أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ + بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 
🌹 اَلصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَرَسُوۡلَ الله ﷺ 🌹 🌹 اَ لصَّلٰوةُ وَالسَّلَامُ عَلَيۡكَ يَاسَيِّدِۡي ياَحَبِيۡبَ الله ﷺ 🌹
♣ ஏப்ரல் – 2023 –14 – ந் தேதி ஹிஜ்ரி–1444 – [رمضان] ரமலான் மாதம் – 22–ம் தேதி நான்காம் வார ஜுமுஆ பேருரையின் குறிப்புரை வெளியீட்டு எண்: 181 [டிஜிடல் முறை - 25] ♣
Download PDF OLD

بسم الله، والحمد لله، والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن اهتدى بهداه. أما بعد قال الله سبحانه وتعالى في كتابه العزيز; {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ۞ ۖ} -[سورة البقرة2 - عدد آياتها(183) ] - صدق الله العظيم / قال رسول الله ﷺ «وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ " مُتَّفَقٌ عَلَيْهِ. » .." » [إلخ], الى آخره, (رَوَاهُ البخاري (8)، ومسلم (16).] [ أو كما عبر الرسول صلى الله عليه وسلم
✍🏻✍🏻 ஜுமுஆ குறிப்புரையின் தலைப்பின் விளக்கம்:- ரமலானின் கடைசிப்பத்து நாட்களை உயிர்ப்பிப்போம்!!! அதாவது:- நாம் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ளோம். இந்த கடைசி பத்து நாட்கள் கிடைத்தற்கரியாத பத்து நாட்களாகும். அந்த கடைசி பத்து நாட்களில் முக்கிய 6 அமல்கள் உள்ளன. அவைகளை வீணாக்கிடாமல் பயனுள்ளதாக்கிட வழிகள் சம்பந்தமாக “ஜுமுஆ குறிப்புரை”
【♣ துவக்கவுரை: المقد مة INTRODUCTION ♣】
✍🏻 அன்புள்ளவர்களே! அல்லாஹ்வின் ﷻ பேரருளால் [ رمضان ] ரமளான் மாதத்தின் நான்காம் வார ஜுமுஆவில் , இறைவனுக்கும் பிடித்தமான நோன்பை நோற்ற நோன்பாளியாகவும், இறைவனுக்கும் பிடித்த இல்லமான இறையில்லத்திலும் அமர்ந்திருக்கிறோம், அல்ஹம்துலில்லாஹ்.
✍🏻 அன்புள்ளவர்களே! இன்றோடு சேர்த்து 22 நாட்கள் அல்லாஹ்வுக்காக நோன்பிருந்திருக்கிறோம். நாம் இதுவரைக்கும் வைத்த அனைத்து நோன்புகளையும், அமல்களையும், அல்லாஹ் ﷻ அங்கிகரிப்பானாக! ஆமீன்.
இன்னும் மீதமுள்ள எல்லா நோன்புகளையும், இதர வணக்க, வழிபாடுகளையும், எவ்வித தடங்கல் இன்றி பரிபூரணமாக நிறைவேற்றுகிற நற்பேற்றினை நம் அனைவருக்கும் நல்குவானாக! ஆமீன்!!. என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
✍🏻 அன்புள்ளவர்களே! ரமலானின் முதல் பத்தான ‘ரஹ்மத்துடைய பத்தை நிறைவு செய்துவிட்டோம். ரமலானின் இரண்டாம் பத்தான ‘மக்ஃபிரத்’ எனும் பாவமன்னிப்புடைய பத்தை நிறைவு செய்துவிட்டோம். அடுத்தாக மூன்றாம் பத்தான நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுதல், சுவனத்தை வேண்டுதலான பத்துவின் துவக்கதில் உள்ளோம். அல்லாஹ்விடத்தில் அதிகமாக اللّٰهم اعتقنا من النّار وأدخلنا الجنّة ياربّ العالمين. اللْهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي என்ற பிரார்தனையை அதிகமாக செய்வோமாக!
இன்னும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நாட்கள் / கொஞ்ச நாட்கள்தாம் உள்ளன. ரமலான் முடிய. ஆக மீதியுள்ள நாட்களை பயனுள்ள நாட்களாக ஆக்கிட முயற்ச்சி செய்வோமாக!.
✍🏻 அன்புள்ளவர்களே! இன்றைய ஜுமுஆவுடைய பேருரையில் :- நாம் ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ளோம். இந்த கடைசி பத்து நாட்கள் கிடைத்தற்கரியாத பத்து நாட்களாகும். அந்த கடைசி பத்து நாட்களில் முக்கிய 6 அமல்கள் உள்ளன அவைகளை வீணாக்கிடாமல் பயனுள்ளதாக்கிட வழிகள் என்னென்ன உள்ளன என்பதனைப்பற்றி இன்றைய ஜுமுஆ உரையில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்……
✍🏻 பேசுகிற எனக்கும், கேட்கிற உங்களுக்கும், கேட்டதின் படி அமல் செய்யும் பாக்கியத்தை வல்ல நாயகன் ﷻ நம்மனைவருக்கும் தந்தருள்புரிவானாக! ஆமீன் ✍🏻 என துஆ செய்தவனாக எனது ஜுமுஆ பேருரையை ஆரம்பம் செய்கிறேன்.
❈•••┈┈┈┈┈❀ ┈┈┈┈┈•••❈• ❀ ••❈•••┈┈┈┈┈┈┈┈┈┈•••❈.
♣ அல்லாஹ் [ﷻ] திருமறையில் கூறுகின்றான்:- قال الله تعالى ♣
【ஆசிரியரின் குறிப்பு】 அன்புள்ள உஸ்தாதுகளே!! தாங்கள் ஜுமுஆ பேருரையாற்றும் போது; கீழுள்ள குர்ஆன் வசனங்களை ஓதும் போது கிராஅத்தாக ஓதுங்கள்.
