏற சேனத்தில் தன் காலை வைத்த போது ஒரு மனிதர் "போரில் சிறந்தது எது? எனக் கேட்டார். அதற்க்கு அநீதக்கார அரசனுக்கு முன் நீத்ததை [சத்தியத்தை] எடுத்துரைப்பதாகும்.. நஸாயி

حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يُكْتَبَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ كَذَّابًا رواه مسلم

உண்மையே பேசுங்கள். உண்மை நன்மைக்கு வழிகாட்டும். நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார்; அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் “வாய்மையாளர்’ (ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். பொய் பேசாதீர்கள். பொய் தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரக நெருப்புக்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக்கொண்டே இருப்பார்; அதைத் தேர்ந்தெடுத்துப் பேசிவருவார். இறுதியில் அல்லாஹ்விடம் “பொய்யர்’ எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.  முஸ்லிம் (5083)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத்தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’.

நபிகள் குறிப்பிட்ட அந்த ஆறு விஷயங்கள் இதுதான்:

1. நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள், 2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள், 3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், 4. உங்களின் கற்புகளை பேணிக் காத்துக்கொள்ளுங்கள், 5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், 6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள். [ முஸ்லிம்]

【உண்மை பேசக்கூடியவர்களுக்கு இறை மன்னிப்பு வழங்கப்படுகிறது.]

 اِنَّ الْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمٰتِ وَالْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ وَالْقٰنِتِيْنَ وَالْقٰنِتٰتِ وَالصّٰدِقِيْنَ وَالصّٰدِقٰتِ وَالصّٰبِرِيْنَ وَالصّٰبِرٰتِ وَالْخٰشِعِيْنَ وَالْخٰشِعٰتِ وَالْمُتَصَدِّقِيْنَ وَ الْمُتَصَدِّقٰتِ وَالصَّآٮِٕمِيْنَ وَالصّٰٓٮِٕمٰتِ وَالْحٰفِظِيْنَ فُرُوْجَهُمْ وَالْحٰـفِظٰتِ وَالذّٰكِرِيْنَ اللّٰهَ كَثِيْرًا وَّ الذّٰكِرٰتِ ۙ اَعَدَّ اللّٰهُ لَهُمْ مَّغْفِرَةً وَّاَجْرًا عَظِيْمًا‏

நிச்சயமாக முஸ்லிம்களான ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசும் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.33:35.

[உண்மை என்றால் என்ன ?]

உண்மை என்பது பார்த்ததைப் பார்த்தப்படி கூறுதல், கேட்டதைக் கேட்டப்படி கூறுதல், பேசியதைப் பேசியபடி கூறுதல், நுகர்ந்ததை அப்படியே கூறுதல், உணர்ந்ததை (உடலால்) உணர்ந்தபடி கூறுதல்.

வாழ்வில் இதனைக் கடைபிடித்தால் நம் மதிப்பு உயரும் என்பது உண்மை. உண்மையே பேசி வருபவருக்கு மதிப்பு அதிகம். ஒரு முறை பொய் பேசி விட்டால் திரும்ப அவர் உண்மை பேசினாலும் நம்ப மறுப்பார்கள். பல நூற்றாண்டுகள் கடந்த பின்னும் நாயகம் ﷺ அவர்களை இந்த உலகம் போற்றக் காரணம் அவர்கள் வாழ்வில் கடைபிடித்த நேர்மை, உண்மைதான்.

பொறமை குணத்தைத் தடுக்க உண்மை பேச வேண்டும். புகழ்பெற உண்மை பேச வேண்டும். கோபத்தைத் தடுக்க உண்மை பேச வேண்டும், தீய பழக்கங்களை விரட்ட உண்மை பேச வேண்டும், அறத்தின் பயனை அடைய உண்மை பேச வேண்டும், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு மறைய உண்மை பேச வேண்டும்,

நண்பர்களுடன் உறவை வளர்க்க உண்மை பேச வேண்டும், மனத்தூய்மைக்கு உண்மை பேச வேண்டும், காமத்தை விட்டு விட உண்மை பேச வேண்டும், சான்றோர்க்கு விளக்கமாக உண்மை பேச வேண்டும், குடும்ப நன்மைக்கு உண்மை பேச வேண்டும், உலக நன்மைக்கு உண்மை பேச வேண்டும், அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்த உண்மை பேச வேண்டும்.

【உண்மைக்கும் - பொய்யுக்கும் அழகிய வித்தியாசம்】

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291) [திருவள்ளுவர்]

பொருள்: எந்த ஒரு உயிருக்கும் தீங்கு விளைவிக்காத சொற்களைப் பேசுவதே வாய்மை

தோற்பது போல தோன்றினாலும், இறுதியில் வாய்மை தான் வெல்லும். நன்மையான பலனே கிடைக்கும்.

எப்போதும் உண்மையே பேசுங்கள்..

நீங்கள் பொய் பேசினால் அந்த பொய்யை நீங்கள் காப்பாற்ற வேண்டும்..

அதேநேரம் நீங்கள் உண்மை பேசினால் அந்த உண்மை உங்களை காப்பாற்றும்..

ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டும்..

ஒரு உண்மையை சொல்ல அப்படி எதுவும் செய்ய வேண்டியதில்லை..

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் ஆனால் தர்மமே வெல்லும்”

இது எல்லோருக்கும் பொருந்தும்.. தாமதமாக கிடைத்தாலும் தர்மத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு..

உண்மை பேசுவதில் இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால்,


நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை.. உண்மை என்றும் மாறப்போவதில்லை..


பொய் சொன்னால்தான், யாரிடம் என்ன சொன்னோம், எங்கே சொன்னோம் என்றெல்லாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்..


இதை என் வேண்டுகோள் என்றுகூட எடுத்துக் கொள்ளுங்கள்.. 


எப்போதும் உண்மையையே பேசுங்கள்.. உங்கள் மனதிற்கு உண்மையாய் இருங்கள்.. பொய்யாக நடிக்காதீர்கள்.. மனதிற்கு பிடிக்காததை செய்ய வேண்டாம்.. அது அனைவருக்கும் வருத்தத்தையே தரும்..


வாழ்க்கை என்பது ஒருமுறைதான்.. அதை நன்றாக வாழ்ந்தோம் என்ற மன நிம்மதியை நீங்களே உங்களுக்கு தாருங்கள்..

【குழந்தைகளிடம் வாய்மையை கற்றுக் கொடுத்தல்..】

✍🏻 அன்புள்ளவர்களே! ஒரு முஸ்லிம் எந்நிலையிலும் உண்மையே பேச வேண்டும். உண்மைக்குப் புறம்பாகப் பேசினால் இழி செயலுக்கு தள்ளி விடப்படுவர் என இஸ்லாம் இயம்புகிறது. நபிகள் நாயகம் (ஸல்), அனைத்து நபிமார்கள், நபித் தோழர்கள், கலீஃபாக்கள், இறை நேசர்கள் ஆகிய அனைவரும் மக்களுக்கு எதை எடுத்துரைத்தார்களோ, அதனையே தங்களது வாழ்வில் செயலாக்கிக் காட்டினார்கள்.

عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ، وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ، وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا، وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ، وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ، وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ، حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا "".

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும், நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும. ஒருவர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் 'வாய்மையாளர்' (சித்தீக் எனும் பெயருக்கு உரியவர்) ஆம்விடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் 'பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். புகாரி 6094 

பெற்ற பிள்ளைகளிடம் எப்படிப் பண்போடும், அன்போடும் நடக்க வேண்டும் என்றும்,குழந்தைகளை ஏமாற்றவே கூடாது என்கிற உணர்வினைப் பற்றியும் நபிகளார் நமக்கெல்லாம் சொல்லிய உணர்வூட்டும் உபதேசத்தை இங்கே காண்போம்.

عَبْدُ الله بنُ عامِرٍ رَضِيَ اللهُ عَنْه: "دَعَتْني أُمِّي يومًا"، أي: نادَتْني أُمِّي ذاتَ يومٍ، وذلك وهو صغيرٌ، "ورسولُ اللهِ صلَّى اللهُ عليه وسلَّم قاعِدٌ في بَيتِنا، فقالت: ها"، أي: تُنادي عليهِ، "تَعالَ أُعْطيكَ"، أي: أَقْبِلْ عِنْدي لأُعْطيَك شيئًا، ولم تُسمِّ هذا الشَّيءَ، فقال لها رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم: "وما أَرَدْتِ أنْ تُعْطيهِ؟"، أي: اسْتَوقَفَها النَّبيُّ صلَّى اللهُ عليه وسلَّم مُسْتَبينًا عن صِدْقِ وَعْدِها لابنِها ومُحايَلتِها لَه، قالت: "أُعْطيه تَمْرًا"، أي: أَرادَتْ أنْ تُعطيَه تَمْرًا، فقال لها رسولُ الله صلَّى اللهُ عليه وسلَّم: "أمَا إنَّكِ لو لَمْ تُعطيه شيئًا كُتِبَتْ عليكِ كَذِبةً"،.

என்னுடைய தாய் எனக்கு ஒன்று தறுவதாக கூறி என்னை அழைத்தார்கள் அந்த சமயம் நபியவர்களும் எங்களுடைய வீட்டில்தான் இருந்தார்கள் இதைக்கேட்ட நபி ( ஸல்) அவர்கள் நீ உன்மகனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நாடித்தான் அழைத்தீரா? என்றார்கள் ஆம் ஒரு பேரித்தம்பழம் கொடுக்க நாடியுள்ளேன் என்று என் தாய் கூறியதும் (அப்படியானால் சரி) நீ எதையும் கொடுக்கவில்லையானால் பொய் சொன்ன குற்றம் உமக்கு வந்து சேரும் என்றார்கள். அபூதாவூது 4991

 عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيْرٍ ؓ اَنَّ اَبَاهُ اَتَي بِهِ اِلَي رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَ: اِنِّيْ نَحَلْتُ اِبْنِيْ هذَا غُلاَمًا، فَقَالَ: اَكُلَّ وَلدِكَ نَحَلْتَ مِثْلَهُ؟ قَالَ: لاَ، قَالَ: فَاَرْجِعْهُ. رواه البخاري 

ஹஜ்ரத் நுஃமானிப்னு பஷீர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், என்னுடைய தந்தை என்னை அழைத்துக் கொண்டு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்குச் சென்றார்கள், என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவ்வாறே உமது மற்ற பிள்ளைகளுக்கும் கொடுத்தீரா?'' என அவரிடம் கேட்க அவர், இல்லை'' என்றார், அடிமையைத் திரும்ப பெற்றுக் கொள்ளும்!'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2587)

தெளிவுரை:- பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குவதிலும் சரிசமமாக நடந்து கொள்ள வேண்டுமென்று இந்த ஹதீஸிலிருந்து தெரியவருகிறது.

ஒரு குழந்தை தன் தாயிடம் நற்பண்புகளைக் கற்றுக்கொண்ட பின் எக்காரணத்தைக் கொண்டும் தமது வாழ்வில் எந்நிலையிலும் பொய்யுரைக்காது. இதற்கு இறைநேசர் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரலி) அவர்களது வாழ்வில் நடந்த சம்பவமே சாட்சி.

இறைநேசர் அவர்களின் தாயார் தனது மகனை மேல் படிப்பிற்காக பட்டணம் அனுப்பி வைத்தார். படிப்புச் செலவுக்கு நாற்பது தங்கக் காசுகளை அவரது சட்டைப் பையில் வைத்து தைத்து அனுப்பும்போது, ""மகனே! நீ எந்நிலையிலும், எவரிடமும் "பொய்'யே பேசக்கூடாது. உண்மையை மட்டும்தான் பேச வேண்டும்'' என அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார்.