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் [அல்குர்ஆன் 2:183]
♣ நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:- كما قال النبي صلى الله عليه وسلم ♣
عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالْحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ ".
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் ﷺ அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' [ஸஹிஹ் புஹாரி 8]
[ கடைசி பத்தில் காணப்படும் முக்கிய 6 அமல்கள்!]
✍🏻 அன்புள்ளவர்களே! ரமலானின் கடைசிப்பத்தில் முக்கியமான 6 அமல்கள் உள்ளன. அவைகளை நாம் கண்ணும் கருத்துமாக அமல்கள் செய்து அந்நாட்களை பயனுள்ள்தாக்குவோமாக! மாறாக நாம் பொடுபோக்காக இருந்து கொண்டு அந்நாட்களை / அதன் நன்மைகளை இழந்து விடக்கூடாது . அவைகள் என்னென்ன? என்பதனைப் தெரிந்து கொள்வோம் வாருங்கள்....
கடைசி பத்தில் முக்கிய 6 அமல்கள் உள்ளன அவைகளை நாம் பொடுபோக்காக விட்டு விடக்கூடாது . அவைகள் என்னென்ன?
- இத்துகும் மினன்னார் நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுதல், சுவனத்தை வேண்டுதலான اللّٰهم اعتقنا من النّار وأدخلنا الجنّة ياربّ العالمين பிரார்தனையை அதிகமாக செய்தல்.
- கியாமுல்லைல். [قيام الليل]
- இஃதிகாப். [الاعتكاف]
- மகத்தான இரவு புனித “லைலதுல் கத்ர் இரவு. [لَيْلَةُ الْقَدْرِ]
- [ஸதகத்துல் ஃபித்ர்] நோன்புப் பெருநாள் தர்மம். [صدقة الفطر / زكاة الفطر]
- இன்ஷா அல்லாஹ் ஆறு நோன்பு நோற்றல் . (مَنْ صَامَ رَمَضانَ ثُمَّ أَتَبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كانَ كصِيَامِ الدَّهْرِ)
[கிடைத்தற்கரிய கடைசி பத்து நாட்கள் !]
✍🏻 அன்புள்ளவர்களே! ரமலானின் கடைசிப்பத்து நாட்கள் மறுமையின் நரக வேதனையை விட்டு காப்பாற்ற காக்கும் அல்லாஹ்வின் கருணையை வேண்டி இறைஞ்சி / கெஞ்சி கேட்டும் மீட்சி பெறும் மாட்சியுடைய நாட்களாகும்..
நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுதல், சுவனத்தை வேண்டுதலான اللّٰهم اعتقنا من النّار وأدخلنا الجنّة ياربّ العالمين பிரார்தனையை அதிகமாக செய்வோமாக!
[ரமலானின் கடைசிப்பத்தை உயிர்ப்பிப்போம்!]
✍🏻 அன்புள்ளவர்களே! இரவு வணக்கமென்பது நாம் அனைவரும் சுவைக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கான ஆசை எம்மனைவரிலும் இன்னும் இன்னும் வளர வேண்டும். நாம் எமது முன்னைய சமுதாயத் தவர்களோடு நன்மைகளால் போட்டி போடுவதற்கான மிகப் பெரும் சந்தர்ப்பம் இந்த இரவு வணக்கமாகும்.
இரவுத் தொழுகையின் போதுதான் அல்குர்ஆனை நீண்ட நேரம் கருத்தூன்றி ஓதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கின்றது.
எம் உடம்பு சோம்பல் பட்டாலும் கூட நாம் முனைப்போடு செய்யவேண்டிய ஒரு அமலாக இது காணப்படுகிறது.
- கல்வி கற்கும் மாணவனுக்கு கல்வியில் தேற இது ஒரு கட்டுச்சாதம்.
- கற்பிக்கும் ஆசான் கற்பித்தலில் தேற இது ஒரு கட்டுச்சாதம்.
- வாழ்வை ருசிக்க வேண்டுமென விரும்பும் இளைஞனுக்கான ஒரு கட்டுச் சாதம்.
- இல்லர வாழ்வில் சந்தோசம் விளைய வேண்டுமென விரும்பும் தம்பதியினருக்கான ஒரு கட்டுச்சாதம்.
- கியாமுல் லைல் வீட்டின் சிறந்த தலைவனாக இருக்க விரும்புபவருக்கான ஒரு கட்டுச்சாதம்.
- வீட்டின் சிறந்த தலைவியாக இருக்க வேண்டுமே என விரும்பும் பெண்ணுக்கான ஒரு கட்டுச் சாதம்.
- தனது தொழிலை திறன் பட செய்ய வேண்டும் என விரும்பும் தொழிலாளியின் கட்டுச் சாதம்.
- வியாபாரத்தில் இலாபம் கிடைக்க வேண்டுமென பாடுபடும் வியாபாரிக்கான கட்டுச் சாதம்.
- இஸ்லாமிய அழைப்பாளனுக்கான மிகப்பெரும் கட்டுச் சாதம். எனவேதான், நபி (ஸல்) அவர்களுக்கு இரவில் நின்று வணக்குவது பர்ளாக காணப்பட்டது
[இரவு வணக்கமும் இறை நெருக்கமும்:]
يٰۤاَيُّهَا الْمُزَّمِّلُۙ قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًنِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا ۙ اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا ؕ اِنَّا سَنُلْقِىْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ
"போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! இரவில் -சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் அல் குர்ஆனைத் தெளிவாக தஜ்வீத் முறைப்படி ஓதுவீராக. நிச்சயமாக, நாம் விரைவில் கனதியான ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்." (73:1-5)
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ.
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!' புகாரி 2024.
நாம் இரவு வணக்கத்தின் பயன்களை அறிந்து கொள்வது எமக்கு இன்னும் ஒரு உத்வேகத்தை தருவதாக இருக்கும் என்ற வகையில் அதன் சில பயன்களை இங்கு நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
நபி (ஸல்) ரமலானின் மற்ற நாட்களைக் காட்டிலும் இறுதிப்பத்து நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள். இந்த நாட்களில் இரவு முழுவதும் விழித்து வணக்கவழிபாடுகளை ஈடுபட்டார்கள். லைலத்துல் கத்ரை அடைவதற்காகவே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு முயற்சி செய்துள்ளார்கள்.
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ.
(ரமளானின் இறுதிப்) பத்து நாட்கள் வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள். இரவை உயிர்ப்பிப்பார்கள். தமது குடும்பத்தினரையும் (இறைவனை வணங்குவதற்காக) எழுப்பி விடுவார்கள். புகாரி 2024
நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமளானின் பிந்திய பத்து நாட்களில் வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முஸ்லிம்
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
‘நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’. (நபிமொழி) அபூஹுரைரா (ரலி), திர்மிதீ-683 (619)
[கியாமுல் லைல் மிகச் சிறந்த வணக்கமாகும்:]
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ ، فَقَالَ : يَا مُحَمَّدُ عِشْ مَا شِئْتَ فَإِنَّكَ مَيِّتٌ ، وَأَحْبِبْ مَنْ شِئْتَ فَإِنَّكَ مَفَارِقُهُ ، وَاعْمَلْ مَا شِئْتَ فَإِنَّكَ مَجْزِيٌّ بِهِ ، ثُمَّ قَالَ : يَا مُحَمَّدُ شَرَفُ الْمُؤْمِنِ قِيَامُهُ بِاللَّيْلِ ، وَعِزُّهُ اسْتِغْنَاؤُهُ عَنِ النَّاسِ " رواه الحاكم والبيهقي وحسنه المنذري والألباني
ஒரு முறை ரஸூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஜிப்ரீல்(அலை) அவர்கள் என்னிடம் வந்து: முஹம்மதே! நிர் விரும்பிய அளவு வாழுங்கள்... ஆனால் நீங்கள் மரணிப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களுடன் நேசம் பாராட்டுங்கள்... ஆனால், அவரை நீங்கள் பிரிந்துவிடுவீர்கள். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்... ஆனால் அதற்குரிய கூலியை நீங்கள் கொடுக்கப் பெறுவீர்கள். அறிந்துகொள்ளுங்கள். ஒரு முஃமினின் சிறப்பு அவனது இரவுத் தொழுகையில் காணப்படுகிறது. அவனது கண்ணியம் மக்களிடம் அவன் தேவையற்றிருப்பதில் உள்ளது.” என்றார்கள்.
عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( أَفْضَلُ الصَّلاَةِ بَعْدَ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ الصَّلاَةُ فِي جَوْفِ اللَّيْلِ وَأَفْضَلُ الصِّيَامِ بَعْدَ شَهْرِ رَمَضَانَ صِيَامُ شَهْرِ اللَّهِ الْمُحَرَّمِ " .رواه مسلم.
“பர்ளான தொழுகைக்குப் பின்னால் சிறப்பான தொழுகை இரவுத் தொழகையாகும்.” (முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: حُبِّب إليَّ النِّساءُ والطِّيبُ وجُعِلَتْ قُرَّةُ عَيني في الصَّلاةِ எனக்கு மனைவிமார்கள் மிக பிரியமானவர்கள், திருமணம் நிக்காஹ் எனக்கு மிக விருப்பமானது. பெண்கள் எனக்கு விருப்பமாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய கண் குளிர்ச்சியோ, தொழுகையிலே இருக்கிறது என்று சொன்னார்கள். முஸ்னது அஹ்மது எண்:12293, சுனன் குப்ரா- நசாயீ எண் :8836
عن صهيب بن النعمان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( صَلَاةُ الرَّجُلِ تَطَوُّعًا حَيْثُ لَا يَرَاهُ النَّاسُ تَعْدِلُ صَلَاتَهُ عَلَى أَعْيُنِ النَّاسِ خَمْسًا وَعِشْرِينَ ) رواه أبو يعلى بسند حسن.
“மக்கள் காணாத நேரத்தில் ஒருவன் தொழுகின்ற சுன்னத்தான தொழுகை மக்கள் காணும் நேரத்தில் தொழும் 25 தொழுகைகளுக்குச் சமனாகும்.”
[கியாமுல் லைல் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும்:]
قال النبي صلى الله عليه وسلم لمعاذ رضي الله عنه: ( أَلَا أَدُلُّك عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟ الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ، وَصَلَاةُ الرَّجُلِ فِي جَوْفِ اللَّيْلِ، ثُمَّ تَلَا: { تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفاً وَطَمَعاً وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ . فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاء بِمَا كَانُوا يَعْمَلُونَ } السجدة: 16-17 ) رواه الترمذي بسند صحيح.
நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களிடம்: “உமக்கு நான் நன்மையின் வாயில்களைக் காட்டித் தரட்டுமா?” எனக் கேட்டார்கள். பின்னர் “நோன்பு என்பது கேடயமாகும். நீர் நெருப்பை அணைப்பது போன்று ஸதகா தவறுகளை அழித்து விடும். இரவின் நடுநிசியில் ஒருவன் எழுந்து தொழுவதும் அவ்வாறே...” என்று கூறிவிட்டு “அவர்களுடைய விலா எலும்புகளை படுக்கையிலிருந்து விலக்கி அல்லாஹ்விடம் பயத்துடனும் எதிர்பார்ப்புடனும் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து செலவும் செய்வார்கள். அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களுக்கான கூலியாக அல்லாஹ் அவர்களுக்காக மறைத்து வைத்துள்ள கண்குளிர்ச்சியை யாருமே அறியமாட்டார்கள்.” என்ற வசனத்தை ஓதிக்காண்பித்தார்கள்.