வியாபாரக் கூட்டத்தினரோடு பட்டணம் சென்றபோது, வழியில் கொள்ளைக் கூட்டத்தினர், வழி மறித்து அவர்களைத் தடுத்து நிறுத்திவிட்டனர். ஒரு கொள்ளையன் சிறுவரிடம், "உன்னிடம் என்ன இருக்கிறது?'' என்று கேட்டான்.

""என்னிடம் நாற்பது தங்கக் காசுகள் இருக்கின்றன'' எனச் சிறுவன் கூறியவுடன், தனது தலைவரிடம் சென்று சொன்னான் அந்தக் கொள்ளையன்.

"நீ வைத்திருந்த "தங்கக்காசுகள்' வெளியே தெரியாமல்தானே இருந்தது. ஏன் உண்மையைக் கூறினாய்?'' எனத் தலைவன் கேட்டதும், ""நீ எந்நிலையிலும், எவரிடமும் பொய் பேசாதே! என்று எனது தாயார் அறிவுரை கூறி அனுப்பினார். எனவே உண்மையைச் சொன்னேன்'' என்றான் சிறுவன்.

சிறுவனின் கூற்றைக் கேட்ட கொள்ளையர் தலைவன் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். "ஒரு தாய் கூறிய அறிவுரையை ஏற்று உண்மையைக் கூறிய சிறுவன் எங்கே? ஊரை அடித்து உலையில் போடும் நாம் எங்கே?'' என தனக்குத் தானே கூறி, திருந்தி நேர் வழி பெற்றான் கொள்ளைக் கூட்டத் தலைவன் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது. எனவே, நமது குழந்தைகளுக்கு இதுபோன்ற பெரியோர்களின் உண்மை வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக் கூறுவோம். "வாய்மையே வெல்லும்' என்பதால் உண்மையை மட்டுமே அவர்களை பேசச் செய்வோம்.

【வாய்மையில் சிறந்து விளங்கிய நபிகள் நாயகம் ﷺ】

✍🏻 அன்புள்ளவர்களே! ஒப்பந்தங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து நபி (வால்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் உண்மைக்கும், வாய்மைக்கும் சிறந்த முன்னுதாரணமாகத் தங்களின் வாழ்க்கையைக் கட்டமைத்திருந்தார்கள் என்பது தெரிய வரும். இறைவனின் தூதராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே மக்களால் நம்பிக்கைக்குரியவர்: உண்மையாளர் என்ற சிறப்பு பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தூதராகத் தேர்வு செய்யப்பட்டதற்குப் பிறகு மேலும் மெருகேற்றி தன்னுடைய வாய்மையை கன கச்சிதமாகக் காப்பாற்றினார்கள்.

மேலும், எதிரியிடத்திலும் கூட தனது வாக்குறுதியைக் காப்பாற்றி இருக்கின்றார்கள். இன்னும் சொல்வதாக இருந்தால், எதிரிகள் சில நேரங்களில் அநியாயமான முறையில் ஒப்பந்தங்களை எழுதினாலும் அதற்கும் சம்மதித்து  தலையசைத்திருக்கின்ற தருணமும் உண்டு .

அதற்குச் சிறந்த உதாரணமாக, இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்திய உடன்படிக்கை தான் ஹுதைபியா உடன்படிக்கை. எதிரிகளுக்கும். முஸ்லிம்களுக்கும் மத்தியில் நடைபெற்ற மாபெரும் ஒரு புரட்சிப் போர் என்றே சொல்லலாம். இந்த ஹுதைபியா உடன்படிக்கையை எதிரிகள் முஸ்லிம்களிடத்தில் கடுகளவு கூட ஈவு இரக்கமின்றி, அநியாயமாகவும், அக்கிரமமாகவும் நிறைவேற்றத் துடித்தார்கள்.

சுஹைல் பின் அம்ர் வந்து, “(ஏட்டைக் கொண்டு வாருங்கள். உங்களுக்கும் எங்களுக்குமிடையிலான (சமாதான ஒப்பந்தத்திற்கான) பத்திரம் எழுதுவோம். என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் எழுத்தரை அழைத்தார்கள். பின்னர், பேரருளாளனும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்… என்று சமாதான ஒப்பந்தத்திற்கான வாசகத்தை நபியவர்கள் சொன்னார்கள்.

அதற்கு சுஹைல், ரஹ்மான் கருணையன்புடையோன்’ என்பது என்ன என்று எனக்குத் தெரியாது. ஆயினும், இறைவார் உன் திருப்பெயரால்…’ என்று நீங்கள் முன்பு எழுதிக் கொண்டிருந்ததைப் போல் தான் நான் எழுதுவேன்” என்றார். முஸ்லிம்கள், அல்லாஹ்வின் மீதாணையாக ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவற்ற அருளாள்னும் கருணையன்புடையோனுமான அல்லாஹ்வின் திருப்பெயரால்’ என்றுதான் இதை எழுது வோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “பிஸ்மிக்க அல்லாஹம்ம இறைவா உன் திருப்பெயரால்’ என்றே எழுதுங்கள்” என்று சொன்னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், “இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மது அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம்” என்று (எழுதும்படி வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் இறையில்லத்திற்கு வரவிடாமல் உங்களைத் தடுத்திருக்கவும் மாட்டோம்; உங்களுடன் போரிட்டிருக்கவும் மாட்டோம். மாறாக, ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ், அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்று எழுதுங்கள்” என்று கூறினார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்வதாக நீங்கள் கருதினாலும் நிச்சயம் நான் அல்லாஹ்வின் தூதர் தான். இருந்தாலும் உங்கள் விருப்பப்படி) ‘முஹம்மத் பின் அப்தில்லாஹ் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது’ என்றே எழுதுங்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் தகாரறு செய்யாமல் விட்டுக் கொடுத்து ஒத்துப் போய்விட்டதற்குக் காரணம் அவர்கள், அல்லாஹ்வினால் புனிதமானவையாக அறிவிக்கப்பட்ட மக்கா நகரத்தை கண்ணியப் படுத்துகின்ற எந்த ஒரு திட்டத்தை அவர்கள் என்னிடம் கேட்டாலும் அதை அவர்களுக்கு நான் (வகுத்துக்) கொடுப்பேன்”என்று முன்பே சொல்லியிருந்ததை நிறைவேற்றுவதற்காகத் தான்.

ஹுதைபியா உடன்படிக்கையில் எதிரிகள், முஸ்லிம்களை உச்சகட்ட ஆத்திரத்தையும் கோபத்தையும் கிளப்புகின்ற அளவுக்கு சில காரியங்களை அரங்கேற்றினாலும் அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வாக்குறுதியைக் காப்பாற்ற மவுனம் காக்கிறார்கள்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியில்..

பிறகு சுஹைலுக்கு நபி (ஸல்) அவர்கள், “எங்களை (இந்த ஆண்டு) இறையில்லத்திற்குச் செல்ல விடாமலும் அதை நாங்கள் தவாஃப் செய்ய விடாமலும் தடுக்கக் கூடாது என்று (வாசகம்) சொன்னார்கள். உடனே சுஹைல், “அல்லாஹ்வின் மீதாணையாக! (இதை ஏற்க) முடியாது. (இந்த ஆண்டே உம்ரா செய்ய நாங்கள் உங்களுக்கு அனுமதியளித்தான்) “நாங்கள் உங்கள் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து விட்டோம்” என்று அரபுகள் பேசிக் கொள்வார்கள்.

ஆயினும், வருகிற ஆண்டில் நீங்கள் உம்ரா செய்து கொள்ளலாம்” என்று கூறினார். அவ்வாறே எழுதினார். மேலும் சுஹைல், “எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி அவரை எங்களிடம் நீங்கள் திருப்பியனுப்பி விட வேண்டும். என்று நிபந்தனையிட்டார். முஸ்லிம்கள் “சுப்ஹானல்லாஹ்! அவர் முஸ்லிமாக (எங்களிடம்) வந்திருக்க,அவரை எப்படி இணைவப்பவர்களிடம் திருப்பியனுப்புவது?” என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவர்கள் இவ்வாறு ஒப்பந்தம் பேசி கொண்டிருக்கும் போது குறைஷிகளின் தரப்பிலிருந்து ஒப்பந்தம் பேச வந்த) சுஹைல் பின் அம்ருடைய மகன் அஜந்தா தம் கால்கள் பிணைக்கப் பட்டிருக்க) விலங்குகளுடன் தத்தித் தத்தி நடந்து வந்தார்கள். அவர்கள் மக்காவின் கீழ்ப் பகுதியிலிருந்து தப்பி வந்து, முஸ்லிம்களிடையே வந்து தஞ்சம் புகுந்தார்கள். உடனே (அவரது தந்தையான) சுஹைல், “முஹம்மது (ஒப்பந்தப் படி) முதலாவதாக, இவரை எங்களிடம் ஒப்படைக்கும்படி உங்களிடம் கோருகிறேன்” என்றார். அதற்கு நமி (ஸல்) அவர்கள், “நாம் இன்னும் இந்த நிபந்தனையை எழுதி முடிக்கவில்லையே என்று பதிலளித்தார்கள்.

அதற்கு சுஹைல், அப்படியென்றால், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களிடம் நான் எந்த அடிப்படையிலும் ஒரு போதும் சமாதானம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் இவரை மட்டுமாவது தான் திருப்பியனுப்பாமலிருக்க எனக்கு அனுமதி தாருங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு சுகைல், நான் உங்களுக்கு அனுமதி தர மாட்டேன் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை , இவரை மட்டுமாவது திருப்பியனுப்பாமல் நிறுத்திக் கொள்ள எனக்கு அனுமன் நிதியளியுங்கள் என்று கூறினார்கள்

அதற்கு சுஹைல், “நாள் அனுமதியளிக்கப் போவதில்லை என்று கூறினார். மிக்ரஸ் என்பவர் நாம்- அதற்கு உங்களுக்கு அனுமதியளித்து விட்டோம்” என்று கூறினார். அபூஜந்தல் (ரலி) அவர்கள், “முஸ்லிம்களே நான் முஸ்லிமாக உங்களிடம் வந்திருக்க, என்னை இணை வைப்பவர்களிடம் திருப்பியனுப்புகிறீர்களா? தான் சந்தித்த துன்பங்களை நீங்கள் சிந்தித்து) பார்க்க மாட்டீர்களா என்று கேட்டார். அவர் இறை வழியில் கடுமையாக வேதனை செய்யப்பட்டிருந்தார். புகாரி 2731

இந்த உடன்படிக்கையில் எதிரிகளின் ஒப்பந்த மீறல் எந்த அளவுக்கு அத்து மீறி நடந்து இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

  • நபியவர்கள் தமது சொந்த ஊருக்குச் சென்று வருவதற்குப் பல நிபந்தனைகள் எதிரிகளால் அத்துமீறி போடப்படுகின்றது.
  • மூன்று நாட்களுக்கு மேலாக மக்காவில் இருக்கக் கூடாது என்றும் ஒப்பந்தம் போடப்படுகின்றது.  [ முஸ்லிம் 3653)
  • ஒப்பந்தத்திற்கு ஏடு கொண்டு வரப்பட்டு முஸ்லிம்கள் முஷ்ரிக்குகள் என்று இருவருக்குமான ஒப்பந்தம் எழுதப்படுகிறது
  • கருணையாளன் என்று இறைவனுக்கு இருக்கக் கூடிய குணத்தை ஒப்பந்தத்தின் ஆரம்பத்தில் எழுத மறுக்கப்படுகின்றது.
  • அல்லாஹ்வின் தூதர் முஹம்மது என்று ஒப்பந்தத்தில் எழுதக் கூடாது என்று மறுக்கப்படுகின்றது.
  • புனிதத்தலமான கஃபா ஆலயத்திற்கு முஸ்லிம்கள் செல்வதற்குத் தடுக்கப்படுகிறது.
  • உம்ரா நிறைவேற்றுவதற்கு இஹ்ராம் ஆடை அணிந்து தயார் நிலையில் தயார் நிலையில் முஸ்லிம்களில் பலர் இருந்தார்கள். ஆனாலும், முஸ்லிம்கள் உம்ராவை நிறைவேற்றுவதை விட்டும் தடுக்க படுகிறார்கள்.
  • மக்காவிலிருந்து மக்காவிலிருந்து ஒருவர் மதீனாவுக்கு முஸ்லிமாக மாறி இடம் பெயர்ந்தாலும் அவரை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்ற அநியாயமான ஒப்பந்தம்.
  • ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பாகவே அபூஜந்தல் என்ற தோழரை கையகப்படுத்துகின்றார்கள்.