[இரவில் நின்று வணங்குபவனுடன் அல்லாஹ் நெருக்கமாக இருப்பான்:]
عن عمرو بن عبسة رضي الله عنه أنه سمع النبي صلى الله عليه وسلم يقول: ( وَقَالَ صلى الله عليه وسلم: أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ الْعَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ فَإِنِ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ) رواه الترمذي بسند صحيح.
“இரவின் கடைசிப் பகுதியில் இறைவன் அடியானுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறான். அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைவுகூர்பவர்களுள் ஒருராக உம்மால் இருக்க முடியுமாயின் இருந்துகொள்.”
[கீழ்வானத்துக்கு இறங்கி வரும் அருளாளனைச் சந்திக்கும் வாய்ப்பு:]
عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: (يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الْآخِرُ يَقُولُ: مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ؟ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ؟ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ؟ ") متفق عليه.
ரஸூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அருளாளனும் உயர்ந்தவனுமான எங்கள் ரப்பு ஒவ்வோர் நாள் இரவிலும் அதன் மூன்றாம் பாகத்தில் கீழ் வானத்துக்கு இறங்கி வருகிறான். அந்த நேரத்தில் அவன் கூறுகிறான்: என்னிடம் பிரார்த்திப்பவர்கள் யாரும் இருக்கிறார்களா...? நான் அவர்களுக்குப் பதிலளிக்க...! என்னிடம் கேட்பவர்கள் யாரும் இருக்கிறார்களா...? நான் அவர்களுக்குக் கொடுப்பதற்காக...! என்னிடம் பாவமன்னிப்புக் கோருப்பவர்கள் யாரும் இருக்கிறார்களா...? நான் அவர்களுக்கு மன்னிப்பளிப்பதற்காக...?” (புகாரி)
[சுவனத்தின் விஷேட அறைகளுக்குச் சொந்தக்காரர்களாகலாம்:]
عن علي رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( إِنَّ فِي الْجَنَّةِ لَغُرَفًا يُرَى ظُهُورُهَا مِنْ بُطُونِهَا وَبُطُونُهَا مِنْ ظُهُورِهَا " . فَقَامَ إِلَيْهِ أَعْرَابِيٌّ فَقَالَ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ " هِيَ لِمَنْ أَطَابَ الْكَلاَمَ وَأَطْعَمَ الطَّعَامَ وَأَدَامَ الصِّيَامَ وَصَلَّى لِلَّهِ بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ) رواه الترمذي بسند حسن
சுவனத்திலே விஷேட அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் வெளிப்பகுதியை உள்ளிருந்து பார்க்கலாம். உட்பகுதியை வெளியிருந்து பார்க்கலாம்” என நபியவர்கள் கூறியதற்கு ஒரு நாட்டுப் புற அரபி எழுந்து, “அது யாருக்குரியது...? யா ரஸூலல்லாஹ்!” எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் “யார் நல்ல முறையில் தமது வார்த்தைகளை அமைத்துக் கொள்கறாரோ...! யார் உணவளிக்கிறாரோ...! யார் தொடர்ந்தேர்ச்சியாக நோன்பிருக்கிராரோ...! மேலும் மக்கள் உறங்கும் நேரத்தில் இரவில் எழுந்து நின்று வணங்குகிறாரோ...! அவருக்குத் தான்” எனப் பதிலளித்தார்கள்.
[அல்லாஹ்வின் அன்பைப் பெறும் வாய்ப்பு:]
عن أبي الدرداء رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( ثَلاثَهٌ يُحِبُّهُمُ اللَّهُ عَزَّ وَجَلَّ، يَضْحَكُ اِلَيْهِمْ وَيَسْتَبْشِرُ بِهِمْ، الَّذِي اِذَا انْكَشَفَتْ فِئَهٌ، قَاتَلَ وَرَاءَهَا بِنَفْسِهِ لِلَّهِ عَزَّ وَجَلَّ، فَاِمَّا اَنْ يُقْتَلَ، وَاِمَّا اَنْ يَنْصُرَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ وَيَكْفِيهِ، فَيَقُولُ: انْظُرُوا اِلَي عَبْدِي كَيْفَ صَبَّرَ لِي نَفْسَهُ، وَالَّذِي لَهُ امْرَاَهٌ حَسْنَاءُ وَفِرَاشٌ لَيِّنٌ حَسَنٌ، فَيَقُومُ مِنَ اللَّيْلِ فَيَذَرُ شَهْوَتَهُ، فَيَذْكُرُنِي وَيُنَاجِينِي وَلَوْ شَاءَ لَرَقَدَ، وَالَّذِي يَكُونُ فِي سَفَرٍ وَكَانَ مَعَهُ رَكْبٌ، فَسَهَرُوا وَنَصَبُوا ثُمَّ هَجَعُوا، فَقَامَ فِي السَّحَرِ فِي سَرَّاءٍ اَوْ ضَرَّاءٍ) رواه الطبراني بسند حسن
“மூன்று பேர் இருக்கிறார்கள்: அவர்களை அல்லாஹ் விரும்புகிறான். அவர்களைப் பார்த்து அல்லாஹ் சிரிக்கிறான். அவர்களைப் பற்றித் தன்னுடன் உள்ளவர்களுக்குச் சிறப்பித்துக் கூறுவான். அவர்களில் ஒருவர்; அவருக்கு ஓர் அழகிய மனைவி இருப்பாள். வசதியான படுக்கை இருக்கும்... ஆனால் அவர் இரவில் எழுந்து நின்று வணங்குவார். அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :அவன் தனது இச்சையை விட்டு விட்டு என்னை நினைவுபடுத்துகிறான். அவன் விரும்பியிருந்தால் உறங்கியிருக்கலாம்.”