அபூ ஜந்தல் என்ற அந்த நபித்தோழர் ஏற்கனவே இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக் கொண்டு விட்டார். அவர் கால்களால் தத்தி தத்தி நடந்து வந்து முஸ்லிம்களே! காப்பாற்றுங்கள்! என்று கதறுகிறார்.

ஆனாலும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளுக்குக் கட்டுப்பட்டு அபஜந்தலைத் இருப்பி ஒப்படைக்கின்றார்கள். நான் இஸ்லாத்தை ஏற்ற பிறகும் என்னை திருப்பி அனுப்புகின்றீர்களா? நான் பட்ட சிரமம் துன்பம்! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்க மாட்டார்கள்? என்று கதறித் துடிக்கின்றனர். அந்தத் தோழர்.

ஆனாலும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அல்லாஹ்வின் தூதர் அவர்கள் எதிரிகளுக்கு கட்டுபட்டு அபூஜன்தலைத்  திருப்பி ஒப்படைக்கின்றார்கள். இந்தச் செய்தி மொத்த ஒட்டு உலகத்தில் ஒப்பந்தத்தை அநியாயமாக மீறிக் கொண்டிருக்கின்ற அத்தனை நபர்களுக்கும் சிறந்த பாடமாக அமைந்திருக்கின்றது. அநியாயமாக எதிரிகள் பல கோரிக்கைகளை ஒப்பந்தங்கள் எழுதி ஒப்பந்த மீறலில் ஈடுபடும் போது கூட கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நபி (ஸல்) அவர்கள் செலுத்திய மௌனம் அலாதியானது.

[வாய்மைக்கு சிறந்த எடுத்துகாட்டு ]

✍🏻 அன்புள்ளவர்களே! நபி (ஸல்) அவர்கள் வாய்மைகுச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்துள்ளார்கள். மேலும் எதிரிகளுக்கும் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று தன்னுடைய தோழர்களுக்கு நடத்திய மெய்சிலிர்க்க வைக்கின்ற பாடம் நம்மை விழி உயர்த்திப் பார்க்க வைக்கின்றது. வாய்மைப் பேணுவதிலும்,வாக்குறுதியை நிறைவேற்றுவதிலும் நபி (ஸல்) அவர்கள் எந்தளவிற்கு உச்சகட்டத்தில் இருந்துள்ளார்கள். என்பதற்கு கீழ்க்கண்ட செய்தி அற்புதமான சான்று.

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பத்ருப் போரில் கலந்துகொள்ளாததற்குக் காரணம் யாதெனில், நானும் என் தந்தை ஹுசைல் (எனும் அல்யமான்) அவர்களும் (பத்ர் நோக்கிப்) புறப்பட்டோம். அப்போது குறைஷி இறைமறுப்பாளர்கள் எங்களைப் பிடித்துக்கொண்டனர். “நீங்கள் முஹம்ம(துடன் சேர்ந்து எங்களுக்கெதிராகப் போர் செய்வ)தை நாடித்தானே செல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நாங்கள் “(இல்லை) மதீனாவை நோக்கியே செல்கிறோம்” என்று (பேச்சை மாற்றிச்) சொன்னோம்.

அப்போது குறைஷியர் “நாங்கள் மதீனாவுக்கே திரும்பிவிட வேண்டும்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து (குறைஷியருக்கெதிராக) போரிடக் கூடாது” என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு எங்களிடம் வாக்குறுதி பெற்றுக் கொண்டனர். நாங்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவித்தோம். அப்போது அவர்கள், “நீங்கள் இருவரும் (மதீனாவுக்கே) திரும்பிச் செல்லுங்கள். நாம் அவர்களுக்கு ஆதரவாக அவர்களது வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களுக்கெதிராக அல்லாஹ்விடம் உதவி கோருவோம்” என்று சொன்னார்கள். முஸ்லிம்: 3661. 

எதிரிகள் இரண்டு தோழர்களைப் பிடித்து நீங்கள் எங்களுக்கு எதிராகப் போர் செய்யச் செல்கிறீர்களா.? என்று கேட்கின்றார்கள். இல்லை நாங்கள் மதீனாவுக்குச் செல்கின்றோம். என்று தப்பிப்பதற்காக பேச்சை மாற்றிச் சொல்கின்றார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அந்த இரண்டு தோழர்களும் நடந்த செய்தியைச சமர்பித்த போது அதெல்லாம் பார்த்துக் கொள்ளாம்.!எதிரித்தானே! என்று எதிரிதானே! என்று அலச்சியப்படுத்தி விடாமல் நீங்கள் எதிரிகளுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள், நீங்கள் போருக்கு வர வேண்டாம்.என்று சொல்லி நம்முடைய மேனியெல்லாம் சிலிர்க்கிற அளவுக்கு உச்சகட்ட பதிலைக் கூறி உண்மையான வாய்மையாளாறாகாத் திகழ்ந்திருக்கின்றார்கள்.

【நீதம் நிறைந்த உமர் ரலி‍-அன்ஹு அவர்களின் வாழ்வு..】

✍🏻 அன்புள்ளவர்களே! அபூபக்கரின் மறைவிக்குப் பிறகு உலகமே வியக்குமளவிற்கு ஆட்சி புரிந்தவர்கள் உமர் ரலி. இவர்களது ஆட்சியில்தான் அனாதைகள், ஆதரவற்றோர், முதியோர்கள், விதவைகள், வறுமையில் வாடியவர்களுக்கெல்லாம் அரசு உதவித் திட்டங்கள் ஆரம்பிக்கப் பட்டது. உமரின் ஆட்சியில் தான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் எல்லைகள் விரிய ஆரம்பித்தன.ஆங்கிலேய ஆட்சிமுறைகள் அனைத்தும் உமரைப் பார்த்து காப்பியடிக்கப் பட்டவை தானே!

உமர் ரலியின் வாழ்வில் ஒருநாள், யுத்தப் பொருட்கள் பங்கீடு செய்யப்பட்டன. அதில் யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் தலா ஒரு போர்வை கிடைத்தது. ஒருநாள் உமர் ரலி அவர்கள் ஜும்ஆ தொழ வைப்பதற்காக பள்ளிக்கு வந்தார்கள், அவர்களது மேனியில் இரண்டு போர்வை இருந்து. இதைப் பார்த்த சஹாபிகளில் ஒருவர், உமரே! நில்லும், எல்லோருக்கும் தலா ஒரு போர்வைதானே  கிடைத்தது, உங்களுக்கு மட்டும் எப்படி இரண்டு போர்வை கிடைத்தது? இதற்கு நீங்கள் பதில் சொல்ல வில்லையானால் உங்கள் பின்னால் இன்று நாங்கள் தொழப் போவதில்லை என்றார். 

 

இதைக் கேட்டதும் உமர் ரலிக்கு கோபம் கொப்பளிக்க வில்லை, பழிவாங்கும் எண்ணம் துளிகூட இல்லை,கண்ணியக் குறைவை ஏற்படுத்தும் பெண்ணியச் சிந்தனை  இல்லை.அமைதியாய் இதற்கு என்மகன் பதில் சொல்வார் என்றார்கள். உடனே அப்துல்லா ஹிப்னு உமர் (ரலி) கூறினார்கள்.அன்பரே! நானும் அந்த யுத்தத்தில் கலந்து கொண்டேன்,என்பங்கிற்கும் ஒரு போர்வைக் கிடைத்தது.   அதை என் தந்தைக்கு கொடுத்து விட்டேன் என்றார். அதன் பிறகுதான் தொழுகை நடத்தப் பட்டது.    ‌خطبات منور ..

 

பசியால் ஒரு நாய் இறந்தால்கூட அதற்கும் இந்த உமர் நாளை பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றார்கள். நீதம் தவறாத உமர் ரலி அவர்கள்.

【நீதிக்கு முன் அனைவரும் சமமே.】

لقي العباس يوماً, فقال له: يا عباس لقد سمعت رسول الله صلَّى الله عليه وسلَّم قبل موته يريد أن يزيد في المسجد، وإن دارك قريبة من المسجد، فاعطنا إيّاها نزدها فيه، وأقطع لك أوسع منها مع التعويض،

 فقال له العباس: لا أفعل، قال عمر: إذاً أغلبك عليها ، أنا صاحب السلطة ، فأصدر لها أمرَ استملاك، فأجابه العباس: ليس ذلك لك، فاجعل بيني وبينك من يقضي بالحق، فقال عمر: من تختار؟, قال العباس: حذيفة بن اليمان،

 وبدلاً أن يستدعي سيدنا عمر حذيفة إلى مجلسه، انتقل عمر والعباس إليه، لماذا؟ لأن القاضي يؤتى ولا يأتي، والعلم يؤتى ولا يأتي، هكذا الأدب،

 حذيفة الآن يمثل القضاء، وأحد الخصوم سيدنا عمر، خليفة المسلمين، وأمام حذيفة جلس عمر والعباس، وقصا عليه الخلاف الذي بينهما،

 فقال حذيفة: سمعت أن نبي الله داود عليه السلام أراد أن يزيد في بيت المقدس، فوجد بيتاً قريبـاً من المسجد، وكان هذا البيت ليتيم، فطلبه منه فأبى، فأراد داود أن يأخذه قهراً، فأوحى الله إليه أن أنزه البيوت عن الظلم هو بيتي، فعدل داود، وتركه لصاحبه

، فالعباس نظر إلى عمر، وقال: ألا تزال تريد أن تغلبني على ذلك؟، فقال له عمر: لا والله,

 فقال العباس: ومع هذا, فقد أعطيتك الدار تزيدها في مسجد رسول الله عليه الصلاة والسلام، أنا سوف أعطيها لك من عندي تبرعاً، أما أن تغلبني عليها فلا تستطيع، وحذيفة هو القاضي بيننا .

உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு நாள் உமர் (ரலி) அவர்கள்,  அப்பாஸ் (ரலி) அவர்களை சந்திக்க அவர்களின் வீட்டிற்குச் சென்றார்கள். உரையாடலின் போது உமர் (ரலி) அவர்கள், அப்பாஸ் (ரலி) அவர்களிடம்  நபி {ஸல்} அவர்கள் தாங்கள் உயிரோடு இருக்கும் போதே மஸ்ஜிதுன் நபவீயை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள்.

ஆனால், அந்த விருப்பத்தை நிறைவு செய்யும் முன்னதாகவே அல்லாஹ்வின்  தூதர் {ஸல்} அவர்களை மரணம் தழுவிக் கொண்டது.

ஆகவே, நான் நபி {ஸல்} அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றலாம் என  நினைக்கிறேன்” என்று கூறினார்கள்.

அது கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள் ”ஓ தாராளமாக நிறைவேற்றுங்கள்!  இதையெல்லாமா என்னிடம் நீங்கள் கேட்பீர்கள்?” என்றார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் விஷயம் அதுவல்ல! மஸ்ஜிதுன் நபவீயை  விரிவாக்கம் செய்ய வேண்டுமானால் அதற்கு சுற்றியுள்ள இடங்கள் தேவைப்படுகிறது.