[மலாஇக்காக்களிடம் அல்லாஹ் பெருமை பாராட்டும் நிலை]
عن ابن مسعود رضي الله عنه: عن النبي صلى الله عليه وسلم قال: (عَجِبَ رَبُّنَا مِنْ رَجُلَيْنِ: رَجُلٍ ثَارَ عَنْ وِطَائِهِ وَلِحَافِهِ مِنْ بَيْنَ حِبِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ ، فَيَقُولُ اللَّهُ جَلَّ وَعَلَا لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي، ثَارَ عَنْ فِرَاشِهِ وَوِطَائِهِ مِنْ بَيْنَ حِبِّهِ وَأَهْلِهِ إِلَى صَلَاتِهِ رَغْبَةً فِيمَا عِنْدِي، وَشَفَقَةً مِمَّا عِنْدِي، وَرَجُلٍ غَزَا فِي سَبِيلِ اللَّهِ، فَانْهَزَمَ أَصْحَابُهُ، وَعَلِمَ مَا عَلَيْهِ فِي الِانْهِزَامِ ، وَمَا لَهُ فِي الرُّجُوعِ، فَرَجَعَ حَتَّى هُرِيقَ دَمُهُ، فَيَقُولُ اللَّهُ لِمَلَائِكَتِهِ: انْظُرُوا إِلَى عَبْدِي، رَجَعَ رَجَاءً فِيمَا عِنْدِي، وَشَفَقًا مِمَّا عِنْدِي حَتَّى هُرِيقَ دَمُهُ .)) رواه أبويعلي بسند حسن.
இரு மனிதர்களைப் பற்றி எங்களது றப்பு ஆச்சரியப்படுகிறான். அதில் ஒருவர் தனது அன்புக்குரியவர்களையும் மனைவியையும் விட்டு விட்டு, தனது போர்வையை உதரித் தள்ளிவிட்டு அல்லாஹ்வை தொழுவதற்காக இரவில் எழுந்திருப்பவர்.அவரைப் பற்றி அல்லாஹ் மலக்குமார்களிடம் :எனது அடியானைப் பாருங்கள் அவன் எனன்னிடம் இருக்கும் அருளில் விருப்பம் கொண்டும் எனது தண்டனைக்கு அஞ்சியும் தனது படுக்கை, போர்வை என தனது விருப்புக்குரியவை , மனைவி என அனைத்தையும் ஒதுக்கிவிட்டு தொழுகைக்காக எழுந்திருக்கிறான். எனக் கூறுகிறான்.
உள்ளத்தில் குர்ஆனை பதியவைக்கும்
عن ابن عمر رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( وَإِذَا قَامَ صَاحِبُ الْقُرْآنِ فَقَرَأَهُ بِاللَّيْلِ وَالنَّهَارِ ذَكَرَهُ وَإِذَا لَمْ يَقُمْ بِهِ نَسِيَهُ ") رواه مسلم.
”அல்குர்னை சுமந்தவர் இரவில் எழுந்து நின்று வணங்கி அதனை ஓதுவாராயின் பகலில் அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம். அவர் இரவில் எழுந்து நின்று வணங்காதுவிடின் அவர் அதனை மறந்து விடுவார்.”
[கியாமுல் லைலின் பயன்கள்:]
01. அல்லாஹ்வின் திருப்தி கிட்டும்.
فَاصْبِرْ عَلٰى مَا يَقُوْلُوْنَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ قَبْلَ طُلُوْعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوْبِهَا ۚ وَمِنْ اٰنَآىٴِ الَّيْلِ فَسَبِّحْ وَاَطْرَافَ النَّهَارِ لَعَلَّكَ تَرْضٰى
"ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக. இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக. இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக இதனால் (நன்மை களடைந்து) நீர் திருப்தி பெறலாம்." (20:130)
وَعَنْ عَبْدِ اَللَّهِ بْنِ سَلَّامٍ - رضى الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ - صلى الله عليه وسلم -{ يَا أَيُّهَا اَلنَّاسُ! أَفْشُوا اَلسَّلَام, وَصِلُوا اَلْأَرْحَامَ, وَأَطْعِمُوا اَلطَّعَامَ, وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ, تَدْخُلُوا اَلْجَنَّةَ بِسَلَامٍ } أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ وَصَحَّحَهُ
ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போதுதொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள். திர்மிதீ 2409
قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ اللَّهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ "
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!” என்று கூறினார்கள். புகாரி 1152
[பொறாமைப் படத்தக்க கியாமுல் லைல்:-]
، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ حَسَدَ إِلاَّ عَلَى اثْنَتَيْنِ، رَجُلٌ آتَاهُ اللَّهُ الْكِتَابَ وَقَامَ بِهِ آنَاءَ اللَّيْلِ، وَرَجُلٌ أَعْطَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يَتَصَدَّقُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَارِ ""
இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.
1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவுநேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.
2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார். புகாரி 5025
இப்படிப்பட்ட சிறப்பைத் தரும் இந்த நன்மையை ரமளான் தந்த பரிசாக, பாடமாக எடுத்துக்கொண்டு தொடர்வோமாக! முனைப்புடன் உடனே செயல்படுத்துவோமாக!
02. இரவு வணக்கம் அல்லாஹ்வைப் பற்றிய தெளிவைத் தரும்.
اِنَّ نَاشِئَةَ لَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا ؕ
"நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்தக் கூடியது." (73:6)
இரவிலே அல்லாஹ்விற்காக சுஜூதிலே இருங்கள். இரவின் நீண்ட பகுதி அல்லாஹ்வைத் தொழுது கொண்டு இருங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல் குர்ஆன் -76:26)
03. நல்லடியார்களின் பழக்கமாகும்.