மஸ்ஜிதுன் நபவீயை ஒட்டினாற்போல் உங்களின் வீடும் இருக்கிறது;  விரிவாக்கம் செய்வதற்கு உங்களின் வீட்டை விட்டுக் கொடுத்தீர்களானால், அதற்கு சிறந்த, தகுதியான பகரத்தை உங்களுக்குத் தருவதாக நான் உறுதியளிக்கின்றேன்” என்று கூறினார்கள்.

இதைக் கேட்ட அப்பாஸ் (ரலி) அவர்கள் “இல்லை, என்னால் தர இயலாது”  என்று கூறி விட்டார்கள்.

இதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் “ஒன்றும் பிரச்சனையில்லை, நீங்கள் தர  மறுக்கிற போது ஆட்சியதிகாரத்தை வைத்து உமது நிலத்தை கையகப்படுத்த எமக்கு முழு சுதந்திரம் இருக்கிறது” என்று கூறினார்.

அதற்கு, அப்பாஸ் (ரலி) அவர்கள் “உம்முடைய அதிகாரத்திற்கு அதற்கான  சுதந்திரம் வழங்கப்பட வில்லை, உம்முடைய அதிகாரத்திற்கு அது அழகும் இல்லை” என்று கூறி விட்டு, என்னுடைய உரிமையை பறிக்கிற உம் அதிகாரத்திற்கெதிராக நான் வழக்கு தொடுக்கப் போகின்றேன்” என்றார்கள்.

”ஆட்சியாளர் நான் இருக்க எனக்கு எதிராக யாரிடம் வழக்கு தொடுப்பீர்? யார்  எம்மை அழைத்து விசாரிக்கத் தைரியம் படைத்தவர்கள்?” என்று கோபாவேசத்தோடு சீறவில்லை உமர் (ரலி) அவர்கள்.

அமைதியான குரலில் உமர் (ரலி) அவர்கள் “சரி! இந்த விவகாரத்தில் நீர் யாரை  நீதிபதியாக தேர்ந்தெடுக்கின்றீரோ அவர் வழங்கும் நீதிக்கு இந்த உமர் கட்டுப்படுவார்” என்று கூறினார்கள்.

அதற்கு, அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்க நபித்தோழர் ஹுதைஃபா இப்னு அல் யமான் (ரலி) அவர்களிடம் நாம் இருவரும் செல்வோம்” என்றார்கள்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். மஸ்ஜிதுன் நபவீ  முழுவதிலும் நபித்தோழர்கள் நிறைந்து காணப்பட்டனர்.

பின்னர் அப்பாஸ் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழைக்கப்பட்டு  அவர்களின் வாதப் பிரதிவாதங்களை கேட்டறிந்தார்கள் இடைக்கால சிறப்பு நீதிபதி ஹுதைஃபா (ரலி) அவர்கள்.

ஏனென்றால், ஃகலீஃபா அவர்கள் தான் இஸ்லாமிய தேசத்தின் பிரதான நீதிபதி,  அதற்கு அடுத்து அந்தந்த மாகாண ஆளுநர்கள் நீதிபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

இப்போது, பிரதான நீதிபதி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களின் மீது தான்  அப்பாஸ் (ரலி) அதிகார துஷ்பிரயோக வழக்கு தொடர்ந்திருந்தார்கள்.

முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஹுதைஃபா (ரலி) அவர்கள் வழக்கு  குறித்து விசாரித்தார்கள்.

பின்னர், இந்தக் குற்றச்சாட்டு குறித்து உமர் அவர்களே! உங்களின்  நிலைப்பாடு  என்ன? என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “நீதிபதி அவர்களே! நான் என் சொந்த  காரியத்திற்காக நிலம் கையகப்படுத்த என் அதிகாரத்தைப் பயன் படுத்துவேன்! என்று  கூறவில்லை.

மாறாக, முஃமின்களோடு தொடர்புடைய ஒரு விவகாரத்தில், அல்லாஹ்வின்  இல்லம் சம்பத்தப்பட்ட ஓர் விஷயத்தில் அதுவும் முதலில் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அந்த இடத்திற்கு ஈடாக சிறந்த பகரம் செய்யப்படும் என்று வாக்குறுதி தந்தேன். அவர் மறுக்கவே, எனக்கு வழங்கப்பட்டிருக்கிற ஆட்சியதிகாரத்தின் துணை கொண்டு நான் உம் நிலத்தை கையகப்படுத்துவேன்” என்று கூறினேன்.

எனவே, நான் எப்படி குற்றமிழைத்தவனாக கருதப்படுவேன்!” என்று உமர் (ரலி)  அவர்கள் ஹுதைஃபா (ரலி) அவர்களைப் பார்த்துக் கேட்டார்கள்.

அதற்கு, ஹுதைஃபா (ரலி) அவர்கள் “உமர் அவர்களே! நபி {ஸல்} அவர்கள்  கூற நான் செவியேற்றிருக்கின்றேன் “அல்லாஹ்வின் தூதர் தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸ் பள்ளியை நிர்மாணிக்க ஆயத்தமான போது, இட விசாலத்திற்காக அருகே இருந்த ஓர் அநாதைச் சிறுவனுக்குச் சொந்தமான இடத்தை அவனின் அனுமதி பெறாமலே பள்ளியின் ஒரு பகுதியாகச் சேர்த்த போது அல்லாஹ் தம் தூதர் தாவூத் {அலை} அவர்களை அழைத்துச் சொன்னானாம் “ஓ தாவூதே! அநியாயமாக அபகரிக்கப்பட்ட இடத்தை விட்டும் தூய்மையானதாக என்னை வணங்கும் இடம் அமைந்திருக்க வேண்டுமென்று” அதற்குப் பின்னர் அந்த இடத்தை விட்டு விட்டு தாவூத் {அலை} அவர்கள் பைத்துல் முகத்தஸை கட்டினார்கள்.”

உமரே! உம் நோக்கம் உயர்வாக இருப்பினும் அதைக் கையாண்ட விதம்  தவறானது! என்று கூறினார்கள்.

அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம் ”இதற்கு மேலும்  எம்மிடம் இருந்து நீர் வலுக்கட்டாயமாக எம் வீட்டை பறித்துக் கொள்வீரா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ஒரு போதும்  நான் உம்மிடம் அப்படி நடந்து கொள்ள மாட்டேன்” என உறுதி கூறினார்கள்.

அதற்குப் பிறகு, அப்பாஸ் (ரலி) அவர்கள் ”தங்களுடைய வீட்டை எந்தப்  பிரதிபலனும் வேண்டாம்” என்று கூறி ஆட்சியாளர் உமர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். அதன் பின்னர் மஸ்ஜிதுன் நபவீ விரிவாக்கம் செய்யப்பட்டது. ( நூல்: ஃகுலஃபாவுர் ரஸூல் {ஸல்}, பக்கம்:147 )

இங்கே, ஓர் ஆட்சியாளராய் இருந்தும் கூட உமர் (ரலி) அவர்கள் குற்றவாளிக்  கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். தமக்கு வழங்கப்படும் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வேன் என்றும் கூறினார்கள்.

ஏனெனில், இஸ்லாம் நீதி செலுத்துவதின் மீதும், நீதியின் அடிப்படையின் கீழ்  வாழுமாறும் எந்தளவு தூண்டியிருக்கிறது என்பதை உணர்ந்திருந்தார்கள்.

ஆகவே, நீதியோடு வாழ்வோம்! நீதி நிலை நாட்டப்பட உறுதுணையாக  இருப்போம்! நல்ல தீர்ப்புகள் வருகிற போது வரவேற்போம்!

【யூதனை இஸ்லாத்தில் நுழைய வைத்த நீதிபதி  சுரைஹின் தீர்ப்பு】

இஸ்லாத்தின் நான்காவது கலீபா அலி அவர்கள் காலத்தில் கூபா நகரத்தின் நீதிபதியாக இருந்தவர் அறிஞர் சுரைஹ்.

ஜனாதிபதி அலி அவர்களின் உருக்கு சட்டை ஒன்று தொலைந்து விட்டது

பல போர்களில் அலி அவர்கள் அந்த உருக்கு சட்டையை கேடையமாக பயன் படுத்தி உள்ளார் அவர் அதிகம் விரும்பும் ஒரு பொருளாக அந்த உருக்கு சட்டை இருந்தது

எந்த உருக்கு சட்டையை அலி அவர்கள் தொலைத்தார்களோ அதே உருக்கு சட்டை ஒரு யூதனின் கரத்தில் இருந்தது அந்த உருக்கு சட்டையை விற்பனை செய்வதற்காக அந்த யூதன் சந்தைக்கு கொண்டு வந்திருந்தார்

சந்தையில் யூதனின் கரத்தில் இருந்த உருக்கு சட்டையை அலி அவர்கள் கண்டதும் அது தமது உருக்கு சட்டை தான் என்று அறிந்து கொண்டு அந்த யூதனிடம் சென்று குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் அந்த உருக்கு சட்டையை தாம் தொலைத்துவிட்ட தகவலை சொல்லி தமக்கு உரிய உருக்கு சட்டையை திருப்பி தருமாறு ஜனாதிபதி அலி அவர்கள் வேண்டி கொண்டார்கள்

அந்த யூதனோ இல்லை இது எனக்கு உரியது என்று மறுத்து விட்டு இதை நீங்கள் பலவந்தமாக அடைய விரும்பினால் நான் நீதி மன்றம் செல்வேன் என்று யூதன் கூற ஜனாதிபதி அலி அவர்கள் அதை ஒப்பு கொண்டு நீதி மன்றம் சென்றார்கள்

வாதி ஜனாதிபதி அலி அவர்கள்

பிரதி வாதி ஜனாதிபதி அலி அவர்களின் ஆளுகையின் கீழ் வாழும் ஒரு சிறுபாண்மை சமுகத்தை சார்ந்த யூதன்

வழக்கு ஆரம்பமானது

நீதிபதி அறிஞர் சுரைஹ் அவர்கள் வழக்கு விசாரணையை தொடங்கினார்

ஜனாதிபதி அலி அவர்கள் தமது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்கள்

யூதன் தனது தரப்பு வாதத்தை எடுத்து வைத்தார்

இரு தரப்பு வாதங்களையும் கூர்ந்து கவனித்த நீதிபதி சுரைஹ் அவர்கள்

ஜனாதிபதி அலி அவர்களை நோக்கி அலி அவர்களே நீங்கள் உண்மையாளர் சத்தியத்தை தான் பேசுவீர்கள் என்பதை நான் அறிவேன் ஆனால் வழக்கு நீதிமன்றம் என வந்து விட்டால் நல்லவர் கெட்டவர் உண்மையாளன் பொய்யன் என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள முடியாது நீதிமன்ற வழக்குகளில் ஆதரங்களும் சாட்சிகளும் தான் பேசும் உருக்கு சட்டை குறிப்பிட்ட யூத சமூகத்தை சார்ந்த நண்பரின் கரத்தில் உள்ளது

அது உங்களுக்கு சொந்த மானது என்றால் அதற்கு சாட்சிகள் தேவை என நீதிபதி ஜனாதிபதி அலி அவர்களிடம் சொல்ல அலி அவர்களும் ஆம் அதற்கு என்னிடம் சாட்சி இருக்கிறது என கூறிவிட்டு குன்புர் என்ற ஒரு சகோதரரையும் தனது மகன் ஹஸனையும் சாட்சியாக விசாரிக்க சொல்கிறார்கள்ஜனாதிபதி அலி அவர்கள்

இங்கு குறுக்கிட்ட நீதிபதி சுரைஹ் அவர்கள் ஜனாதபதி அவர்களே நீங்கள் குறிப்பிட்ட இரு சாட்சிகளில் முதல் சாட்சியை நான் ஏற்று கொள்கிறேன் ஆனால் இரண்டாவது சாட்சியை என்னால் ஏற்று கொள்ள முடியாது மறுத்து விட்டார்கள்

நபிகள் நாயகத்தால் சுவனத்திற்கு சொந்த காரர் என புகழ்ந்துரைக்க பட்ட ஹஸன் அவர்களின் சாட்சியை நீங்கள் அங்கிகரிக்க மாட்டீர்களா,?

ஜனாதிபதி அலி அவர்கள் வினவ அதற்கு நீதிபதியின் பதில் இதோ

ஹஸன் அவர்கள் எங்களில் மிக சிறந்த மனிதர் சுவனத்திற்கு சொந்த காரர்
என்பதில் இரண்டு கருத்திற்கு இடம் இல்லை நான் ஹஸன் அவர்களின் சாட்சியை ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னது அவரின் மீதுள்ள மரியாதை குறைவினால் அல்ல தந்தைக்கு மகன் சொல்லும் சாட்சியை இந்த இடத்தில் அனுமதிக்க முடியாது என்ற காரணத்தினால் தான் என் விளக்கம் தந்தார்

இதை செவியுற்ற ஜனாதிபதி அலி அவர்கள் என்னிடம் வேறு சாட்சிகள் இல்லை உருக்கு சட்டையை நீங்களே வைத்து கொள்ளுங்கள் என அந்த யூதனிடம் கூறிவிட்டு நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்கள்

இது வரையிலும் இங்கு நடந்த வாத பிரதி வாதங்களை கூர்ந்து கவனித்து கொண்டிருந்த உருக்கு சட்டையில் கரத்தில் வைத்திருந்த யூதன்
இப்போது பேச ஆரம்பித்தார்

ஆம் இந்த உருக்கு சட்டை எனக்கு உரியதல்ல இது உண்மையில் ஜனாதிபதி அலி அவர்களுக்கு உரியது தான் என கூறி உருக்கு சட்டையை அலி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்

அதற்கு அவர் கூறிய முக்கிய காரணம் நான் இந்த நாட்டின் சிறுபாண்மை மதத்தை சார்ந்த ஒரு எழிய மனிதன் எனக்கு எதிராக நீதி மன்றத்திற்கு வந்தவர் இந்த நாட்டின் ஜனாதிபதி

அலிஅவர்கள் ஜனாதிபதியாக இருந்தும் அவருக்கு முக்கியத்துவம் தராமல் நீதிபரிபாலனை ஆதரங்கள் சாட்சிகளின் அடிப்படையில் தான் அமையும் என்று நீதிபதி சுரைஹ் அவர்கள் கூறியது உண்மையாகவே என்னை ஈர்த்தது

இந்த மார்க்கம் சத்திய மார்க்கம் என்பதற்கு இந்த நீதிபரிபாலனை முறையே சிறந்த சான்றாக அமைந்துள்ளது என கூறினார்

இது ஒரு வரலாறு இந்த வரலாற்றில் பல பாடங்கள் புதைந்து கிடக்கின்றன

முதல் பாடம் இஸ்லாமிய குடியசின் நான்காவது ஜனாதிபதியின் வாழ்கை நிலை பொருளாதார நிலை ஒரு உருக்கு சட்டைக்காக வழக்கு தொடுக்கும் நிலையில் தான் இருந்திருக்கிறது.

இரண்டாவது பாடம் அரசையும் அதிகாரத்தையும் வைத்து கொண்டு ஊரை அடித்து உலையில் போட அவர்கள் கனவிலும் நினைத்தது இல்லை.

மூன்றாவது பாடம் இஸ்லாமிய ஆட்சியில் சிறு பாண்மை மக்கள் சிறப்பாக வாழ்ந்துள்ளனர் ஆட்சியாளரை எதிர்த்து வழக்கும் தொடரும் அளவிற்க்கு அவர்கள் முழு சுதந்திரமும் உரிமையும் பெற்று வாழ்நதுள்ளனர் .

நான்காவது பாடம் இஸ்லாமிய நீதி மதங்களை கடந்தது பாதிக்க பட்வன் எந்த மதத்தை சார்ச்தவனாக இருந்தாலும் அவனுக்கு இஸ்லாம் நீதி வழங்கும். 

இப்படியாக பல பாடங்களும் படிப்பினைகளும் நிறைந்ததாக இந்த வரலாறு அமைந்துள்ளது

【பொய் பேசுதல் மிகப் பெரிய பாவம்: -】

✍🏻 அன்புள்ளவர்களே! எங்கு நோக்கினும் பொய். எல்லா இடங்களிலும் பொய். ‘பொய் ஒரு குற்றமே அல்ல’ எனும் மனோபாவம் சமூகத்தின் அடிமனதில் கள்ளத்தனமாக உறைந்து கிடக்கிறது.

ஆட்சியாளர் முதல் அடிமட்டக் குடி மகன் வரை, நாடாளும் தலைவர் முதல் நடைபாதை வியாபாரி வரை, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் பொய் நீக்கமற நிறைந்து நிற்கிறது.

பொய்களால் கட்டமைக்கப்பட்ட சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொலைக்காட்சி விளம்பரங்கள் பொய் சொல்கின்றன. திரைக்காவிய நாயகர்கள் பொய் சொல்கின்றனர். அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களும் பொய் சொல்கின்றனர். அதிகாரத்தை அடைய விரும்புகின்றவர்களும் பொய் சொல்கின்றனர்.

புன்னகையிலும் பொய் ஒளிந்திருக்கிறது, கண்ணீரிலும் பொய் கலந்திருக்கிறது. யாரைத்தான் நம்புவதோ தெரியவில்லை. பொய்சூழ் உலகில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். உண்மை மகத்தானது என்பதைக்கூட பொய்யாகவே கூறிக்கொண்டிருக்கின்றோம்.

உண்மை என்பது தந்திரமோ மந்திரமோ அல்ல, அதுதான் வாழ்வின் ஆதாரம். இஸ்லாத்தைப் பொறுத்தவரை இந்த ஆதாரம் தான் ‘ஈமான்’ எனும் இறைநம்பிக்கை. இந்த இறைநம்பிக்கை எவ்வளவு தூரம் மனதில் வலுவாக உள்ளதோ அவ்வளவு தூரம் ஒருவர் உண்மை பேசுவார். நம்பிக்கையின் சதவீதத்தைப் பொறுத்து வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் உண்மையும் பொய்யும் கலந்திருக்கும் அவ்வளவுதான்.

பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீய செயலாகும். உலகில் உள்ள அனைத்து மதங்களும், கொள்கை கோட்பாடுகளும் இதனை குறித்து எச்சரிக்கின்றன. சத்திய இஸ்லாமிய மார்க்கத்திலோ பொய் பேசுவதை தடை செய்திருப்பதோடல்லாமல் இதன் விளைவுகளைப் பற்றி மிக கடுமையாக எச்சரிக்கப் விடப்பட்டுள்ளது.

பொய் மனித இனத்தால் மிக மிகச் சாதாரணமாக செய்யப்படும் தீமை.பொய் சொல்வது வாழ்க்கையில் இன்றியமையாதது என்ற அளவிற்கு போய்விட்டது. வியாபாரத்தில், அமானிதத்தைப் பேணுவதில், வாக்குறுதியை காப்பாற்றுவதில், தன்னை மிகைப்படுத்திக் கொள்வதில், ஆற்ற வேண்டிய காரியத்தில் பொய்கள் தாராளமாக பேசப்பட்டு வருகின்றன.

இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கும்போது, அல்குர்னிலும், ஹதீதுகளிலும் ஏராளமான ஆதாரங்கள் பொய் பேசுவது பற்றி வந்துள்ளன. 

பொய் பற்றி அல்குர்ஆன்:

وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۚ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقً

சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது- நிச்சயமாக அசத்தியம் அழிந்தே போகும்.(17:81)

وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنتُمْ تَعْلَمُونَ

நீங்கள் உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.(2:42)

قُلْ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ

'அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) பொய்யை இட்டுக் கட்டுபவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்' என்று (நபியே!) கூறிவிடும். (அல்-குர்ஆன் 10:69)

فَوَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ

அன்றைய தினம் (மறுமையில்) பொய்யர்களுக்கு கேடுதான்(52:11)

[பொய் பேசுவது மறுமை நாளின் அடையாளில் ஒன்றாகும்:]

[பொய்மையை கைவிட்டால் சுவனம் உறுதி.]

عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَنَازَعِيْمٌ بِبَيْتٍ فِيْ رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَاِنْ كَانَ مُحِقًّا، وَبِبَيْتٍ فِيْ وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَاِنْ كَانَ مَازِحًا، وَبِبَيْتٍ فِيْ اَعْلَي الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ. رواه ابوداؤد باب في حسن الخلق رقم:٤٨٠٠

(மூன்று பேருக்கு) மாளிகையை வாங்கித் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

1.தான் சத்தியத்தின் மீது இருந்தும், வாதம் புரிவதை விட்டுவிடும் மனிதருக்கு சுவனத்தின் ஓரத்தில் ஒரு மாளிகை.

2.விளையாட்டாகக் கூடப் பொய் பேசுவதை தவிர்த்தவருக்கு சொர்க்கத்தின் மத்திய பகுதியில் ஒரு மாளிகை.

3. நல்ல குணத்தை மட்டுமே தனதாக்கிக் கொள்கிறோரோ, அவருக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு மாளிகை.  (அபூதாவூத்-4800)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قاَلَ: اِيَّاكُمْ وَالْحَسَدَ، فَاِنَّ الْحَسَدَ يَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ، اَوْ قَالَ: الْعُشْبَ. رواه ابوداؤد،

✍🏻    நெருப்பு விறகைத் திண்பது போல பொய் ஈமானை தின்று விடும் என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍؒ اَنَّهُ قَالَ: قِيْلَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَيَكُوْنُ الْمُؤْمِنُ جَبَانًا؟ فَقَالَ: نَعَمْ، فَقِيْلَ لَهُ: اَيَكُوْنُ الْمُؤْمِنُ بَخِيْلاً؟ فَقَالَ: نَعَمْ، فَقِيْلَ لَهُ: اَ يَكُوْنُ الْمُؤْمِنُ كَذَّابًا؟ قَالَ: لاَ. رواه الامام مالك في الموطا، ما جاء في الصدق والكذب

✍🏻   'ஒரு முஃமினிடம் எல்லாத்தீமைகளும் இருக்கலாம். ஆனால் அவனிடம் பொய்யும், நேர்மையின்மையையும் இருக்கக் கூடாது. (நூல்: அஹ்மத்)

عَنْ مُعَاوِيَةَ بْنِ حَيْدَةَؓ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ: وَيْلٌ لِلَّذِيْ يُحَدِّثُ بِالْحَدِيْثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ،وَيَلٌ لَهُ وَيْلٌ لَهُ.

மக்களைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்பவனுக்கு நாசம் தான் உண்டாகும், அவனுக்கு நாசம்தான்! அவனுக்கு நாசம்தான்!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் முஆவியத்துப்னு ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (அபூதாவூத் 4990]

 وَيْلٌ لِلَّذِيْ يُحَدِّثُ بِالْحَدِيْثِ لِيُضْحِكَ بِهِ الْقَوْمَ فَيَكْذِبُ،وَيَلٌ لَهُ وَيْلٌ لَهُ. رواه الترمذي

✍🏻  அடுத்தவனை மகிழ்விப்பற்காக பொய் சொல்பவன் அழிந்து போகட்டும்     என்றார்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். -( திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத்)

عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: كَفَي بِالْمَرْءِ كَذِبًا اَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ. رواه مسلم،

ஒருவன் தான் கேட்ட செய்திகள் அனைத்தையும் (தீர விசாரிக்காமல்) பிறருக்குச் சொல்வது ஒன்றே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஃப்ஸுப்னு ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

தெளிவுரை:- கேட்டவற்றையெல்லாம் தீர விசாரிக்காமல் பிறரிடம் சொல்வது பொய்யின் ஒருவகையாகும். இதன் காரணமாக மக்களுக்கு அவன் மீதுள்ள நம்பிக்கை நீங்கிவிடுகிறது

✍🏻   உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள், விளையாட்டுக்காக பொய் பேசுவதை நிறுத்தும் வரையில் உண்மையான ஈமான் (இறை நம்மிக்கை) ஏற்படாது. [ முஸன்னஃப் இப்னு அபீஷைபா.]