عن أبي أمامة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: (عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأْبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ وَهُوَ قُرْبَةٌ لَكُمْ إِلَى رَبِّكُمْ وَمَكْفَرَةٌ لِلسَّيِّئَاتِ وَمَنْهَاةٌ عَنِ الْإِثْمِ) رواه الترمذي بسند حسن.
“நீங்கள் இரவிலே நின்று வணங்குங்கள். அது ஸாலிஹீன்களது வழமையாக இருந்தது. அது உங்களது இறைவனை நெருங்கும் செயலாகும். குற்றங்களுக்கு பரிகாரமாகும்.பாவங்களை தடுத்து விடக் கூடியதாகும்.”
04. உள்ளத்திலிருந்து பொடுபோக்குத் தனத்தை இல்லாமல் செய்யும்:
عن عبدالله بن عمرو رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( مَنْ قَامَ بِعَشْرِ آيَاتٍ لَمْ يُكْتَبْ مِنَ الْغَافِلِينَ وَمَنْ قَامَ بِمِائَةِ آيَةٍ كُتِبَ مِنَ الْقَانِتِينَ وَمَنْ قَامَ بِأَلْفِ آيَةٍ كُتِبَ من المقنطرين») رواه أبو داود بسند صحيح
“யார் இரவில் பத்து வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் பொடுபோக்கானவர்களில் சேர்க்கப்பட மாட்டார். யார் நூறு வசனங்களை ஓதித் தொழுகின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வோருடன் சேர்க்கப்படுப்படுவார். யார் ஆயிரம் வசனங்களை ஓதித் தொகின்றாரோ அவர் பெரும் புதையல்களைப் பெற்றவர்கள் வரிசையில் சேர்க்கப்படுவார்.” (ஹதீஸ்)
05. கியாமுல் லைல் அல்லாஹ்வுடனான உறவையும் நெருக்கத்தையும் தரும்.
இமாம் ஹஸனுல் பஸ்ரி [ரஹ்] அவர்கள் கூறுவார்: "இரவின் நடுப்பகுதியில் எழுந்து, தொழுவதை விட அல்லாஹ்வை ஒரு அடியான் நெருங்குவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக வேறொன்றையும் நான் அறியவில்லை."
06. கியாமுல் லைல் பாவத்தை விட்டும் தூரமாக்கும், பாவ மன்னிப்பைக்கொண்டு தரும், உடம் பிலுள்ள நோயை அகற்றும்.
"இரவு நேர வணக்கம் அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தை தருவதோடு, பாவங்களை விட்டும் தடுக்கும், பாவமன்னிப்பைத் தரும், உடம்பிலுள்ள நோயையும் நீக்கிவிடும்." (ஹதீஸ்)
07. கியாமுல் லைல் தொழுபவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் ஒளி வழங்குவான்.
وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ
"அந்நாளில் சில முகங்கள் ஒளியினால் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80: 38,39) இந்தப் பிரகாசம் கியாமுல் லைலின் காரணமாகவே ஏற்படுகிறது என இப்னு அப்பாஸ் (றழி) இவ்வசனத்திற்கு விளக்க மளிக்கிறார்.
"இரவு நேரத்திலே நின்று வணங்கும் மனிதர்களின் முகங்கள் மிக அழகாக இருப்பதற்கான காரணமென்ன?" என இமாம் ஹஸனுல் பஸ்ரியிடம் வினவப்பட்ட போது, அவர்: ‘ஏனெனில், அவர்கள் தம்மை இறைவனுக்காக அர்ப்பணித்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு பிரகாசத்தை வழங்கினான்" என பதிலளித்தார்.
08. துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.
நாம் சில மனிதர்களிடம் எமக்காக துஆக்கேட்குமாறு வேண்டியிருப்போம். அவர்களும் எமக்காக அல்லாஹ்விடம் துஆக் கேட்டிருப்பார்கள். அது எமது வாழ்விலும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கும். நாம் அதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்திருக்க மாட்டோம். அவர்கள் இரவுநேர வணக்கவாளிகளாக இருப்பதே அதன் காரணமாகும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ، إِلاَّ أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ "".
"யார் இரவு நேரத்தில் எழுந்து, ‘லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்ஹம்து லில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’ எனக் கூறி, யா அல்லாஹ் எனது பாவங்களை மன்னித்தருள்வாயாக என பிராத்திக்கிறாரோ அல்லது துஆக் கேட்கிறாரோ அவரின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்." (புஹாரி 3293)
09. கியாமுல் லைல் ரஹ்மத் தைப் பெற்றுத்தரும்.
اَمَّنْ هُوَ قَانِتٌ اٰنَآءَ الَّيْلِ سَاجِدًا وَّقَآٮِٕمًا يَّحْذَرُ الْاٰخِرَةَ وَيَرْجُوْا رَحْمَةَ رَبِّهٖؕ قُلْ هَلْ يَسْتَوِى الَّذِيْنَ يَعْلَمُوْنَ وَالَّذِيْنَ لَا يَعْلَمُوْنَؕ اِنَّمَا يَتَذَكَّرُ اُولُوا الْاَلْبَابِ
"எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (39:9)
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: رَحِمَ اللهُ رَجُلاً قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّي ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّي فَإِنْ أَبَي نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ. رواه النسائي
"யார் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது மனைவியையும் எழும்பி தொழச்செய்து, அவள் எழும்ப மறுத்தால் அவளின் முகத்தில் நீரைத் தெளிப்பவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும். அதுபோல ஒரு பெண் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது கணவனையும் எழும்பி தொழச் செய்து, அவன் எழும்ப மறுத்தால் முகத்தில் நீரைத் தெளிப்பவளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்." (ஹதீஸ்)
10. சுவனத்தில் உயர் அந்தஸ்து களைத் தரும்
மற்ற மனிதர்கள் தூங்கும் நேரத்தில் எமது படுக்கையிலிருந்து எழுந்து வணக்கம் செய்வது என்பது மிகப் பெறுமதியான ஒன்றாகும். அதற்கு அல்லாஹ் அதிக கூலிகளைத் தருவான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَ ۖ عَسٰۤى اَنْ يَّبْعَـثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا
இன்னும் இரவில் (ஒரு சிறு) பகுதியில் உமக்கு உபரியான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் பாக்கியத்தினால்) உம்முடைய இறைவன், “மகாமம் மஹ்முதா” என்றும் (புகழ் பெற்ற) தலத்தில் உம்மை எழுப்பப் போதும். 17:79.