✍🏻 தாம் காணாத கணவை கண்டதாக பொய்க் கூறுவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -“ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற் கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும் படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) ‘தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்’ அல்லது ‘தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் ‘அவர்களின் உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்தை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால், அவரால் உயிர் கொடுக்க முடியாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

✍🏻 நபித்தோழர்கள் எங்களிடம் கூறினார்கள் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுடன் இருந்த ஒருவர் உறங்கி விட்டார். அப்போது சிலர் அவரிடம் சென்று அவருடைய அம்புகளை எடுத்துக் கொண்டனர். அவர் விழித்தெழுந்ததும், அவர் (தன்னுடைய அம்புகளை கணாததினால்) அலறினார், அதைக் கண்ட மக்கள் சிரித்தனர். அப்போது நபி(ஸல்)அவர்கள் நீங்கள் எதைகண்டு சிரிக்கிறிர்கள் என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள் “ஒன்றுமில்லை நாங்கள் அம்புகளை எடுத்தோம், அதனால் அவர் அலறுகிறார். என்று கூறினர் அதற்கு நபி(ஸல்) அவர்கள் “ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுருத்துவது தடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்கள். [அபூதாவூத், அஹ்மத்)

“உங்களில் யாரும் அவருடைய சகோதரருடைய உடமைகளை விளையாட்டுக்காகவோ. அல்லது வேறெந்த காரணத்துக்காகவோ எடுக்க கூடாது’ யாரேனும் அவருடைய சகோதரரின் ஒரு குச்சியை எடுத்திருந்தால் (கூட) அதை அவரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். [அபூதாவூத் மற்றும் திர்மிதி.]

✍🏻 அனுமதிக்கப்பட்ட பொய்கள்: -

1) அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1, போரின் போது 2, சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த 3, ஒரு கணவன் தன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக் கொள்வதற்காக கூறிக்கொள்ளும் பொய் ஆகியவை அனுமதிக்கப் பட்டதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அஸ்மா பிந்த் யஜித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள்: - மூன்று விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் பொய் பேசுவது தடை செய்யப்பட்டுள்ளது. (அவைகள்)

   1. ஒருவன் தன் மனைவியை மகிழ்விப்பதற்காக பேசுவது
   2. யுத்தத்தின் போது
   3.  மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்காக! ( திர்மிதி, ஸஹீஹ் அல் ஜாமிவு)

‘இதயங்களின் மருத்துவர்’ என்று அறியப்படும் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் ஓர் எறும்புடன் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை ‘மிஃப்தாஹ் தாருஸ் ஸஆதா’ என்ற நூலில் இவ்வாறு விவரிக்கின்றார்.

ஒருநாள் ஒரு மரத்தடியில் நிழலுக்காக நான் அமர்ந்து இருந்தேன். அப்போது அந்த மரத்தடியில் இருந்து ஓர் எறும்பு நான் இருக்கும் இடத்திற்கு அருகே ஊர்ந்து வந்தது. அங்கே இறந்துபோன வெட்டுக்கிளியின் இறக்கை ஒன்று கிடந்தது.

அதைத் தூக்கிச் செல்வதற்காக பலமுறை அந்த எறும்பு முயன்றது. பாரமாக இருந்த காரணத்தால் அதனால் தூக்க இயலவில்லை. உடனே அது தன்னுடைய வசிப்பிடத்தை நோக்கி வேகமாகத் திரும்பிச் சென்றது. சற்று நேரத்தில் எறும்புப் படையே வரிசையாக வந்தது. அவை அந்த இறக்கைக்கு அருகே வந்ததும் நான் அந்த இறக்கையை கையால் உயர்த்தினேன். அவை இறக்கையைத் தேடின. கிடைக்காதபோது திரும்பிவிட்டன. ஆனால் அந்த முதல் எறும்பு மட்டுமே அங்கேயே நின்றது. (அதுதான் முதல் எறும்பாக இருக்கக்கூடும் என்று எனக்குத் தோன்றியது)

உடனே நான் அந்த இறக்கையை கீழே போட்டேன். அந்த எறும்பு மீண்டும் அதனைத் தூக்க முயற்சித்தது, முடியவில்லை. மீண்டும் தன் படைகளைக் கூட்டிவரச் சென்றது.

முதல் முறையைவிட குறைவான எறும்புக் கூட்டம் வெளியே வந்தது. அவை அருகில் வந்ததும் மீண்டும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன். அவை தேடின. கிடைக்காதபோது மீண்டும் வசிப்பிடம் நோக்கித் திரும்பின. அந்த ஒற்றை எறும்பு மட்டும் அங்கேயே நின்றது. நான் மீண்டும் அந்த இறக்கையைப் போட்டேன். மூன்றாம் முறையும் அது தனது படையை அழைத்துவரச் சென்றது. முதல் இரண்டு முறையைவிட குறைவான எண்ணிக்கையில் கொஞ்சம் எறும்புகள் வசிப்பிடத்திலிருந்து வெளியே வந்தன. இப்போதும் நான் அந்த இறக்கையை உயர்த்தினேன்.

அப்போதுதான் ஆச்சரியமான ஒரு செயலைப் பார்த்தேன். ஆம்.. அந்த எறும்புக் கூட்டம் கோபம் கொண்டன. தங்களை ஏமாற்றி அழைத்து வந்த அந்த ஒற்றை எறும்பை சூழ்ந்துகொண்டு அதன் கை கால்களைத் துண்டித்தன. பின்னர் வயிற்றைக் கிழித்துத் துண்டு துண்டாக உடைத்துப் போட்டன. அந்த எறும்பு இறந்தது. உடனே நான் அந்த இறக்கையை மீண்டும் போட்டேன். அதைப் பார்த்த ஏனைய எறும்புகள் கை சேதப்பட்டிருக்கும். ஆயினும் காலம் கடந்துவிட்டது.

உடனே அங்கிருந்து எழுந்து சென்று எனது ஆசிரியர் இப்னு தைமிய்யா அவர் களைச் சந்தித்து விவரத்தைக் கூறினேன்.

அவர் சொன்னார்: “அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பானாக, மீண்டும் இவ்வாறு செய்யாதே. பொய் உரைப்பதை பெரும் பாவம் என்று எறும்புகள் கருதுகின்றன. அல்லாஹ்வின் படைப்பில் ஆச்சரியப் படைப்பு இந்த எறும்புகள். பொய் உரைத்தால் என்ன தண்டனை என்று எறும்புகளுக்குக் கற்றுக்கொடுத்த அல்லாஹ் ஆச்சரியமானவன். பொய் உரைப்பது பெரும் தவறு எனும் சிந்தனை எறும்பு களின் உணர்வில் கலந்துள்ளது”.

எறும்புகளுக்குத் தெரிகிறது பொய் சொல்வது கொலைக்குற்றம் போன்ற பெரும் பாவம் என்று. ஆயினும் மனிதர்கள்..? இங்கு பலர் பொய்யை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை.

நல்லவேளை எறும்பின் குணம் மனிதர் களுக்கு வாய்க்கவில்லை. வாய்த்திருந்தால்.. நம்மில் அனேகமானவர்கள் உயிருடன் இருந்திருக்க மாட்டோம்.

‘தப்பித்தோம்’ என்று தற்போது வேண்டுமென்றால் கூறிக்கொள்ளலாம். ஆனால் மறுமை என்று ஒன்று இருக்கின்றதே.. பொய்யர்களின் நிலை அங்கு என்னவாகுமோ.. யார் அறிவார்..?

【வாய்மை- தீமை- பேண நாவை பேணுவோம்】

அன்புள்ள உஸ்தாதுகளே! கீழுள்ள "உண்மையாக வாழுதல்" சம்பந்தமாக உள்ள இறைமறை வசனம் மற்றும் நபி மொழிகளை துஆவை போடில் எழுதி போட்டும் விழிபுணர்வை ஏற்படுத்துங்கள். பொது மக்கள் அதைப் பார்த்து படிப்பினை பெற உதவி செய்யுங்கள்..

【கடனும்- பொய்யும்】

'இறைவா! கப்ருடைய வேதனையைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்' என்று நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆச் செய்வார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்' என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள். புஹாரி 832

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்; மேலும் ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது.' புஹாரி 1291

عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: كَفَي بِالْمَرْءِ كَذِبًا اَنْ يُحَدِّثَ بِكُلِّ مَا سَمِعَ. وفي رواية ابي داؤد 4992 «ﻛﻔﻰ ﺑﺎﻟﻤﺮء ﺇﺛﻤﺎ.

ஒருவன் தான் கேட்ட செய்திகள் அனைத்தையும் (தீர விசாரிக்காமல்) பிறருக்குச் சொல்வது ஒன்றே அவன் பொய்யன் & பாவம் செய்பவன் என்பதற்குப் போதுமானதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹஃப்ஸுப்னு ஆஸிம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் & அபூ தாவூத் 4992)

عَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : إِنَّ لِلشَّيْطَانِ لَمَّةً بِاِبْنِ آدَمَ وَلِلْمَلَكِ لَمَّةً، فَأَمَّا لَمَّةُ الشَّيْطَانِ فَإِيعَادٌ بِالشَّرِّ وَتَكْذِيبٌ بِالْحَقِّ، وَأَمَّا لَمَّةُ الْمَلَكِ فِإِيعَادٌ بإِلْخَيْرِ وَتَصْدِيقٌ باِلْحَقِّ، فَمَنْ وَجَدَ ذلِكَ فَلْيَعْلَمْ أَنَّهُ مِنَ اللّٰهِ فَلْيَحْمَدِ اللّٰهَ، وَمَنْ وَّجَدَ اْلاَخْري فَلْيَتَعَوَّذْ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ ثُمَّ قَرَأَ: (اَلشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ۞). الاية رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح غريب، باب ومن سورة البقرة، رقم:٢٩٨

“மனிதனுக்கு ஷைத்தானுடைய தீண்டுதல் (மூலம் ஓர் எண்ணமும்) இன்னும் மலக்கின் தூண்டுதல் (மூலம் ஓர் எண்ணமும்) ஏற்படுகிறது. (மனிதன் நற்காரியங்கள் செய்யும்போது அதன் பலனாக) தீங்கு ஏற்பட்டுவிடும் என்று அச்சுறுத்துவதும், உண்மையானவற்றை பொய்ப்படுத்திக் காட்டுவதும் ஷைத்தானின் தீண்டுதல் ஆகும். (நன்மையான காரியங்கள் செய்யும்போது அதன் பலனாக) நன்மையே விளையும் என்பதை வாக்களிப்பதும், உண்மையானவற்றை மெய்ப்படுத்திக் காட்டுவதும் மலக்கின் தூண்டுதல் ஆகும். எனவே யார் இந்த (நல்ல) நிலையை பெற்றுக் கொண்டாரோ அவர், இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது என்பதை அறிந்துக் கொள்ளட்டும். அதற்காக அவர் அல்லாஹ்வை புகழட்டும். எவர் இதற்கு மாற்றமான நிலையை பெற்றுக் கொண்டாரோ, அவர் எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக்கொள்ளட்டும் என்று கூறியபின் நபி (ஸல்) அவர்கள் (தான தருமங்கள் செய்வதினால் ஏழையாகி விடுவீர்களென்று) ஷைத்தான், வருமையைப் பற்றி உங்களுக்கு பயங்காட்டி, மானக்கேடானவற்றை(ச் செய்யும்படி)யும் உங்களுக்கு ஏவுகிறான்’ எனும் குர்ஆன் வசனத்தையும் ஓதிக் காண்பித்தார்கள் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

 

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ قَالَ: قِيْلَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَيُّ النَّاسِ اَفْضَلُ؟ قَالَ: كُلُّ مَخْمُوْمِ الْقَلْبِ صَدُوْقِ اللِّسَانِ، قَالُوْا: صَدُوْقُ اللِّسَانِ نَعْرِفُهُ فَمَا مَخْمُوْمُ الْقَلْبِ؟ قَالَ: هُوَ التَّقِيُّ النَّقِيُّ لاَ اِثْمَ فِيْهِ وَلاَ بَغْيَ وَلاَ غِلَّ وَلاَ حَسَدَ.رواه ابن ماجه باب الورع والتقوي رقم:٤٢١٦

மனிதர்களில் மிகச்சிறந்தவர் யார்?'' என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது, மக்மூமான உள்ளமும், உண்மை பேசும் நாவும் உடையவர்கள்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உண்மை பேசும் நாவு உள்ளவரை நாங்கள் அறிவோம். மக்மூமான உள்ளம் என்பதன் பொருள் என்ன?'' என்று ஸஹாபாக்கள் (ரலி) வினவியதற்கு, பேணுதலுள்ள, தூய்மையான, தன் மீது பாவத்தின் அல்லது அநியாயத்தின் எந்தச் சுமையும் இல்லாத, தன் உள்ளத்தில் பிறரைப் பற்றிய கபடம், பொறாமை இல்லாத உள்ளம் உடையவரே மக்மூம் ஆவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(இப்னுமாஜா)

தெளிவுரை:- தூய்மையான உள்ளம் உடையவர் என்பது அல்லாஹுதஆலா அல்லாதவற்றின் சிந்தனை, தவறான சிந்தனை, தவறான எண்ணங்கள் ஆகியவற்றை விட்டும் தூய்மையானவர் என்பது பொருளாகும்.  (மளாஹிர்ஹக்)

عَنْ سُفْيَانَ بْنِ اَسِيْدِ نِ الْحَضْرَمِيِّؓ قَالَ:سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ:كَبُرَتْ خِيَانَةً اَنْ تُحَدِّثَ اَخَاكَ حَدِيْثًا هُوَ لَكَ بِهِ مُصَدِّقٌ وَاَنْتَ لَهُ بِهِ كَاذِبٌ.رواه ابو داؤد، باب في المعاريض، رقم:٤٩٧١

நீங்கள் உங்கள் சகோதரனிடம் ஏதேனுமொரு பொய்யான செய்தியைச் சொல்ல, அதை அவர் உண்மை என்று நம்புகிறார், இது மிகப்பெரும் மோசடியாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸுஃப்யானிப்னு அஸீத் ஹள்ரமீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூதாவூத்)

தெளிவுரை:- பொய் சொல்வது பெரும்பாவம், சில சமயங்களில் இன்னும் அதனுடைய கடுமை அதிகரித்துவிடுகிறது. ஒருவர் உங்களை முழுமையாக நம்ப, நீங்கள் அவருடைய நம்பிக்கையை தவறான முறையில் பயன்படுத்தி பலன் பெறப் பொய் சொல்லி, அவரை ஏமாற்றுவது அவற்றில் ஒருவகை.

 

٤٢- عَنْ عَبْدِ اللهِؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اِنَّ الصِّدْقَ يَهْدِيْ اِلَي الْبِرِّ، وَاِنَّ الْبِرَّ يَهْدِيْ اِلَي الْجَنَّةِ، وَاِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّي يُكْتَبَ عِنْدَ اللهِ صِدِّيْقًا، وَاِنَّ الْكَذِبَ يَهْدِيْ اِلَي الْفُجُوْرِ، وَاِنَّ الْفُجُوْرَ يَهْدِيْ اِلَي النَّارِ، وَاِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّي يُكْتَبَ عِنْدَ اللهِ كَذَّابًا. رواه مسلم باب قبح الكذب ....،رقم:٦٦٣٧

சந்தேகமின்றி, உண்மை சொல்வது நன்மையின் பால் வழிநடத்துகிறது, நன்மை சொர்க்கம் வரை சேர்த்துவிடுகிறது. மனிதன் உண்மை சொல்லிக்கொண்டே இருக்கிறான். இறுதியில், அவன் பெயர் அல்லாஹுதஆலாவிடம் ஸித்தீக் (மிக உண்மையாளர்) உடைய பட்டியலில் எழுதப்படுகிறது. சந்தேகமின்றி, பொய்சொல்வது தீமையின்பால் கொண்டு செல்கிறது. தீமை அவனை நரகம் வரை சேர்த்துவிடுகிறது. மனிதன் பொய் சொல்லிக்கொண்டே இருக்கிறான். இறுதியில் அல்லாஹுதஆலாவிடம் அவன் பெயர் கத்தாப்'' (அதிகம் பொய் சொல்பவன்) உடைய பட்டியலில் எழுதப்படுகிறது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

عَنْ حَسَّانِ بْنِ عَطِيَّةَؒ قَالَ: كَانَ شَدَّادُ بْنُ اَوْسٍؓ فِيْ سَفَرٍ فَنَزَلَ مَنْزِلاً فَقَالَ لِغُلاَمِهِ: اِئْتِنَا بِالسُّفْرَةِ نَعْبَثْ بِهَا، فَاَنْكَرْتُ عَلَيْهِ، فَقَالَ: مَا تَكَلَّمْتُ بِكَلِمَةٍ مُنْذُ اَسْلَمْتُ اِلاَّ وَاَنَا اَخْطِمُهَا وَاَزِمُّهَا غَيْرَ كَلِمَتِيْ هذِهِ فَلاَ تَحْفَظُوْهَا عَلَيَّ وَاحْفَظُوْا مِنِّي مَا اَقُوْلُ لَكُمْ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِذَا كَنَزَ النَّاسُ الذَّهَبَ وَالْفِضَّةَ فَاكْنِزُوْا هؤُلاَءِ الْكَلِمَاتِ، اَللّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الثَّبَاتَ فِي اْلاَمْرِ، وَالْعَزِيْمَةَ عَلَي الرُّشْدِ، وَاَسْئَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَاَسْئَلُكَ حُسْنَ عِبَادَتِكَ، وَاَسْئَلُكَ قَلْبًا سَلِيْمًا، وَاَسْئَلُكَ لِسَانًا صَادِقًا، وَاَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَاَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ اِنَّكَ اَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ.رواه احمد

ஹஜ்ரத் ஹஸ்ஸானிப்னு அதிய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஹஜ்ரத் ஷத்தாதிப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது ஓர் இடத்தில் தங்கினார்கள். தமது அடிமையிடம், உணவு உண்ணும் விரிப்பைக் கொண்டுவாரும். நாமும் சிறிது பொழுதைப் போக்குவோம்'' என்று சொன்னார்கள். (ஹஜ்ரத் ஹஸ்ஸான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்) அவரது இந்தப் பேச்சு எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. பிறகு அவர்கள் சொன்னதாவது: நான் இஸ்லாத்தை தழுவியதிலிருந்து எந்தவொரு வார்த்தை பேசினாலும் எப்பொழுதும் யோசித்துத் தான் பேசுவேன். (ஆனால் இன்று மறதி ஏற்பட்டுவிட்டது) அதை நீங்கள் மறந்துவிடுங்கள். இனி நான் கூறுகின்றவற்றை ஞாபகம் வையுங்கள். நான் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். மக்கள் தங்கத்தையும், வெள்ளியையும் கருவூலமாக்கிக் கொள்ளும்போது நீங்கள் இந்த வாக்கியங்களைக் கருவூலமாக்கிக் கொள்ளுங்கள்'' (اَللّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ الثَّبَاتَ فِي اْلاَمْرِ، وَالْعَزِيْمَةَ عَلَي الرُّشْدِ، وَاَسْئَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَاَسْئَلُكَ حُسْنَ عِبَادَتِكَ، وَاَسْئَلُكَ قَلْبًا سَلِيْمًا، وَاَسْئَلُكَ لِسَانًا صَادِقًا، وَاَسْئَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَاَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ اِنَّكَ اَنْتَ عَلاَّمُ الْغُيُوْبِ) யாஅல்லாஹ்! நான் உன்னிடம் எல்லா காரியங்களிலும் நிலைத்து நிற்பதையும், நேர்வழியின் மீது உறுதியையும் வேண்டுகிறேன். மேலும் நீ கொடுத்த பாக்கியங்களுக்கு நன்றி செலுத்தும் சந்தர்ப்பத்தை வேண்டுகிறேன். உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும் சந்தர்ப்பத்தை வேண்டுகிறேன். (ஷிர்க், குப்ரிலிருந்து) பரிசுத்தமான உள்ளத்தை உன்னிடம் வேண்டுகிறேன். உன்னிடம் உண்மை பேசும் நாவை வேண்டுகிறேன். நீ அறிந்த எல்லா நலவையும் உன்னிடம் வேண்டுகிறேன். நீ அறிந்த எல்லாத் தீங்குகளைவிட்டும் பாதுகாப்பு வேண்டுகிறேன். நீ என்னுடைய பாவங்களில் எத்தனை பாவங்களை நீ அறிந்திருக்கிறாயோ அத்தனை பாவங்களையும் மன்னிக்க வேண்டுகிறேன். நிச்சயமாக நீயே மறைவான அனைத்துக் காரியங்களையும் மிக அறிந்தவன்''.

عَنْ اَبِيْ مُوْسَي ؓ قَالَ: قَالُوْا: يَارَسُوْلَ اللهِﷺ أَيُّ اْلاِسْلاَمِ اَفْضَلُ؟ قَالَ: مَنْ سَلِمَ الْمُسْلِمُوْنَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ.رواه البخاري باب أي الاسلام افضل رقم:١١

யாரஸூலல்லாஹ்! எந்த முஸ்லிமுடைய இஸ்லாம் சிறந்தது?'' என ஸஹாபாக்கள் கேட்டனர், எந்த முஸ்லிமுடைய நாவை விட்டும், கரத்தை விட்டும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றுள்ளனரோ அவருடைய இஸ்லாம் தான் சிறந்தது!'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அபூமூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(புகாரி)

தெளிவுரை:- யாரையேனும் பரிகசிப்பது, பழிசுமத்துவது, ஏசிப்பேசுவது ஆகியவை நாவால் நோவினை செய்வதில் சாரும், அநியாயமாக அடித்தல், பொருளை அபகரித்தல் போன்ற செயல்கள் கைகளால் நோவினை செய்வதில் சாரும்.  (பத்ஹுல்பாரீ)

عَنِ الْحَارِثِ بْنِ هِشَامٍؓ اَنَّهُ قَالَ لِرَسُوْلِ اللهِ ﷺ: اَخْبِرْنِيْ بِاَمْرٍ اَعْتَصِمُ بِهِ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَمْلِكْ هذَا وَاَشَارَ اِلي لِسَانِهِ.رواه الطبراني باسنادين واحدهما جيد، مجمع الزوائد:

நான் உறுதியாக கடைப்பிடிக்கும் படியான ஒரு செயலை எனக்குச் சொல்லித் தாருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன், தமது நாவைக்காட்டி, இதை உமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வீராக'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் ஹாரிஸிப்னு ஹிஷாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍؓ قَالَ: قُلْتُ: يَا رَسُوْلَ اللهِﷺ مَا النَّجَاةُ؟ قَالَ: اَمْلِكْ عَلَيْكَ لِسَانَكَ، وَلْيَسَعْكَ بَيْتُكَ، وَابْكِ عَلي خَطِيْئَتِكَ. رواه الترمذي وقال: هذا حديث حسن، باب ما جاء في حفظ اللسان، رقم:

யாரஸூலல்லாஹ்! ஈடேற்றம் பெற வழி என்ன?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன், உமது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும். வீட்டில் தங்கியிரும் (வீணாக வெளியில் செல்ல வேண்டாம்). உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிரும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் (திர்மிதீ)

தெளிவுரை:- நாவைக் கட்டுப்படுத்தி வைத்தல் என்பது, அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்பதாம். புறம் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சுகள் பேசுதல், தேவையின்றிப் பேசுதல், ஒழுக்கமின்றி எல்லாவிதப் பேச்சும் பேசுதல், வெட்கக்கேடான பேச்சுக்களைப் பேசுதல், சண்டை சச்சரவு செய்தல், திட்டுதல், மனிதனையோ மிருகத்தையோ சபித்தல், பாட்டு மற்றும் கவிதையிலேயே எந்நேரமும் ஈடுபடுதல், கேலி செய்தல், இரகசியத்தை வெளிப்படுத்துதல், பொய் வாக்குறுதி அளித்தல், பொய்ச் சத்தியம் செய்தல், சிலேடையாகப் பேசுதல், காரணமின்றிப் பிறரைப் புகழ்தல், காரணமின்றிக் கேள்விகள் கேட்டல் போன்றவைகள். 