நபி (ஸல்) அவர்கள் இதனைப் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்: "சுவனத்திலே சில அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் உட்புறமிருந்து பார்த்தால் வெளிப்புறம் தென்படும். வெளிப்புற மிருந்து பார்த்தால் உட்புறம் வெளிப்படும். யார் உணவளித்து, ஸலாத்தைப் பரப்பி, மனிதர்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அவ் அறைகளைத் தயார்படுத்தி வைத்திருக்கிறான்." (ஹதீஸ்)
11. எதிரிகளோடு வெற்றிகிடைப்பதற்கான வழி கியாமுல் லைல்.
வரலாற்றில் முஸ்லிகளுக்கு கிடைத்த வெற்றிகளை எடுத்து நோக்கினால் கூட அவை கியாமுல் லைலுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
எனவே, சகோதர சகோதரிகளே இவ்வாறான பல பலன்களைச் சுமந்திருக்கும் கியாமுல் லைலை பேணித்தொழுபவர்களாக அல்லாஹ் எம்மையும் உங்களையும் மாற்றியருள்வானாக. ஆமீன்.
[மன அமைதி தரும் இஃதிகாப்:]
✍🏻 அன்புள்ளவர்களே! இஃதிகாப் [الاعتكاف] என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்’ என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.
ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண்ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத் தான் ரமளானின் கடைசிப் பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள்
[இஃதிகாஃபின் நன்மைகள்:]
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்வின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலுமில்லாத (கியாமத்) நாளில் தனது ரஹ்மத் என்னும் அர்ஷின் நிழலில் ஏழு வகையான மனிதர்களுக்கு இடம் அளிப்பான். அவர்களில் 3- வது நபர் وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْـمَسَاجِدِ பள்ளியோடு நெருங்கிய தொடர்புடைய மனிதர்:
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ. وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»
روى الديلمي عن عائشة أن النبي صلى الله عليه وسلم قال : (مَنِ اعتكفَ إيمانًا واحتسابًا غُفِرَ لَهُ ما تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ)
ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள்: மன உறுதியோடும், நன்மையை எதிர்பர்த்தும் இஃதிகாஃப் இருப்பவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தைலமீ-21356)
روى البيهقي وضعفه عن الحسين بن علي رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم : ( منِ اعتكفَ عشرًا في رمضانَ عُدِلْنَ بحجَّتَينِ وعُمرَتينِ )
ஹுஸைன் பின் அலி (ரளி) அறிவிக்கிறார்கள்: ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தவருக்கு இரண்டு ஹஜ்ஜும் இரண்டு உம்ராவும் (செய்த நன்மை) கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஷுஃபுல் ஈமான்-பைஹகீ-3680)
وأما السنة فأحاديث كثيرة منها حديث عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ( كَانَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ ) رواه البخاري (2026) ومسلم (1172) .
நபி (ஸல்) அவர்கள் இறக்கும்வரை ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்து வந்தார்கள்; அவர்களுக்குப் பின் அவர்களின் துணைவியர் இஃதிகாஃப் இருந்தனர்.
ரமலான் மாதத்தின் கடைசி பத்தில் இருப்பது சுன்னத் முஅக்கதா கிஃபாயாவாகும். ஊரில் ஒருவராவது அந்த சுன்னத்தை நிறைவேற்ற வேண்டும்.
கடைசிப் பத்தில் மூன்று நாள், அல்லது ஒரு நாள் இஃதிகாஃப் இருப்பது நஃபிலான இஃதிகாஃபில் சேருமே தவிர சுன்னத் முஅக்கதாவை நிறைவேற்றியதாக ஆகாது.
[மகத்தான இரவு புனித “லைலதுல் கத்ர் :]
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக, நாம் அதை (-குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு எதுவென உமக்கு அறிவித்தது எது? மேலும் கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக மேலானதாகும். அதில் வானவர்களும் ரூஹும் (-ஜிப்ரீலும்) தம் இறைவனின் அனுமதியுடன் (அவனுடைய) கட்டளை ஒவ்வொன்றையும் செயல்படுத்துவதற்காக இறங்குகின்றனர். (அந்த இரவு முழுக்க) சாந்தி (பொழிந்த வண்ணமிருக்கும்); அது விடியற்காலை உதயமாகும் வரை நீடிக்கும்! (97:1:5)
عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ، وَمَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ ". تَابَعَهُ سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ عَنِ الزُّهْرِيِّ
'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!' புகாரி 2014
'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!' புகாரி 2017
حَدَّثَنَا أَنَسٌ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيُخْبِرَنَا بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى رَجُلاَنِ مِنَ الْمُسْلِمِينَ، فَقَالَ " خَرَجْتُ لأُخْبِرَكُمْ بِلَيْلَةِ الْقَدْرِ، فَتَلاَحَى فُلاَنٌ وَفُلاَنٌ، فَرُفِعَتْ، وَعَسَى أَنْ يَكُونَ خَيْرًا لَكُمْ، فَالْتَمِسُوهَا فِي التَّاسِعَةِ وَالسَّابِعَةِ وَالْخَامِسَةِ ".
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். புகாரி 2023.
عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ، وَأَحْيَا لَيْلَهُ، وَأَيْقَظَ أَهْلَهُ.