【வாய்மையே வெல்லும் - சிறுவர் கதை [மக்தப் மதரஸா மாணவர்களுக்கு ஒரு குட்டி கதை】

【பொய் அழிவைத் தந்தது...】

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்க அவர், 'நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை.) மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்' என்று கூறினார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரைவிட்டுச் சென்றுவிட்டுது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், 'எச்செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஒட்டகம் தான்... (என்றோ) அல்லது மாடு தான்... (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)' என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், 'இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்' என்று கூறினார். பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அழகான முடியும் இந்த வழுக்கை என்னைவிட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து)விட்டார்கள்' என்று கூறினார். உடனே அவ்வானவர், அவரின் தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், 'எச்செல்வம் உனக்கு விருப்பமானது?' என்று கேட்டார். அவர், 'மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்' என்று கூறினார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, 'இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்' என்று கூறினார். பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, 'உனக்கு மிகவும் விருப்பமானது எது?' என்று கேட்டார். அவர், 'அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)' என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவி விட, அல்லாஹ் அவருக்கு அவரின் பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், 'உனக்கு எச்செல்வம் விருப்பமானது?' என்று கேட்க அவர், 'ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)' என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்-) நிறைய குட்டிகள் ஈன்றிட பெற்றனர். இவர் (-ஆடு வழங்கப்பட்டவர்-) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன. பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தம் பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, 'நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த (இறை) வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கிறேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்' என்று கூறினார். அதற்கு அந்த மனிதர், '(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)' என்றார். உடனே அவ்வானவர், 'உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கிற தொழு நோயாளியாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?' என்று கேட்டதற்கு அவன், '(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இச்செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்' என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், 'நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்' என்று கூறினார். பிறகு வழுக்கைத் தலையரிடம் தம் (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாளியிடம்) சொன்னதைப் போன்றே கூறினார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலளித்தைப் போன்றே பதிலளித்தான். வானவரும், 'நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்' என்று கூறினார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தம் தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, 'நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்து போய்விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கிறேன்' என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், 'நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் சொல்வந்தனாக்கினான். எனவே, நீ விரும்புவதை எடுத்துக்கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கிற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்' என்று கூறினார். உடனே அவ்வானவர், 'உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரண்டு தோழர்கள் (தொழு நோயாளி) மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபமுற்றான்' என்று கூறினார். புகாரி – 3464)

【உண்மையாக நடந்து கொண்டாய்...】

✍🏻 அன்புள்ளவர்களே! ஒரு நாட்டின் அரசன் இறந்து விட்டான். அவனுக்கு வாரிசு இல்லை. வாரிசை தேர்ந்து எடுக்க அமைச்சர் ஒரு போட்டி நடத்தினார். போட்டியில் கலந்து கொள்ள முரசு அறைந்து இளைஞர்களை அழைத்தார்கள். 25 இளைஞர்கள் கலந்து கொண்டார்கள். அமைச்சர் அந்த இளைஞர்களிடம் நெல் விதைகள் கொடுத்தார். இந்த விதைகளை உங்கள் வயலில் விதையுங்கள். யார் வயலில் நெல் பயிர் உயரமாக வளர்கிறதோ அவர் அரசனாக முடிசூட்டப் படுவார் என்று அமைச்சர் அறிவித்தார்.

இளைஞர்கள் தங்கள் வயலுக்குச் சென்று நெல்லை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள் நிறைய உரம் வைத்தார்கள். இரண்டு மாதம் கழித்து வயல்களைப் பார்க்க அமைச்சர் சென்றார். எல்லா வயல்களிலும் நெல் பயிர் நன்கு வளர்ந்து நின்றது. ஒரே ஒரு வயலில் மட்டும் பயிர் விளையவே இல்லை.

அந்த இளைஞனைப் பார்த்து உன் வயலில் மட்டும் ஏன் பயிர் விளையவில்லை என்று அமைச்சர் கேட்டார். ‘அய்யா நீங்கள் கொடுத்த விதையைத்தான் விதைத்தேன். அது முளைக்கவே இல்லை’ என்று இளைஞன் சொன்னான். அப்போது அமைச்சர் கூறினார். நான் கொடுத்த நெல் முளைக்காது. ஏனென்றால் அது அவித்த நெல். அது முளைக்காமல் போகவே மற்ற இளைஞர்கள் வேறு நெல்லை விதைத்து நீர் பாய்ச்சி நல்ல உரம் போட்டு பயிரை வளர்த்திருக்கிறார்கள். ஆனால் நீ மட்டும் அப்படிச் செய்யவில்லை. உண்மையாக நடந்து கொண்டாய். அதனால் நீ தான் அரசன் ஆவதற்கு தகுதியானவன் என்றார்.

இதை ஊரார் ஒப்புக் கொண்டார்கள். அந்த இளைஞனுக்கு அரசன் என்று முடிசூட்டப்பட்டது.

சமூக வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் வரலாறு முக்கியப் பங்கு வகிக்கிறது. இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு! எனவே நம்முடைய நடவடிக்கைகளை படிப்பினை தரும் வரலாறாக மாற்றவேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளை அதன் சேவகர்களாக மாற்றியமைத்த வரலாறு கண்டோம். வாய்மையான நடத்தைகளால் மனித உள்ளங்களை வெல்வோமாக!

✍🏻✍🏻நன்றியுரை:-  تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا  ويشرح صدورنا

 “‏ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு) செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். புகாரி 3461.

இக்குறிப்புரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:-

எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா.உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:-

உஸ்தாதுனா எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் +919487007358 & ٩٩٤٢٤٠٧٣٥٨ . நான்  விவசாயி..

மெளலானா ஹாபிழ் களந்தை.B. அபு அஜ்மல் புகாரி யூசுபிஉதவியாசிரியர்:-

உஸ்தாதுனா மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் +918754089943.

இக்கட்டுரை வெளி வர மஷ்வரா [அலோசனை] தந்த அனைவருக்கும், நம் இணையத்தில் வந்து பயனும் பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ கைரன்.

அல்லாஹ் நம் அனைவரையும் ஈருலகிலும் பொருந்திக் கொண்டும் & நம் அனைவரின் பாவங்களையும் நன்மைகளாக்கியும் & ரஹ்மத்தான அருளையும் அர்ஷூடைய நிழலையும் நிரப்பமாக தந்தருள்வானாக!”” ஆமீன்.

♣ இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய‌ வார ஜுமுஆ குறிப்புரையினை PDF-ல் பெற & வாட்சப் குழுவில் இணைய & பயான் குரு(றி)ப்பில் பயன் பெற♣

நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.

உங்களுக்கு பிடித்த ஜுமுஆ குறிப்புரையினை PDF-ல் பதிவிறக்கம் செய்ய‌ கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க...

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4/

♣ உங்களுக்கு பிடித்த தலைப்பை தேர்வு செய்ய கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க..♣

https://vellimedaikal.wordpress.com/2016/10/02/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை/

♣  இ-மெயில் சேவை உங்களை அன்புடன் வரவேற்கிறது.. ♣

https://vellimedaikal.wordpress.com/2019/01/05/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-3/

✍🏻✍🏻 எனக்கு இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை எழுத ஊக்கமும், உறுதுணையும், ஒத்துழைப்பும் தந்த ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உஸ்தாதுக‌ளுக்கும்  & திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை உலமா நண்பர்களுக்கும். ஜஸாகல்லாஹ்.  வஸ்ஸலாம். ✍🏻✍🏻

நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.

ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே குறிப்புரையாக தரப்படுகின்றன, இவற்றை  அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.

ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ ﻣﺤﻤﺪ ﻭﻋﻠﻰ ﺁﻟﻪ ﻭﺻﺤﺒﻪ ﻭﺍﻟﺤﻤﺪ ﻟﻠﻪ ﺭﺏ ﺍﻟﻌﺎﻟﻤﻴﻦ

ஜுமுஆ பேருரையின் பயன்பாற்றிற்காக மட்டுமே குறிப்புரையாக தரப்படுகின்றன, இவற்றை  அனுமதி இல்லாமல் மறு பிரசுரம் செய்யலாகாது. அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் உரித்தானது.

.

இக்கட்டுரை வெளி வர தகவல் தந்த அனைவருக்கும் நம் இணையத்தில் வந்து பயனும் பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ கைரன்.

♣ ஓர் அன்பான வேண்டுகோள் செய்தி.. ♣

நமது ஜுமுஆ முபாரக் தகவல் மேடை, ஜுமுஆ பயான் குறிப்புரை கொடுப்பதில் முதலிடத்தை நோக்கி மிக அதிவேகமாக பயணிக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்…

இறையன்புக்காகவும், உலக முழுவதும் ஜுமுஆ பயான் உயிரோட்டம் பெறவும், இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் இச்சேவையையும், நம் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக!! ஆமீன்.

இச்சேவை கியாமத் நாள் வரை சீறும் சிறப்புமாக, எந்நேரமும் இறைபொருத்தத்தோடு செயல் பட, ஒவ்வொரு நேரமும் துஆச் செய்யுமாறு தங்களிடம் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. உஸ்தாத். 

https://vellimedaikal.wordpress.com/2019/02/04/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-4/

♣  இ-மெயில் சேவை உங்களை அன்புடன் வரவேற்கிறது.. ♣

https://vellimedaikal.wordpress.com/2019/01/05/ஜூம்ஆ-முபாரக்-தகவல்-மேடை-3/

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان امين امين يارب العالمين

.

இந்த ஜுமுஆ குறிப்புரை 01/12/2016. ம் ஆண்டு  தாயிப்-நகரில்-தாஹா-நபிகள்! ﷺ  என்ற தலைப்பின் கிழ் வெளியீடு செய்த ஜுமுஆ குறிப்புரையாகும். இப்போது புத்தம் புது பொழிவுடன் இக் காலத்திற்க்கு தகுந்தார் போல் இக் குறிப்புரை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

நினைவுயாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ் நீங்களின்றி நாங்களேது யா ரசூலல்லாஹ் அணைந்திடாத உலகஜோதி யாய்த் தோன்றி அகில மெங்கும் ஒளிதெளித்த யா ரசூலல்லாஹ்          (-நினைவு) மதீனா நகர்க் கொருநாள் நான்வருவே…

வாய்மையே வெல்லும் [9119]

Source: நினைவுயாவும் உங்கள் மீது யா ரசூலல்லாஹ்!!!!!