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!' புகாரி 2024.
லைலதுல் கத்ருடைய இரவிலும் மற்ற நாட்களிலும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதுவதும் சுன்னத்தாகும்.
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»
யா அல்லாஹ் நிச்சயமாக நீ மன்னிப்பவன்! நீ மன்னிப்பை விரும்புகின்றாய்; ஆகையால் என்னை மன்னித்தருள்வாயாக!
[நோன்புப் பெருநாள் தர்மம்:]
✍🏻 அன்புள்ளவர்களே! ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.
1503 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். புகாரி 1503
ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளும் அளவு போல் நான்கு மடங்காகும். நிறுத்தல் அளவையில் சுமார் இரண்டரைக் கிலோ அரிசியாகும். அல்லது அதற்கான கிரயமாகும்.
நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசி அல்லது அதற்கான கிரயம் வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.
[ஃபித்ராவின் நோக்கம்:]
✍🏻 அன்புள்ளவர்களே! இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது.
1609 – حدَّثنا محمودُ بنُ خالدِ الدِّمشقيُّ وعبدُ الله بن عبدِ الرحمن السمرقندي، قالا: حدَّثنا مروانُ – قال عبدُ الله: قال: حدَّثنا أبو يزيد الخولاني، وكان شيخَ صِدْقٍ، وكان ابنُ وهب يروي عنه – حدَّثنا سَيارُ بنُ عبد الرحمن – قال محمود: الصَّدَفي – عن عِكرمَة عن ابن عباسٍ قال: فرض رسولُ الله – صلَّى الله عليه وسلم – زكاةَ الفِطْر طُهْرةً للصَائم مِن اللغو والرَّفثِ وطُعْمةً للمساكينَ، مَنْ أدَّاها قبلَ الصَّلاة، فهي زكاةٌ مقبولةٌ، ومن أدَّاها بعدَ الصَّلاة، فهي صَدَقةٌ من الصَّدقات
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள். தொழுகைக்கு முன் ஒருவர் அதை நிறைவேற்றினால் அது ஏற்கத்தக்க ஜகாத் ஆக அமையும். தொழுகைக்குப் பின் ஒருவர் அதை நிறைவேற்றினால் அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மமாக அமையும் என்றும் கூறினார்கள். அபூதாவூத் 1609
[கொடுக்கும் நேரம்:]
1503 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503, 1509
[ஆறு நோன்பு நோற்க தயாராகுவோம்:-…]
✍🏻 அன்புள்ளவர்களே! ஆறு நோன்பு நோற்க தயாராகுவோமாக:-……
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ رواه مسلم
ரமளான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்ற வரைப் போன்றவராவார். முஸ்லிம் (2159)
“ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். தாரிமி 1690
நாம் நோற்கும் ஒவ்வொரு நோன்புக்கும் 10 நன்மைகள் என்ற அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மைகள் என்பதுடன், தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வாலின் இந்த ஆறு நோன்புகளுக்கு (6×10 =) 60 நோன்புகள், ஆக (300+60 =) 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது. ஆறு நோன்பின் தத்துவம் இது தான்!
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை. ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம நபித்தோழர்களின் சரித்திரங்கள் நமக்கு சான்று பகர்கின்றன. எனினும் இந்த ஷவ்வால் நோன்பை விடுபடாமல் நோற்றுக்கொள்வோமாக.
✍🏻✍🏻நன்றியுரை:
تقبل الله منا ومنكم صالح الأعمال نسأل الله أن ييسر لنا أمورنا ويشرح صدورنا
எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ஜுமுஆ பயான் குறிப்புரையை அங்கிகரித்து, இதன் மூலம் எல்லோரும் அறிவுரை பெற்று ஈருலகிலும் நற்பயன் அடைய வல்லான் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!!! ஆமீன்.. அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இக்கட்டுரையின் தலைமையாசிரியர் & இக்குழு கண்காணிப்பாளர்:
உங்களின் துஆக்களை பெற பேராசைப்படும்:
உஸ்தாத் எஸ்.எம்.ஹெளஸீ மவ்லானா. வாசுதேவநல்லூரி. செல் 9487007358. நான் ஒரு விவசாயி..
உதவியாசிரியர்:
உஸ்தாத் மெளலானா ஹாபிழ் களந்தை B. அபு அஜ்மல் புகாரி யூசுபி. செல் 8754089943.
இக்கட்டுரை வெளி வர தகவல் தந்த அனைவருக்கும் நம் இணையத்தில் வந்து பயனும் பலனும் அடைந்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹூ கைரன்.
அல்லாஹ் நம் அனைவரையும் ஈருலகிலும் பொருந்திக் கொண்டும் & நம் அனைவரின் பாவங்களையும் நன்மைகளாக்கியும் & ரஹ்மத்தான அருளையும் அர்ஷூடைய நிழலையும் நிரப்பமாக தந்தருள்வானாக!”” ஆமீன்.
உங்களுக்கு பிடித்த ஜுமுஆ குறிப்புரையினை PDF-ல் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை ஒரு க்ளிக் செய்யுங்க..
நமது ஜுமுஆ பயான் தகவலை பெற தங்களின் WATTS APP நம்பரிலிருந்து j-bayan என டைப்செய்து. 9942407358 என்ற WATTS APP என்னுக்குஒரு message அனுப்புங்கள்.
✍🏻✍🏻 எனக்கு இந்த ஜுமுஆ பயான் குறிப்புரை எழுத ஊக்கமும், உறுதுணையும், ஒத்துழைப்பும் தந்த ஜுமுஆ முபாரக் தகவல் மேடை உஸ்தாதுகளுக்கும் & திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டார ஜமாத்துல் உலமா சபை உலமா நண்பர்களுக்கும். ஜஸாகல்லாஹ். வஸ்ஸலாம். ✍🏻✍🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக